எப்படி இருந்த நான் இப்படி மாறி விட்டேன்... சர்வைவரின் மாற்றத்தில் உமாபதி
சென்னை: சர்வைவர் நிகழ்ச்சிக்கு பிறகு உமாபதியின் மாற்றத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போய் இருக்கின்றனர்.
எப்படி இருந்த நான் இப்படி மாறி விட்டேன் என்று சொல்வது உமாபதிக்கு தான் பொருத்தமாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தன்னுடைய ரசிகர்களுக்கு வித்தியாசமான உமாபதி நன்றி கூறியுள்ளார்.

வேற லெவல் மாற்றம் தான்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சர்வைவர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட உமாபதியை நிகழ்ச்சி முடிந்தபிறகு பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். அதுவும் அவர் தன்னுடைய மாற்றத்தை பார்த்து அவரே அதிசயத்து போனாராம். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். சர்வைவர் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு நல்ல இடத்தை பிடித்துக் கொண்ட உமாபதி இதுவரை நடித்த படங்களை விடவும் தற்போது பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டார்.

ரசிகர்களுக்கு அட்வைஸ்
சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி தான் ஜெயித்து இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலர் மனமுருகி அவருக்காக போஸ்டர்களை அனுப்பிக் கொண்டிருப்பதை பார்த்து அந்த ரசிகர்களுக்கு நன்றி கூறும் விதமாக உமாபதி போஸ்ட் போட்டுள்ளார். அதை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். விஜயலட்சுமியை திட்டிக் கொண்டிருப்பதை பார்த்து தனக்கே உரிய கலகலப்பான கேரக்டரோடு ரசிகர்களுக்கு பதில் அளித்துள்ளார்.

ரசிகர்களுக்கே உறுதிமொழியா??
உமாபதி சர்வைவர் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு 80 கிலோவில் இருந்தாரம். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் அறுபத்தி ஆறு கிலோவுக்கு குறைந்து உள்ளாராம். இது முற்றிலும் ஆச்சரியமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்லாமல் எப்போதுமே என்னுடைய புன்னகை மாற்றப்படாது. நான் எப்போதும் சிரித்துக் கொண்டுதான் இருப்பேன் என்று கூறியுள்ளார். தன் மீது நம்பிக்கை வைத்திருந்த ரசிகர்களின் நம்பிக்கையை தான் இழந்துவிட்டதால் வருந்துகிறேன் என்று கையெடுத்து கும்பிட்டு எனக்கு தெரியும், ஆனால் நான் நிச்சயமாக மிக விரைவில் ரசிகர்கள் பெருமை செய்யும் வகையில் எதிர்கால திட்டங்களுடன் திரைப்படங்களின் மூலம் உங்களை முழுவதும் மகிழ்விப்பதாக உறுதி அளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

பாசம் பெருசுதான்
தனக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான கதைகள் மற்றும் போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளது அதையெல்லாம் நான் பார்த்துக் கொண்டு உள்ளேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் ஊக்கம், அன்பு மற்றும் அக்கறைக்கு மீண்டும் ஒருமுறை மிக்க நன்றி. என்னை நம்பியதற்கு நன்றி!! சர்வைவர் நிகழ்ச்சியில் இந்த அழகான சாகசப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த உங்கள் அனைவருக்கும் நான் என்றென்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன்.. உண்மையான சாம்பியன்கள் எதையும் மாற்றவும், எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ளவும் முடியும். உயிர் பிழைத்தவர்கள் என்று நம்மை அழைப்பதில் பெருமை கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
Recommended Video

நன்றி மழைதான் போங்க! !!
ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அர்ஜுனுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அர்ஜுன் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரையும் ஒரு குடும்பம் போல கவனித்துக் கொண்டிருந்தார் என்றும் இந்த அற்புதமான விளையாட்டுக்கும் நன்றி என்று கூறியுள்ளார். நிகழ்ச்சிக்கு முன்பு அதிகமாக வெளியில் தெரியாமல் இருந்தாலும் தற்போது உமாபதி என்று பெயரைச் சொன்னதுமே ரசிகர்களுக்கு தெரிந்த வகையில் நன்கு பரிச்சயமாகி விட்டார். இது இவருடைய திறமைக்கு கிடைத்த வெற்றிதான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications