பிக்பாஸ் அல்டிமேட்: தாமரைக்காக வருண் செய்த சூப்பர் செயல்.. வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வருண் தன்னோடு இருந்த சக போட்டியாளரான தாமரைச்செல்விக்கு செய்த செயல் ரசிகர்களின் மத்தியில் நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருண் செய்த செயலை தற்போது அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரைச்செல்வி அனைவரிடமும் கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

ஐந்தாவது சீசன் போட்டியாளர்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் வருண். இவர் ஒரு பிரபலமான திரை குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தான் தன்னுடைய சுய அடையாளத்தை உலகிற்கு காட்ட வேண்டும் என்பதற்காக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக அவரே கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவரைப்போல ஒரு போட்டியாளராக அறிமுகமான தாமரைச்செல்வி கிராமத்திலிருந்து வந்து அனைவருடைய மனதிலும் தனி இடத்தை பிடித்து விட்டார்.

வியக்க வைத்த வளர்ச்சி
தாமரை செல்வி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது ஆரம்பத்தில் யாரென்றே தெரியாமல் இருந்த இவர் ஒரு சில நாட்களிலேயே தன்னுடைய வளர்ச்சியை அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு வளர்ச்சி அடைய தொடங்கிவிட்டார். இவரெல்லாம் இங்கே வந்து என்ன விளையாடப் போகிறார் என்று ஆரம்பத்தில் நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு கூட, இவருடைய வேற லெவல் விளையாட்டு அல்லு கொடுத்திருக்கிறது. வெளி உலக அனுபவம் உள்ள போட்டியாளர்களையும் இவர் பின்னுக்குத்தள்ளி பாப்புலராகி விட்டார். ஆரம்பத்தில் விளையாட்டை பற்றி தெரியாமல் இருந்த இவருக்கு போட்டியாளர்கள் தான் விளையாட்டைப் பற்றி தெளிவாக விளக்கம் கொடுத்து வந்தனர்.

தாமரைச்செல்வி கூறிய வார்த்தை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல பேர் இருந்தாலும் தாமரைச்செல்வி ஆரம்பம் முதலே வருண் மற்றும் அக்ஷராவிடம் தான் நெருக்கமாக பழகி வந்தார். அதனால்தான் இருவரும் ஒரே நேரத்தில் வெளியேறியதும் இவர் தனக்கு என்று யாரும் இங்கே இல்லை, நான் தனியாக இருக்கிறேன் என்று ஃபீல் பண்ணி வந்தார். அந்த அளவிற்கு இவர்களுடைய பாசம் இருந்தாலும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகும் இவர்களுடைய பாசம் நீடித்திருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஒரு சமையல் டாஸ்க் நடைபெற்றது. அந்த டாஸ்கில் தாமரையின் அணி ஜெயித்து விட்டது. அவருக்கு அடுப்பு வழங்கப்பட்டது அப்போது மிகவும் சந்தோசமாக என் வீட்டில் அடுப்பு இல்லை என்று தாமரைச்செல்வி கூறியிருந்தது அனைவருக்கும் தெரியும்.

வருணின் வஞ்சனை இல்லாத அன்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு வருண், தாமரை செல்விக்கு கருப்பு கலர் டபுள் டோர் பிரிட்ஜ் வாங்கி கொடுத்துள்ளாராம். அதுமட்டுமல்லாமல் ஓவன் போன்ற வீட்டு உபயோக பொருட்களையும் வாங்கிக் கொடுத்துள்ளாராம். இதை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் நாளில் தாமரைச்செல்வி அனைவரிடமும் கூறி பெருமை பட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் வருணுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சில பேர் ஒன்றாக இருக்கும்போது மட்டும் பாசத்தை கொட்டுவார்கள். ஆனால் விலகி சென்று விட்டால் அதற்குப் பிறகு கண்டுக்கவே மாட்டார்கள். ஆனால் வருண் அப்படி இல்லை என்று தற்போது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications