ஏமாற்றப்பட்டவர்களின் வலியை சொல்லும் திரைப்படம் "ஓடிடி ரிலீஸ்".. இதற்காகவே எதிர்பார்க்கும் ரசிகர்கள்
சென்னை:கதைகளையே படத்தின் ஹீரோவாக வைத்து படம் எடுக்கும் மலையாள திரையுலகில், மற்றும் ஒரு சிறப்பான கதையம்சதோடு திரையரங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தீர்ப்பு.
இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை பெற்ற ஹாட்ஸ்டார் நிறுவனம் செப்டம்பர் 30ஆம் தேதி தன்னுடைய அதிகாரப்பூர்வ ஓடிடி தளத்தில் வெளியிடுகிறது.
நல்ல கதையம்சமுள்ள படங்களை ரசிக்கும் ரசிகர்களுக்கும், நேசிக்கும் நெஞ்சங்களுக்கும் இந்தப் படம் நல்ல விருந்தாக அமையும் என்று மலையாள பட ரசிகர்கள் படத்தை ஓடிடி யில் வரவேற்க ஆவலாய் இருப்பதாக கூறி வருகின்றனர்.

கதை சுருக்கம்
நல்ல நண்பர்களாக இருக்கும் நான்கு பேரில் ஒருவர் மட்டும் மற்ற மூவரால் தன்னுடைய குடும்பம் முதல் அனைத்தையும் இழந்து ஏமாற்றப்பட்டு பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறார். ஏமாற்றிய மூவரும் சமூகத்தில் பெரிய மனிதர்களாக மாறி சில வருடங்களுக்குப் பிறகு ஒரு இடத்தில் ஒன்று கூடும் பொழுது அங்கு வரும் ஏமாற்றப்பட்ட அந்த நான்காவது நபர் அவர்களை பழி வாங்கினாரா? எப்படி பழி வாங்குவார்? என்பதே தீர்ப்பு படத்தின் கதை சுருக்கமாக சொல்லப்படுகிறது.

தீர்ப்பின் நட்சத்திரங்கள்
ரத்தீஷ் அம்பாட் இயக்கத்தில் பிரித்திவிராஜ் சுகுமாரன், இந்திரஜித் சுகுமாரன், ஈஷா தல்வார், போன்ற நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே மோகன்லால் வைத்து பிரித்திவிராஜ் இயக்கிய லூசிபர் படத்திற்கு கதை எழுதியவர் ஆவார்.மற்றும் லெப்ட் ரைட் போன்ற படங்களும் முரளி கோபி கதை எழுதியவைகள் ஆகும். தன்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்த ஒருவன் அதை இழப்பதற்கு காரணமானவர்களை பழி வாங்குவதற்கு மரணத்தை விட பெரிதான ஒரு தண்டனை கொடுக்க வேண்டும் என நினைப்பதை அழகான கதையாக எழுதியிருக்கிறார் முரளி கோபி என்று பலர் பாராட்டி இருந்தனர்.

அசால்டாக பேசப்படும் அரசியல்
லோக்கல் அரசியல் துவங்கி உலக அரசியல் வரை சாதாரணமாக பேசும் தீர்ப்பு திரைப்படத்தில் அரசியல் வசனங்கள் அதிகம் இருப்பதாகவும், இதைப் போன்று அரசியல் வசனங்கள் நிறைந்த படங்களை வேறு மொழிகளில் தற்போது யாரும் எடுப்பதில்லை என்றும், இதைப் போன்று எடுப்பதற்கு தனி தைரியம் வேண்டும் என்றும் படத்தைக் குறித்து பாராட்டியவர்கள் கூறியிருந்தனர். வெளிப்படையாக பார்க்கும் பொழுது சாதாரண பழிவாங்கல் கதை தான் என்றிருந்தாலும், படம் சொல்லப்பட்ட விதமும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளும் ஹாலிவுட் ரேஞ்சிக்கு இருந்ததாக படத்தைப் பார்த்தவர்கள் புகழ்ந்து இருந்தனர்.

தீர்ப்பு திகட்டாமல் இருக்க
கதைகளை கண்டுபிடிப்பதிலும் அந்தக் கதைகளை படத்தில் சொல்லும் முறையிலும் மலையாள திரை உலகிற்கு என்று ஒரு தனி பாணி உண்டு. உலக சினிமா ரேஞ்சிற்கு இருக்கும் இந்த பாணி யால் தான் குறைந்த பொருட்ச்செலவில் தரமான பல படங்களை மலையாள திரையுலகினரால் எடுக்க முடிகிறது.பிரித்திவிராஜ் சுகுமாரன் என்ற தனிப்பட்ட ஹீரோவின் படமாக எதிர்பார்த்து இதை பார்க்காமல் கதையையே படத்தின் ஹீரோவாக நினைத்து பார்ப்பவர்களுக்கு தீர்ப்பு திரைப்படம் திகட்டாமல் இருக்கும்.












Click it and Unblock the Notifications