விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: நடிகர் விஜய் குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் பரவி வரும் சூழலில், பிரபல நடிகை வாணி போஜன் வெளிப்படையாக தெரிவித்த ஆதரவு தற்போது ரசிகர்களிடையே பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

நடிகை வாணி போஜன் பேட்டி
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வெற்றிகரமாக வந்துள்ள வாணி போஜன், சமீபத்திய பேட்டியில் விஜய் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். "எப்பவுமே எனக்கு விஜய் ரொம்ப பிடிக்கும். அவர் உடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. ஆனால் இப்போது அவர் முழுநேர அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டதால், அது நிறைவேறுமா என்பது தெரியவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சினிமாவை தாண்டியும் விஜய்யின் மீது தனக்கிருக்கும் மரியாதையை வெளிப்படையாக கூறிய வாணி போஜன், "நான் எப்போதும் அவருடைய ரசிகைதான்" என்றும் கூறியுள்ளார்.
அரசியலிலும் ஆதரவு
விஜய் தற்போது அரசியல் களத்தில் குதித்து தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் மூலம் செயல்பட்டு வரும் நிலையில், அவருக்கு வாணி போஜன் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். "அவர் எடுத்திருக்கும் இந்த முடிவு - மக்கள் பணிக்காக சினிமாவை விட்டு வருவது - மிகவும் பெரிய விஷயம். அதற்கு என் ஆதரவு எப்போதும் இருக்கும்" என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில், "நீங்கள் கட்சியில் சேருவீர்களா?" என்ற கேள்விக்கு, நேரடியாக பதில் அளிக்காமல், "இப்போதைக்கு அதைப் பற்றி சொல்ல முடியாது" என்று கூறி ஒரு மர்மத்தையும் உருவாக்கியுள்ளார்.
வாணி போஜன் - யார் இவர்?
வாணி போஜன் முதலில் சின்னத்திரை மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர். மிகவும் சாதாரண பின்னணியில் இருந்து வந்து, தனது முயற்சியால் இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ளார்.
ஏர் ஹோஸ்டஸ் வேலை செய்தவர் பிறகு சீரியல்களில் அறிமுகமானார் அதிலும் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் பெரிய அளவில் பெயர் வங்கி கொடுத்தது அந்த நேரத்தில் ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு உட்பட ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார் அதற்கு பிறகு இந்த தொடர்களின் மூலம் "சின்னத்திரை நயன்தாரா" என்ற பட்டத்தையும் பெற்றார்.
திரைப்பட பயணம்
சீரியல்களில் வெற்றி பெற்ற பிறகு, வெள்ளித்திரையிலும் தனது திறமையை நிரூபித்தார். ஓ மை கடவுளே பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதைத்தொடர்ந்து லாக்கப், மலேஷியா டு அம்னீஷியா போட்டோ பல படங்களில் நடித்த இப்போதும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
ரசிகர்கள் எப்படி பார்க்கிறார்கள்?
விஜயை சுற்றி பல சர்ச்சைகள் நிலவி வரும் இந்த நேரத்தில், வாணி போஜன் போன்ற ஒரு நடிகை வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது ரசிகர்களிடையே கலவையான எதிர்வினையை உருவாக்கியுள்ளது. விஜய் ரசிகர்கள் "இதுதான் உண்மையான ஆதரவு" என்று கொண்டாடுகிறார்கள். சிலர் "இது அரசியல் ஆதரவு காட்டும் முயற்சியா?" என கேள்வி எழுப்புகிறார்கள்
சர்ச்சைகள், அரசியல், சினிமா மூன்றும் கலந்து இருக்கும் இந்த சூழலில், வாணி போஜன் அளித்த இந்த திறந்த ஆதரவு, விஜய் சுற்றியுள்ள விவாதத்தை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது. இது ஒரு சாதாரண பாராட்டு அல்ல... அரசியல் அர்த்தம் கொண்ட ஆதரவா? என்பதே தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் கேள்வியாக உள்ளது.
-
வில்லிவாக்கம் பெரிய ஏரியா கிடையாது.. நாளைக்கு விஜய் எப்படி சமாளிக்கப்போகிறார்? பதறும் பெற்றோர்கள்! -
எல்லாத்தையும் விட்டுட்டு வந்தாரா விஜய்? நல்ல கதையா.. இருக்கே! இதெல்லாம் கணக்குல வராதா? -
விஜய் பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனுவில் தவறு செய்திருந்தாலும்! அவரது வேட்புமனு ரத்தாகாதாமே! ஏன்? -
வேட்புமனு விஷயத்தில் பயங்கரமாக சொதப்பும் விஜய்.. எக்கச்சக்க பிழைகள்! நிராகரிக்க நிறைய வாய்ப்பு -
ரஜினிகாந்த் திருந்திவிட்டார்.. விஜய் கட்சியை கலைத்துவிட்டு சென்றால் நல்லது - அமீர் -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
“அந்த தகுதி மட்டும் போதுமா?.. ஸ்டாலினுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?” விஜய் மீது சேரன் தாக்கு! -
திருத்தணி தவெக நிர்வாகியின் அலப்பறை.. தனித்து விடப்பட்டதற்கு காரணம் இதுதான்! புலம்பும் நிர்வாகிகள் -
Vijay Affidavit: குடும்பத்திற்கே கடன் கொடுத்த ஒருவரை பார்த்ததே இல்லை! விஜய் மீது முத்தரசன் தாக்கு! -
தவெக தலைவர் விஜய் விஜயகாந்த் போல தாக்கத்தை ஏற்படுத்துவார்.. மதுரையில் டிடிவி தினகரன் பேட்டி -
டைம் ட்ராவல் செய்த விஜய்? பெரம்பூர் மனுவில் 52 வயது.. திருச்சி வேட்புமனுவில் 51 வயது! வெரி ராங் ப்ரோ -
திடீரென பாஜகவுக்கு ஓட்டு கேட்ட விஜய்.. ஷாக்கான தவெக வேட்பாளர்.. பாவம்யா அவரே ‘கன்ஃபியூஸ்' ஆகிட்டாரு! -
TN 2026 ட்ரெய்லரை பார்த்து கொளுத்தி போட்ட ஆதவ்.. விஜயை வைத்து பதிலடி கொடுத்த தம்பி ராமையா மகன் உமாபதி! -
2026 தேர்தல் களம்.. மக்களுக்கு அட்வைஸ்! ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன்.. அடுத்த பஞ்சாயத்து -
இனி நீங்க முதல்வரா? உங்க ஜோடி நடிகை முதல்வரா? கேள்விக்கு விஜய் கேரக்டரில் நடித்த நட்டி ஓபன்












Click it and Unblock the Notifications