Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக்பாஸ் இந்த வாரம் வெளியேற போட்டிப்போடும் இருவர்...டாப் 5 இடத்தில் உள்ளவர்கள் யார் விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வார எலிமினேஷன் யார் என்று பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

அவராக இருக்குமோ அல்லது இவராக இருக்குமோ என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கெஸ் பண்ணி கொண்டு இருந்தாலும் ஓட்டுக்கள் வித்தியாசம் மிகச் சொற்ப அளவில் தான் இருந்து வருகிறது.

ஒரு வழியாக ரசிகர்களின் எதிர்பார்ப்பு படியே இந்த வாரம் எலிமினேஷன் இருக்குமா இல்லை கண்டெண்ட்காக எலிமினேஷனில் ஆளை மாற்றி விடுவார்களா என பலர் குழம்பி வருகின்றனர் . .

முதல் வார எலிமினேஷன்

முதல் வார எலிமினேஷன்

5 வது சீசன் தொடங்கி இதுவரைக்கும் கலகலப்பாக சென்று கொண்டிருந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது முதல் வார எலிமினேஷன் வந்திருக்கிறது. முதல் வாரத்திலேயே நிகழ்ச்சியிலிருந்து பெட்டியைக் கட்டிக் கொண்டு வெளியே செல்வது யாராக இருக்கும் என்பது பலருடைய கேள்வியாக இருந்தாலும் இவர் தான் என்று ரசிகர்கள் ஒரு சிலரின் பெயரை அடித்து சொல்லி வருகின்றனர். ஒரு வழியாக இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்றுவிட்டால் நன்றாக இருக்கும் என்று பலருடைய கோபத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கும் போட்டியாளர் கடைசி இடத்தில் வாக்குகள் பெற்று இருந்து கொண்டிருக்கிறார்.

ரசிகர்களின் வாக்கு

ரசிகர்களின் வாக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோ வாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களில் யார் உள்ளே இருக்கலாம் யார் வெளியே செல்லலாம் என்று ரசிகர்கள் தான் வாக்களித்து வருகின்றனர். ரசிகர்களின் வாக்கு அடிப்படையில்தான் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவதற்காக, தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பலர் ரசிகர்களின் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருப்பதால் தொடர்ந்து இந்த வீட்டில் இருந்து கொண்டு இருந்தாலும் ஒரு சிலர் செய்யும் செயல்களால் இதுவரைக்கும் வாங்கியிருந்த நல்ல பெயர்களை அப்படியே மாற்றி ரசிகர்களுடைய முக சுளிப்புத்கு ஆளாகி விடுகின்றனர். அது ஒவ்வொரு சீசனிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நமிதா வெளியேற்றம்

நமிதா வெளியேற்றம்

இதுவரைக்கும் இல்லாத வகையில் முதல் வாரத்திலேயே பதினெட்டு போட்டியாளர்களை இந்த சீசனில் தான் அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக சில தவிர்க்க முடியாத காரணங்களால் முதல் வாரத்தில் நமிதா இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். இது இவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தாலும் முதல் எலிமினேஷன் யார் என்பது தெரிந்து கொள்வதில் அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் பலருடைய எதிர்பார்ப்பாக அபிஷேக் பெயர்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

கடைசி இடத்தில் இருவர்

கடைசி இடத்தில் இருவர்

இந்த சீசனில் முதல் வாரத்தில் அபிஷேக்கை வெளியேற்றிவிட வேண்டும் என்று ஒவ்வொரு ப்ரோமோ வெளியாகும் போதும் அவருடைய நெகட்டிவர்ஸ் கமெண்ட்களை போட்டு வருகின்றனர். அதற்கு நொடிபொழுதில் லைக்குகளும் அதிகரித்து விடுகிறது. தற்போது ரசிகர்களின் ஓட்டுகளும் இவருக்குத்தான் குறைந்திருக்கிறது. ஓட்டுகள் குறைவாக பெற்று கடைசி இடத்தில் அபிஷேக் இருந்து கொண்டிருக்கிறார். இவரைவிட ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் சின்னப்பொண்ணு இருந்து வருகிறார். தற்போதைய நிலவரத்தின் படி இவர்கள் இருவரும் தான் கடைசி இடத்தில் இருந்து வருகின்றனர். ஆனால் நிகழ்ச்சியில் கண்டெண்ட் கொடுத்துக்கொண்டு பலபேர் திட்டி தீர்த்தாலும் நிகழ்ச்சிக்கு சுவாரசியம் கூட்டிக் கொண்டு இருப்பது அபிஷேக் தான். அதனால் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படும் வாய்ப்பு குறைவு தான் ஆனால் எப்படியும் அடுத்த வாரம் வெளியேற்றப்பட்டு விடுவார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வெளியேறுவது இவர் தானா

வெளியேறுவது இவர் தானா

சின்ன பொண்ணு இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரைக்கும் ஒரு பாடகியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பைப் பெற்று இருந்தார். ஆனால் இவருக்கும் தாமரைக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு தான் இவர் மீது ரசிகர்களுக்கு மதிப்பை குறைத்து விட்டது என்று ரசிகர்கள் பலர் கூறிவருகின்றனர். நானாகத்தான் போட்டியை விட்டுக் கொடுத்தேன் என்று இவர் பேசியது தான் பல சர்ச்சைகளுக்கு காரணமாக இருக்கிறது. அதனால் இவரும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் வெளியேற்றப்படலாம் என்று பலர் கூறி வருகின்றனர். இவர்களுக்கு அடுத்ததாக சுருதி இருக்கிறார். இவர் சின்ன பொண்ணை விட 4,000 ஓட்டுகள் அதிகமாக பெற்றிருக்கிறார்.

 முதல் ஐந்து இடத்தில் கலக்கும் போட்டியாளர்கள்

முதல் ஐந்து இடத்தில் கலக்கும் போட்டியாளர்கள்

இதுவரைக்கும் பெற்ற ஓட்டுகள் அடிப்படையில் பிரியங்கா முதலிடத்திலும், அவருக்கு அடுத்ததாக ராஜு, அதற்கு அடுத்ததாக அக்ஷரா, நான்காவது இடத்தில் அண்ணாச்சி, ஐந்தாவது இடத்தில் நிரூப் இருந்து வருகிறார்கள். இந்த ஐந்து போட்டியாளர்களுக்கும் ரசிகர்களின் மத்தியில் இந்த வாரத்தில் நல்ல மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வரும் வாரங்களில் இவர்களின் நிலைமை என்னாகும் என்று தெரியாவிட்டாலும் முதல் வாரத்திலேயே இவ்வளவு ஓட்டுக்களை பெற்று இருப்பது பெரியதுதான் என்று இவர்களின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+