நாங்கெல்லாம் ரூல்ஸையே பிரேக் பண்றவங்க.. அசீமுடன் எடுத்த போட்டோக்களை பதிவிட்ட வனிதா.. ஏன் என்னவாம்?
பிக்பாஸ் அசீமை பலர் எதிர்த்து வரும் நிலையில் அவரை தனது வீட்டிற்கு வரவழைத்து நடிகை வனிதா விஜயகுமார் விருந்தளித்துள்ளார்.
சென்னை: பிக்பாஸ் அசீமுக்கு எதிராக பலர் கண்டனங்களை பதிவிட்டு வரும் நிலையில் அவரை தனது வீட்டிற்கு அழைத்து வனிதா விஜயகுமார் விருந்தளித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 6 கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி 106 நாட்கள் முடிந்து கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியே முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் அசீம், விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி ஆகியோர் இருந்தனர்.
இவர்களில் அசீம், விக்ரமன் இடையே முதல் இடத்திற்கு யார் வருவார்கள் என்ற போட்டி அதிகமாக இருந்தது. அசீம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த பெண்களை அவதூறாக பேசி வந்தார். எப்போது பார்த்தாலும் யாருடனாவது சண்டையிட்டு வந்தார்.

பேசிய பேச்சுகள்
இவர் பேசிய பேச்சுகளுக்கு கமல்ஹாசன் இவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த போட்டியில் அனைத்து தரப்பினரையும் இம்ப்ரஸ் செய்தவர் விக்ரமன். எனவே அவர்தான் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை அசீம் தட்டிச் சென்றார்.

அதிர்ச்சி
இது பலருக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அவர் போட்டியில் தொடரவே தகுதியில்லாத போது டைட்டில் எப்படி வென்றார் என்றெல்லாம் நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த நேரத்தில் தான் வென்ற ரூ 50 லட்சத்தில் ரூ 25 லட்சத்தை கொரோனாவால் பெற்றோரை இழந்த ஏழைக் குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு தருவதாக அறிவித்தார்.

விக்ரமன் எப்படி தோற்றார்
எனினும் விக்ரமன் எப்படி தோற்றார் என்ற கேள்வியே இருந்தது. இப்படி அசீமுக்கு எதிராக பலர் இருந்து வந்த நிலையில் அசீமை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்துள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். அத்துடன் நாங்கள் யாருக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வரவில்லை. நாங்கெல்லாம் ரூல்ஸை பிரேக் செய்றவங்க என கேப்ஷனும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அசீமுடன் எடுத்த போட்டோக்களையும் வனிதா பதிவிட்டிருந்தார்.

அசீமின் வெற்றி யாருக்கும் பிடிக்கவில்லை
நடிகர் அசீம் வென்றது யாருக்கும் பிடிக்காவிட்டாலும் வனிதாவுக்கு பிடித்திருந்தது. ஏனென்றால் அவர் விக்ரமன் வெல்லக் கூடாது என நினைத்திருந்தார். அதில் அவர் உறுதியாகவும் இருந்தார். விக்ரமன் வெற்றி பெற திருமாவளவன் ஆதரவு தெரிவித்ததற்கு வனிதா கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். இது ஒரு மாதிரியான அரசியல் விளையாட்டு என கூறியிருந்தார். இதனால் வனிதாவுக்கு பல மிரட்டல்கள் வந்தன. இதை வனிதாவே கூறியிருந்தார்.

வனிதா கண்டனம்
நடிகை வனிதா விஜயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து வனிதா விஜயகுமார் கூறுகையில், இதற்கு என்ன சொல்கிறீர்கள். இதெல்லாம் அரசியல் தந்திரம். மரியாதைக்குரிய ஒரு அரசியல் கட்சித் தலைவரும் இன்னாள் எம்பியுமான ஒருவர் ரியாலிட்டி ஷோவில் குறிப்பிட்ட போட்டியாளருக்கு வாக்களிக்குமாறு தனது தொண்டர்களிடம் எப்படி கேட்க முடியும்.

திருமாவை விமர்சித்த வனிதா
அந்த போட்டியாளர் அவருடைய கட்சியை சேர்ந்தவர் என்பதாலா? மிகவும் சாமர்த்தியமான அரசியல் விளையாட்டு. மைண்ட் கேமை பயன்படுத்தி மக்களின் அன்பு மற்றும் அரவணைப்புடன் விளையாட முயற்சிக்கிறார்கள் என வனிதா கொந்தளித்திருந்தார். அது போல் அவர் இன்னொரு ட்வீட்டில் ஷிவின்தான் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல தகுதியானவர், அவருக்கு வாக்களியுங்கள் என குறிப்பிட்டிருந்தார். இதனால் வனிதா அசீமை விருந்திற்கு அழைத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications