siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகரை நள்ளிரவில் அரெஸ்ட் செய்த போலீஸ்.. பின்னணி காரணம் இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீ தேவா என்பவரை போலீஸ் கைது செய்திருக்கிறது. அது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் டிஆர்பியில் நல்ல வரவேற்பு பெற்றுக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். சமீப காலமாக இந்த சீரியலில் ஒரு சில காட்சிகளையே வந்து கொண்டிருக்கிறது என்பது ரசிகர்களுக்கு வருத்தம் தான். ஆனாலும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது.

ஒரு பக்கம் ரோகிணி மாட்ட வேண்டும் அவரை பற்றிய உண்மைகள் வீட்டிற்கு தெரிய வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றம் கொடுப்பது போல இந்த உண்மை மீனாவிற்கு மட்டுமே தெரிந்திருக்கிறது.. மீனாதான் தியாகி ஆச்சே வழக்கம் போல இந்த உண்மையை வீட்டில் சொல்லாமல் நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, இந்த சீரியலில் மனோஜ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீதேவா நேற்று இரவு ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதில், இரவு நேரத்தில் ஒரு போலீஸ் ஜீப்பில் போலீஸ் அதிகாரிகள் ரொம்ப நேரமா தெருவில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்ன நடந்தது என்று நாம போய் பார்க்கலாம் என்று தன் கூட இருந்தவர்களை வீடியோ எடுக்க சொல்லிவிட்டு அங்கிருந்த போலீஸிடம் சென்று என்ன சார் ரொம்ப நேரமா இங்கேயே நிற்கிறீங்க என்று ஸ்ரீதேவா கேட்கிறார்.
அதற்கு உள்ளே இருந்த போலீஸ்காரர்கள் கோபப்பட்டு நீ யாரு? இங்கே எதற்காக வந்து பேசுற என்று கேட்கிறார்கள். அதற்கு ஸ்ரீதேவா நீங்க தான சார் ரொம்ப நேரமா அங்க இருக்கிறீங்க, அதனாலதான் கேட்கிறேன். எனக்கு பக்கத்து வீடுதான் என்று சொன்னதும் அங்கிருந்த போலீஸ்காரர்கள் கோபமாகி ஸ்ரீதேவாவை வண்டிக்குள் இழுத்து போட்டு அரெஸ்ட் செய்து கூட்டிக்கொண்டு போவது போல இருக்கிறது. ஆனால் இது நிஜமாக நடந்த சம்பவமா? அல்லது இதுவும் சூட்டிங் வீடியோவா என்று ஸ்ரீதேவா அதில் குறிப்பிடவில்லை.
இது குறித்து ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவில் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். என்னாச்சு இது ரீலா? அல்லது ரியலா? என்று கேட்டு வருகிறார்கள். ஆனால் அது ரியல் இல்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. உள்ளிருக்கும் சில போலீஸ் உடை அணிந்தவர்கள் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஸ்ரீ தேவாவும் இப்படி தெருவில் இருக்கும் போலீஸ்காரர்களிடம் சென்று விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் இவர் வழக்கம் போல பிராங்க் பண்ணுகிறார் பிரண்ட்ஸ் என்று கமெண்ட்கள் குவிகிறது.
சிறகடிக்க ஆசை: நான் தான் கல்யாணி, உண்மையை சொன்ன ரோகிணி.. கோபத்தில் முத்து! ஆடிப்போன விஜயா
சீரியலில் தான் இவர் கோக்குமாக்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் என்றால் நிஜத்திலும் இப்படியே இருக்கிறாரே.. இந்த மனுஷனுக்கு எப்போ தான் புத்தி வருமோ என்று சிலர் அலுத்துக் கொள்வதையும் பார்க்க முடிகிறது. அதோடு ரோகிணி பற்றிய உண்மைகள் தெரியும் போது என்ன முடிவெடுப்பீங்க மனோஜ் என்றும் சிலர் ஆர்வத்தோடு சீரியல் பற்றியும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்











Click it and Unblock the Notifications