Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைசாய்த்து சிரித்த வாணி.. கன்னக் குழியில்... தலைக்குப்புற விழுந்த ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளவேனிற் காலத்தில் வந்து இறங்கிய தேவதை போல வெளிர் நிறத்தில் வாணி போஜனை பார்த்து குதூகலிக்கும் ரசிகர்கள் கமெண்ட்களில் பூக்களைத் தூவுகின்றனர்.

பால்வண்ண மேனியில் பாலாடையைப் போல மேலாடை இருக்கவா நழுவ வா என குழம்புவதைப் பார்த்து ரசிகர்களும் அந்த ஆடையை மூச்சுப் பிடித்து ஊதி பார்க்கின்றனர்.

என்ன சொன்னாலும் அந்த பார்வைக்கு எப்போதுமே தனி கிக்கு இருக்குனு சொக்கிப் போன ரசிகர்கள் போதையேறி சுற்றி வருகிறார்களாம் வாணி போஜன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்.

மொத்தமாக தெரியுது முதுகு

மொத்தமாக தெரியுது முதுகு

ஸ்லீவ்லெஸ் புடவையில் மொட்டைமாடியில் அமர்ந்தபடி பவ்யமாய் தலைசாய்த்து ஓரப் பார்வையால் பார்த்து ஓரங்கட்டுறாரே நம்ம வாணி போஜன் என ஓடோடி வரும் ரசிகர்களை ஏமாற்றாமல் பார்வையாலே கிக் ஏத்தியிருக்கிறார். இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் என்ன என்று கேட்கிறது போல இருக்கிறதாம் இவருடைய பார்வை. அதனாலேயே பலர் இந்த போட்டோவை வெறித்து வெறித்துப் பார்த்தபடி இருக்கின்றனர். இப்படி பார்த்துகிட்டு இருந்தா கழுத்து வலிக்காதா என ரசிகர்கள் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக கழுத்தில் கை வைத்தபடி மொத்த முதுகையும் முழுசாக காட்டியிருக்கிறார்.

சென்னை சில்க்ஸின் விளம்பரத்தில்

சென்னை சில்க்ஸின் விளம்பரத்தில்

ஊட்டியில் பிறந்ததாலோ என்னவோ பள பளவென்று ஆப்பிள் பழம் போல இருக்கிறாரே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் கல்லூரி படிப்பை முடித்ததும் விமான பணிப்பெண்ணாக கிங்பிஷர் ஏர்லைன்ஸில் வேலை செய்து கொண்டிருந்தார். அதில் இருந்து கொண்டே ஸ்பைஸ்ஜெட்டில் நிர்வாகப் பொறுப்பை ஏற்க முயன்றிருக்கிறார். ஆனால் அப்போது அவர் தனது பட்டப்படிப்பை முடிக்காததால் அதில் சேருவதற்கு அனுமதி கிடைக்கவில்லை. பின்னர் வேலையும் இல்லாமல் போய்விட்டது. இந்த நேரத்தில் தான் இவருக்கு ஒரு மாடலிங் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் தன்னுடைய திறமையை அழகாக பயன்படுத்தி இருக்கிறார். அதிலிருந்துதான் இவருக்கு சென்னை சில்க்ஸின் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சத்யானாலே புடிக்கும்

சத்யானாலே புடிக்கும்

ஒரு விளம்பரத்தில் காலடி எடுத்து வைத்ததும் இவருக்கு 'ஓர் இரவில்' என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சின்ன ரோலாக இருந்தாலும் பரவாயில்லை என அவரும் ஒப்புக்கொண்டதால் இவருக்கு அடுத்த வாய்ப்பு சீரியலில் கிடைத்தது. ஜெயா டிவியில் 'மாயா' என்ற சீரியலில் மாயா கேரக்டரில் நடித்திருந்தார். அதற்குப் பிறகுதான் இவருக்கு தெய்வமகள் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுதான் இவருடைய நடிப்பில் மைல் கல்லாகவும், இப்ப வரைக்கும் ரசிகர்களின் மனதில் தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சன் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியலுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக இருந்தனர். ரசிகர்களின் ஆதரவினால் தான் இப்பவும் கலைஞர் டிவியில் இந்த சீரியல் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அஞ்சு வருஷம்... மறக்க முடியல

அஞ்சு வருஷம்... மறக்க முடியல

தெய்வமகள் சீரியலில் இவர் நடித்தார் என்று சொல்வதை விட ரசிகர்கள் மனதில் சத்யபிரியா வாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும். இப்போது சீரியல்களையும் தாண்டி சினிமாவில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தாலும் பலரும் இவரை சமூக வலைத்தளத்திலும் சரி பார்க்கும் இடங்களிலும் சரி சத்யா என்று தான் அழைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு அவருடைய பெயரை மறந்து ரசிகர்களின் மனதில் அந்த சத்தியா கேரக்டர் பதிந்துவிட்டது. தொடர்ந்து ஐந்து வருடங்கள் இந்த சீரியலில் நடித்ததாலோ என்னவோ யாராலும் இந்த சீரியலை மறக்க முடியாது. அதனால்தான் இவர் மீண்டும் எப்போது சீரியலுக்கு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இளசுகள்தான் அதிகமா இருக்காங்க

இளசுகள்தான் அதிகமா இருக்காங்க

பொதுவாக சீரியல்களை எல்லாம் வீட்டில் இருக்கும் பெண்கள் தான் அதிகமாக விரும்பி பார்ப்பார்கள். ஆனால் இந்த தெய்வமகள் சீரியலில் சத்யாவை பார்ப்பதற்காகவே இளைஞர்களும் தவமிருந்து வந்தனர். அதனால் தான் தங்களுடைய மொபைல் போனில் கூட சீரியலை தொடர்ந்து பார்த்து வந்தனர். இளைஞர்களை கவர்ந்த நடிகைகளில் இவர் தான் டாப். அதனால்தான் சமூக வலைத்தளத்தில் இவருக்கு அதிகமான இளைஞர்கள் பட்டாளம் பாலோவர்ஸாக இருக்கிறது. தெய்வமகள் சீரியலில் வாணி போஜன் சத்யபிரியாவாகவும் கிருஷ்ணா பிரகாஷ் கேரக்டரிலும் நடித்து இருப்பார்கள். இந்த ஜோடி பலருடைய மனதினை கவர்ந்ததால் தான் இந்த சீரியலுக்கு பல அவார்டுகள் கிடைத்தது. 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு தொலைக்காட்சி விருதுகள் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதும், 2014இல் சூரிய குடும்ப விருதுகளும் ,விகடன் விருதுகள், விகடன் நம்பிக்கை விருதுகள், அவள் விருதுகள் ,கலாட்டா நட்சத்திர விருதுகள் என பல விருதுகளை வெற்றி பெற்றிருக்கிறார்.

குழந்தைகளின் கிரஸ்

குழந்தைகளின் கிரஸ்

சன் டிவியில் நடித்துக்கொண்டிருக்கும்போது ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு சீரியலில் மூன்று கேரக்டரில் நடித்திருந்தார். அந்த சீரியலிலும் இவருடைய நடிப்பு இரண்டு வருடம் தொடர்ந்து கொண்டிருந்தது. அதன்பிறகு அசத்தல் சுட்டீஸ், கிங்ஸ் ஆப் ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளின் நடுவராகவும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிகளின் மூலம் குழந்தைகளின் மனதை கொள்ளை கொண்ட பேரழகியாக வலம் வந்தார். பொதுவாக குழந்தைகளாக இருக்கும்போது ஸ்கூல் டீச்சர் மீது கிரஸ் ஏற்படுவதுபோல இந்த நிகழ்ச்சிக்கு பிறகு குழந்தைகளின் கிரஸ் ஆகவும் வலம் வருகிறார். தற்போது சீரியலை தாண்டி இவர் சினிமாக்களிலும் ஓடிடியிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சின்னத்திரை நயன்தாரா

சின்னத்திரை நயன்தாரா

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வாணி போஜனை ஓடிடி தளத்தில் 2020இல் முக்கியத்துவம் பெற்ற நடிகைகளில் ஒருவர் என கூறியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஜீ5இல் இவர் நடித்த மலேசியா முதல் அம்னீசியா வரை திரைப்படமும் நன்றாகவே ரீச் ஆகிவிட்டது. இவர் நடித்த ஓ மை கடவுளே திரைப்படமும் இவருக்கு பெரிய ஹிட்டு தான். அந்த படத்தில் மீரா கேரக்டரில் பட்டைய கிளப்பி இருப்பார். சின்னத்திரையின் நயன்தாரா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர் வெள்ளித்திரையில நயன்தாராவிற்கு டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார். என்னதான் சினிமாக்களில் பிஸியாக இருந்தாலும் போட்டோ ஷூட் எடுப்பதிலும் ஆர்வமாக இருக்கிறார். தன்னுடைய ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இவர் மொட்டை மாடியில் போட்டோசூட் எடுத்திருக்கிறார். மொட்டைமாடி போட்டோஸ் என்றதும் ஆர்வமாக ஓடி வந்த ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தாலும் இதுவும் வேற லெவல் தான் தலைவி என்று வாஞ்சையுடன் கூக்குரல் இடுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+