தண்ணில கண்டம்...சர்வைவரில் தவிக்கும் போட்டியாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆரம்பமே அட்டகாசமாக தண்ணியில ஆரம்பித்திருக்கும் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் எதிர்நீச்சல் போட்டு கலக்கி வருகிறார்கள்.

நிகழ்ச்சி நடக்கும் இடம் அதிகமாக தண்ணீர் சூழ்ந்த இடமாக இருப்பதால் தண்ணியிலே போட்டியாளர்களை தவிக்க விட்டு விட்டார்கள் போல.

எப்படியும் போட்டியை வென்று விடாமல் விடமாட்டோம் என்று கண்களில் வெறியோடு வெற்றியை நோக்கி பயணிக்கும் போட்டியாளர்களை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இண்டர்நேஷனல் லெவலில் தமிழில்

இண்டர்நேஷனல் லெவலில் தமிழில்

ஜீ தமிழில் முதல்முறையாக இண்டர்நேஷனல் லெவலில் சர்வைவர் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ஆக்ஷன் கிங் களமிறங்கியதும் போட்டி சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ப்ரோமோ பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தது. ப்ரோமோவை பார்த்ததும் ரசிகர்களிடம் ஆர்வம் தாராளமாக ஒட்டிக்கொண்டது. முதல்முறையாக வித்தியாசமாக ஜீ தமிழ் களமிறங்கி இருப்பதால் ஆதரவு மட்டுமல்லாமல் பெரிய அளவில் எதிர்பார்ப்பும் நிகழ்ச்சியை வைரலாக்கி வருகின்றது. நிகழ்ச்சி செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கி விட்டது. முதல்நளே நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். அவர்களின் ஆர்வம் குறையில்லாத வகையில் நிகழ்ச்சி விறுவிறுப்பாக தான் சென்று கொண்டிருக்கிறது.

ஃபர்ஸ்ட் டே ரிஸ்க் டே

ஃபர்ஸ்ட் டே ரிஸ்க் டே

முதல் நாளே டாஸ்க் வைத்து ரசிகர்களை மட்டுமல்லாமல் போட்டியாளர்களையும் கொஞ்சம் மிரள வைத்துவிட்டது சர்வைவர். இந்த நிகழ்ச்சியில் முற்றிலும் புதுமையாக டாஸ்க் அமைந்திருப்பதால் போட்டியாளர்கள் ரொம்பவே சிரமப்படுவார்கள் என்று அவர்கள் மீது அனுதாபம் அலைகளும் சுற்றி வருகிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு வரைக்கும் இது பிக்பாஸ் போன்று இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு முதல் நாளே பெருத்த ஏமாற்றமாக அமைந்துவிட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி போன்று இது இல்லை. இது வேற மாதிரி இருக்கு என்று ரசிகர்களே கூற தொடங்கிவிட்டார்கள். திரில்லிங் சஸ்பென்ஸ் கொஞ்சமும் குறையாமல் ரசிகர்களுக்கு புத்துணர்வையும் ஊட்டி வருகின்றனர்.

டீமை பிரிச்சாச்சு

டீமை பிரிச்சாச்சு

சீரியலுக்கு அடிமையாக இருந்த ரசிகர்களுக்கு மாற்றாக இந்த நிகழ்ச்சி வந்திருப்பதை பார்த்து பலர் இதற்கு ஆதரவு கொடுக்க தொடங்கிவிட்டனர். எப்போதுமே அழுகை சீன்களையே பார்த்து வெறுக்கும் சில சீரியல் பிடிக்காதவர்கள் கூட இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்க தொடங்கி விட்டார்கள். ஒவ்வொரு ப்ரோமோவும் கலக்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு அவர்களின் இரண்டு அணியாக சர்வைவர் டீம் பிரித்திருக்கிறது. அதிலொன்று காடர்கள் மற்றொன்று வேடர்கள் இதில் இரண்டு அணியும் வெவ்வேறு விதமான டாஸ்க்களை செய்ய காத்திருக்கிறது.

யாரும் சளைத்தவர்கள் இல்லை

யாரும் சளைத்தவர்கள் இல்லை

அதில் காடர்கள் என்றால் ஒரு காட்டை பற்றி ஓர் உயிரினத்தைப் பற்றி என்னதான் முன் குறிப்புகளை கொண்டிருந்தாலும் ஏதோ ஓர் அம்சம் அன்றைக்கு புதிதாக தோன்றலாம். வெறும் முன் கணிப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு காட்டுக்குள் புகுந்து யாரும் வெளியே வந்துவிட முடியாது. வலுவான பட்டறிவும் சமயோசித ஆற்றலும் ஒரு புள்ளியில் முயங்கி செயல்பட வேண்டும். இதுதான் காடுகளும் கடல்களும் காலம் காலமாக நமக்கு மௌனமாக கற்றுக்கொடுக்கும் செய்தி. அதுமட்டுமல்லாமல் வேடர்கள் என்போர் சாதாரண மக்களின் வாழ்வியல் தன்மைகளில் இருந்து வேறுபட்டவர்களாக அல்லது சாதாரண மனித வாழ்க்கைக்கு இன்னும் நம்மை தயார்படுத்திக் கொள்ளாதவர்கள் ஆக வேட்டையாடி புசிக்கும் வாழ்க்கையை வழக்கமாகக் கொண்டு காடுகளில் வசிப்பவர்களை குறிக்கும் பெயராகும்.

தண்ணி காட்டிட்டாங்களே

தண்ணி காட்டிட்டாங்களே

முதல் நாள் டாஸ்கில் காடர்கள் கடலின் மையப்பகுதியில் ஒரு படகு நிற்கும் அந்த படகிற்கு கரையிலிருந்து அனைவரும் நீச்சலடித்து சென்று தங்களுக்கு தேவையான அடிப்படை பொருள்களை அந்த படகில் இருந்து எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்பதுதான். இதைக் கேட்டு காடர்கள் மட்டுமல்லாமல் வேடர்களும் கொஞ்சம் கலங்கித்தான் போயிருக்கிறார்கள். ஆனாலும் டாஸ்க் என்று வந்துவிட்டால் அதை செய்து தானே ஆகவேண்டும் என்று காடர்கள் கடலில் குதித்து கிளம்பிவிட்டார்கள். அதில் ஒவ்வொருவரும் செய்யும் சாகசங்களை பார்த்ததும் ரசிகர்களே கொஞ்சம் மிரண்டு போய்விட்டார்கள். கடலில் தத்தளித்த படி போடும் கூச்சல் அனைவரையும் மிரள வைத்திருக்கிறது. முதல்நாளிலேயே இப்படி தண்ணி காட்டி விட்டார்களே என்னும் 89 நாட்கள் எப்படி தான் சமாளிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+