விஜய் சேதுபதி இவ்வளவு ஓபனா பேசுவாருன்னு நினைக்கலையே! வெடவெடுத்து போன VJ பார்வதி! அடுத்த பஞ்சாயத்து
சென்னை: தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிப்பாலும், எளிமையான பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி, அவரை மீண்டும் சர்ச்சையின் மையமாக மாற்றியுள்ளது. "காட்டான்" என்ற புதிய வெப் சீரிஸின் விழாவில் அவர் பேசிய சில கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

கிளம்பிய கேள்வி
இந்த நிகழ்ச்சியில், விஜய் சேதுபதி, விஜய் பார்வதி குறித்து பேசும்போது மிகவும் நேரடியாகவும், சற்றே கடுமையாகவும் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ கிளிப்புகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
நேற்றைய விழாவில் விஜய் சேதுபதி பேசும்போது, சிம்பு சூர்யா என அனுபவசாலிகள் இருக்கும்போது என்னை பிக் பாஸை தொகுத்து வழங்க வைத்தவர் ஜியோ ஹாட்ஸ்டார் பிரதீப் தான். அவருக்கு நான் நன்றி சொல்கிறேன். இங்கே அனுபவசாலிகள் பலர் இருக்கிறார்கள் அதில் விஜே பார்வதி பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை.
ஏனெனில் வாராவாரம் பார்வதியிடம் நான் பேசி சலித்து விட்டது. பார்வதி மீது உங்களுக்கு வருத்தம் இருக்கலாம் ஆனால் முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸில் அவரை உங்களுக்கு பிடித்து விடும். இதில் முத்துக்குமரன் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரும் ஒரு திறமைசாலிதான். முத்துக்குமரனை இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ் மணிகண்டனிடம் அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று விஜய் சேதுபதி பேசி இருந்தார்
அவரது பேச்சை ஒரு தரப்பு "நேர்மையான விமர்சனம்" என எடுத்துக் கொண்டாலும், மற்றொரு தரப்பு "ஒரு பெண் கலைஞரை பொதுவெளியில் இப்படிச் சொல்லக் கூடாது" என கடுமையாக எதிர்த்து வருகிறது.
பழைய குற்றச்சாட்டு மீண்டும்
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய காலத்தில், போட்டியாளர்களிடம் நேரடியாக கேள்விகள் கேட்டு சிக்கலில் சிக்க வைப்பார் என்ற விமர்சனம் விஜய் சேதுபதி மீது இருந்தது.
அதே பாணியில் இப்போது கூட பேசுகிறார் என்ற குற்றச்சாட்டை சிலர் முன்வைக்கிறார்கள்.
"அந்த நிகழ்ச்சியில் போலவே, மற்றவர்களை பேச விடாமல் முகத்துக்கு நேராக விமர்சனம் செய்வது சரியா?" என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தேவையில்லாத வன்மம்
பார்வதி ரசிகர்கள் இதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். "ஒரு வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகையை இப்படிப் பொதுவெளியில் விமர்சிப்பது தேவையில்லாதது" என்றும்,"இது ஒரு விதமான தனிப்பட்ட தாக்குதல் போல உள்ளது" என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், "இன்னும் தன்னை பிக் பாஸ் தொகுப்பாளராகவே நினைத்துக்கொண்டு பேசுகிறாரா?" என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காட்டான் வெப் சீரிஸ் என்ன ஸ்பெஷல்?
இந்த சர்ச்சைக்கு மத்தியில், "காட்டான்" வெப் சீரிஸும் கவனம் ஈர்த்துள்ளது. கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த தொடரில், மனித உணர்வுகள், சமூக மோதல்கள் மற்றும் தனிநபர் மனநிலைகளை மையமாக வைத்து கதை நகரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்போது இந்த சர்ச்சை அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியிருக்கிறது.
சர்ச்சை ஆகுமா?
சினிமா உலகில் சர்ச்சைகள் பல நேரங்களில் படத்திற்கு கூடுதல் கவனம் ஈர்க்கும். அதேபோல், இந்த விவகாரமும் "காட்டான்" வெப் சீரிஸுக்கு ஒரு வகையில் பிரசாரமாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருபுறம் ஆதரவு, மறுபுறம் எதிர்ப்பு - இப்படி இரண்டு தரப்பாக பிரிந்துள்ள ரசிகர்கள் மத்தியில், விஜய் சேதுபதி மீண்டும் ஒரு முறை ஹாட் டாபிக்காக மாறியுள்ளார். இப்போது அனைவரும் காத்திருப்பது ஒன்று தான்.. இந்த சர்ச்சைக்கு அவர் நேரடியாக பதில் தருவாரா? அல்லது அமைதியாக கடந்து செல்வாரா?
-
Youth OTT: ஓடிடியில் வெளியாகும் யூத் படம்! எப்போ, எதில் பார்க்கலாம்? கென் கருணாஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications