வனிதாவின் மூளைக்குள் அந்த வார்த்தை... அவருடைய நடவடிக்கைக்கு காரணம் இதுதானா
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதாவின் நடவடிக்கை நெட்டிசன்களை கலாய்க்க வைத்துள்ளது.
வனிதா இந்த மாதிரி நடந்து கொள்வதற்குக் காரணம் அவருடைய மூளையில் யாரோ அந்த வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று கலாய்த்து வருகிறார்கள்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாயலை போல இருந்தாலும், இதில் ஒவ்வொரு சீசனிலும் கலந்துகொண்டு தங்களுடைய கேரக்டரை மிஸ் செய்தவர்கள் அதைத் திருத்திக் கொள்வதற்காக மீண்டும் கிடைத்த வாய்ப்பாக இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தியிருக்கின்றனர். தாங்கள் இழந்த பெயரையும் புகழையும் மீண்டும் அடைந்துவிட வேண்டும் என்று இவர்கள் விடாமுயற்சியோடு செயல்பட்டு வருவது வெற்றியை கொடுக்குமா?? என்பதை பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.

ஆரம்பமே இப்படியா
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக தொடங்கப்பட்டு இன்றோடு நான்காவது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே போட்டியாளர்கள் எப்படி கண்டென்ட் கொடுக்கலாம் என்றுதான் செயல்படுகிறார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதுவரைக்கும் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன்களிலும் ஒரு சில நாட்களுக்காவது போட்டியாளர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். ஆனால் இந்த அல்டிமேட் நிகழ்ச்சி ஆரம்பமே சண்டையால் கலக்கிக் கொண்டிருக்கிறது.

வனிதாவின் நம்பிக்கை
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட வனிதாவின் நடவடிக்கைகள் ரசிகர்களை வியப்படைய செய்திருக்கிறது. ஏற்கனவே இவர் இரண்டு முறை பிக் பாஸ் வீட்டில் அடி எடுத்து வைத்து இருப்பதால், தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் களம் காண வந்திருக்கின்றார், தான் விட்ட இடத்தை எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று கூறிய இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகு தன்னுடைய ரசிகர்களை பற்றியோ தனக்கு ஓட்டுகள் வேண்டும் என்று யோசிக்காமல் தான் கண்டென்ட் கொடுத்துக்கொண்டிருந்தார். பிக் பாஸ் நமக்கு ஆதரவு கொடுத்து விடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் என்ற நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
Recommended Video

திரும்பும் பக்கமெல்லாம் சண்டை
வழக்கத்துக்கு மாறாக அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள் 14 பேரும் எந்தப் பக்கம் திரும்பினாலும் அதில் ஒரு பிரச்சனையை பெரிது பண்ணிக் கொண்டு கேமராவை தன்னை பார்த்த வைப்பதற்காக பிளான் போட்டு வருகிறார்கள் என்பது ரசிகர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் மூன்றாவது முறையாக மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் வனிதாவின் மூளைக்குள் யாரோ ஒருவர் நீதான் இந்த வீட்டின் ஓனர் என்று சொல்லி விட்டார்கள் போல, அதனால்தான் வனிதா இப்படி வித்தியாசமாக நடந்து வருகிறார். தனக்கு மட்டும் தான் எல்லாமே என்பது போல இவர் நடந்து கொள்வதைப் பார்த்து அனைவரும் கலாய்த்து வருகிறார்கள். ஏற்கனவே நேற்று இவர் டீத்தூளை ஒளித்து வைத்து விட்டார். ஆனால் இன்று காப்பி பவுடர் வந்ததும் தன்னுடைய வேலையை மீண்டும் காட்டியது பலருக்கு வெறுப்பாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications