வயது வித்தியாசம் இருந்தாலும் திருமணம் செய்ய ஒரே காரணம்... மனம் திறந்த கன்னிகா
சென்னை:கன்னிகா ரவி சினேகன் ஜோடியின் வயது வித்தியாசத்தை சொல்லி கலாய்க்கும் ரசிகர்களுக்கு கன்னிகா ரவி அசத்தலான பதில் கூறியுள்ளார்.
என்ன தான் வயது வித்தியாசம் இருந்தாலும் இந்த அளவிற்கு காதலித்து திருமணம் செய்வதற்கு ஒரே காரணம் இதுதான் என்று கன்னிகா விளக்கம் கொடுத்துள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த ஜோடி
சின்னத்திரையாக இருந்தாலும் சரி வெள்ளித் திரையாக இருந்தாலும் சரி அங்கே காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. இது காலங்காலமாக நடந்து கொண்டு வந்தாலும், பல திருமணங்கள் வாழ்க்கையில் துவக்கத்திலேயே காணாமல் போய்விடுகிறது. தற்போதைய சூழ்நிலையில் பல பிரபலங்கள் தங்களுடைய திருமண வாழ்க்கையை பாதியில் முறித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில பிரபலங்கள் தங்களுடைய காதலை மேலும் மேலும் உறுதிப்படுத்திக் கொண்டு இருப்பதை பார்க்கும்போது ரசிகர்களுக்கும் அவர்கள் மீது தனி மரியாதை ஏற்பட்டுவிடுகிறது. அந்த வகையில் ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக கன்னிகா சினேகன் ஜோடி இருந்து வருகின்றனர்.

வயது வித்தியாசம்
கன்னிகா மற்றும் சினேகன் இருவரும் ஒரே துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் தங்களுடைய துறையில் தாங்கள் சாதிக்க வேண்டும் என்று பல வருடங்களாக தங்களுக்குள் இருக்கும் காதலை வெளியுலகத்திற்கு காட்டிக்கொள்ளாமல் மறைத்து வந்தனர். பல வருட காத்திருப்புக்கு பிறகு தான் இவர்களுடைய திருமணம் விமரிசையாக நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி பல கேள்விகள் எழுந்த வண்ணமாகவே இருக்கிறது. அதில் பலரும் கேட்கும் கேள்வி சினேகன் மற்றும் கன்னிகா இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் அதை தான் பலரும் கேட்டு வருகின்றனர்.

அம்மா இல்லாத பொண்ணு
அதுமட்டுமல்லாமல் 90ஸ் மீம்ஸ்களில் அதிகமாக கேட்கப்படும் கேள்விகளில் இவர்களுடைய வயது வித்தியாசம் இருந்து வருகிறது. அதற்கு தற்போது கன்னிகா விளக்கம் கொடுத்துள்ளார். தன்னை விட வயது அதிகமான சினேகனை தான் காதலிப்பதற்கு காரணம், தான் அம்மா இல்லாமல் வளர்ந்த பெண். அதனால் நான் என்னுடைய பாதுகாப்பிற்காகவும், வளர்ச்சிக்காகவும் பலரிடமும் பார்த்து பார்த்து தான் பழகி வந்தேன். அதுவும் மெச்சூரிட்டி உள்ளவர்களிடம் தான் என்னுடைய நட்பு இருந்து வந்தது. என்னுடைய வயதை ஒத்த ஜாலியாக இருக்கும் நண்பர்களுடன் என்னால் சகஜமாக பேச முடியாது. தன்னுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்தை மட்டுமே நான் எதிர்பார்த்து அதற்கான வழிமுறைகளை தேடிக்கொண்டிருக்கும் போது என்னைப் போன்ற கருத்துடைய சினேகனை சந்தித்ததும் அவர் மீது ஒரு மரியாதை ஏற்பட்டுவிட்டது என்று கூறியிருக்கிறார்.
Recommended Video

இதுதான் காரணம்
பல இடங்களில் சினேகனின் கருத்தும் கன்னிகாவின் கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருந்து வந்துள்ளது.ஒருவர் தன்னை திட்டினால் கூட அவர் எதற்காக தீட்டினார் எந்த சூழ்நிலையில் திட்டினார் என்று அவருடைய இடத்தில் இருந்து யோசித்துப் பார்க்கும் குணம் எனக்கும் இருக்கிறது, அதேபோல சினேகன் இடமும் இருக்கிறது. அந்த அளவிற்கு அவருடைய மெச்சூரிட்டி இருப்பதாலும் தன்னை பாதுகாப்பாகவும் பல நேரங்களில் தனக்கு தெரியாதது பலவற்றையும் கூறி தனக்கு அறிவுரையும் இந்த சமுதாயத்தில் எப்படி வாழவேண்டும் என்று சிந்தனைகளையும் கொடுத்துக் கொண்டிருப்பதால், அவர் மீது தனக்கு மரியாதை ஏற்பட்டு அதுவே காதலாக மாறி விட்டது. அதனால் எங்களுக்குள் வயது வித்தியாசம் பெரிய அளவில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியிருக்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications