Top 10 Serial: இந்த வார டாப் 10 சீரியல்கள் இதுதான்! சன் டிவியை விரட்டிய விஜய் டிவி
சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் 2025 ஆம் ஆண்டிற்கான 49 வது வாரத்தில் டாப் 10 சீரியல் டிஆர்பி விபரங்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி உங்களுக்கு பிடித்த சீரியல் எந்த இடத்தில் இருக்கிறது பார்த்துக் கொள்ளலாம்

1, மூன்று முடிச்சு சீரியல்:
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் வழக்கம் போல இந்த வாரத்திலும் முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது. கடந்த வாரம் 10.62 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரத்தில் 10.14 புள்ளிகள் பெற்று தன் இடத்தை தக்க வைத்திருக்கிறது.
2, சிங்க பெண்ணே சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரத்திலும் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் 9.39 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
3, கயல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரம் 9.36 புள்ளிகள் பெற்று இருந்த நிலையில் இந்த வாரம் 9.11 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறது.
4, எதிர்நீச்சல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் என்ன தான் ரசிகர்களால் கழுவி ஊற்றப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில் அதிகமான திருப்பங்களும் திருப்பாத கதைக்களமும் வந்தாலும் இந்த வாரம் சரிவை அடைந்திருக்கிறது. அதாவது போன வாரத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் 8.72 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்திற்கு வந்திருக்கிறது.
5, அய்யனார் துணை சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல் இந்த வாரம் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறது. கடந்த வாரம் 8.28 புள்ளிகள் உடன் எட்டாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 8.65 புள்ளிகளோடு ஐந்தாவது இடத்திற்கு வந்திருக்கிறது.
6, மருமகள் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் போன வாரத்தை விட இந்த வாரம் கொஞ்சம் சரிவை சந்தித்திருக்கிறது. போன வாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 8.61 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்திற்கு வந்திருக்கிறது.
7, பாண்டியன் ஸ்டோர் 2
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த வாரம் 7.91 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 8.40 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்திற்கு வந்திருக்கிறது.
8, சிறகடிக்க ஆசை சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சில வாரங்களாக டிஆர்பியில் அடி வாங்கிக் கொண்டிருந்தது. கடந்த வாரம் 8.41 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்தில் இருந்த நேரத்தில் இந்த வாரம் 8.35 புள்ளிகள் உடன் எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
9, அன்னம் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் சீரியல் கடந்த வாரம் 8.51 புள்ளிகள் பெற்று இருந்த நிலையில் இந்த வாரம் 8.31 புள்ளிகளைப் பெற்று ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.
10, சின்ன மருமகள் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் போனவாரத்தை போலவே இந்த வரமும் பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. போன வாரத்தில் இந்த சீரியல் 7.55 டிஆர்பி பெற்று இருந்த நிலையில் இந்த வாரம் 6.78 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications