சமாதான கொடி காட்டியவருக்கு வனிதா வைத்த முற்றுப்புள்ளி... இதுதான் அதுவா...!!??
சென்னை: கர்மா குறித்து பிரபல நடிகை வனிதா டுவிட் செய்துள்ளது,வனிதா பற்றிய ரவீந்திரனின் பழைய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உள்ளதாக வனிதாவின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தற்போது நடந்த புகழில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து கூறிய வனிதா, ரவீந்திரனுக்கு வாழ்த்து கூறி ஒரு போஸ்ட் கூட போடவில்லை என்பதையும் பலர் சமூக வலைத்தளத்தில் கேள்விகளாக எழுப்பி வருகிறார்கள்.
என்னதான் ரவீந்தர் நானும் வனிதாவும் சகஜமாக மாறிவிட்டோம் என்று கூறினாலும் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேள்விகளுக்கு வனிதாவின் பதில் நச்சென்று அமைந்திருப்பதாக பலர் கூறி வருகிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சனம்.
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா தன்னுடைய தடாலடியான நடவடிக்கைகளால் பிக் பாஸ் வீட்டையே மிரள வைத்து வந்த சமயத்தில், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ரிவ்யூக்களை வழங்கி வந்த ரவீந்திரன், வனிதாவை குறித்து கருத்துக்களை கூறும் பொழுது வனிதா அக்கா என்று மரியாதையாகவே அவர்களை பற்றி கூறி வந்ததாகவும், அவர்களது நடவடிக்கைகளுக்கு அந்த நேரத்தில் தான் ஆதரவு அளித்து வந்ததாகவும் தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை வனிதாவிற்கு தான் ஒரு ரசிகராகவே இருந்ததாகவும் தெளிவுபடுத்தி உள்ளார்.

வனிதா பீட்டர் பால் திருமணம்.
பிக் பாஸ் வீட்டில் வனிதாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்து வந்த ரவீந்திரன், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்பு அவர் பீட்டர் பாலை திருமணம் செய்ததை குறித்து மட்டுமே தான் விமர்சித்ததாகவும் கூறியுள்ளார். வனிதா திருமணம் செய்திருந்த பீட்டர் பால் தன்னுடைய முதல் மனைவியிடம் முறையாக விவாகரத்து பெறாமல் இருந்ததும், முதல் மனைவியையும் மகனையும் கைவிட்டு விட்டு வந்து வனிதாவை திருமணம் செய்தது குறித்து அவரது முதல் மனைவி பல பேட்டிகளில் கண்ணீர் மல்க கூறி இருந்ததால் மட்டுமே தான் அந்த திருமணத்தை விமர்சித்ததாகவும் தன் மீது உள்ள நியாயத்தை கூறியுள்ளார்.

வனிதாவுடன் சமாதானம்.
வனிதா பீட்டர் பால் திருமண விவகாரங்களுக்குப் பின்பு தானும் வனிதாவும் காம்ப்ரமைஸ் ஆகிவிட்டதாக கூறியுள்ள ரவீந்திரன், அதற்குப்பின் பல சமயங்களில் தங்கள் நண்பர்களாக பேசிக் கொண்டோம் என்றும், அவரது கடை திறப்பு விழாவிற்கு கூட தன்னை அழைத்திருந்ததாகவும், தான் அந்த நேரத்தில் வெளியூரில் இருந்ததால் செல்ல முடியவில்லை என்றும் கூறி இருந்தார். வனிதா உடன் எந்த மோதலும் இல்லை என்று ரவீந்திரன் கூறி வந்த நிலையில் கர்மா குறித்து வனிதா போட்டுள்ள ட்வீட் ரவீந்திரன் சொல்வதெல்லாம் உண்மையா..!!? பொய்யா..!!? என்று இணையவாசிகளை சற்று குழம்ப வைத்துள்ளது.

கர்மா இஸ் பூமராங்
தன்னுடைய திருமணத்தைப் பற்றி அறிந்தால் தன்னை வாழ்த்தும் முதல் நபராக வனிதாதான் இருப்பார் என்று தன்னுடைய மனைவி மகாலட்சுமியிடம் தான் ஏற்கனவே தெரிவித்திருந்ததாக சமீபத்தில் ஒரு பேட்டியில் ரவீந்திரன் கூறியிருந்தார். ஆனால் ரீசண்டாக தனது ட்விட்டர் பக்கத்தில் .."தான் மிகவும் பிசியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும், அடுத்தவர்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க நேரமில்லை என்றும், கர்மாவை தான் நம்புவதாகவும், கர்மாவிற்கு திருப்பிக் கொடுக்கத் தெரியும்.." என்று ட்வீட் போட்டு உள்ளது ரவீந்திரன் மீதான கோபம் இன்னும் வனிதாவிற்கு குறையவில்லை என்பதையே காட்டி இருப்பதாக இனைய வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications