சர்வைவரில் ஜெயித்த பணம் இன்னும் கைக்கு வரவில்லை..அதுக்குள்ள இப்படியா??விரக்தியில் விஜி
சென்னை: சர்வைவர் நிகழ்ச்சியில் வின்னராக ஜெயித்து இருக்கும் விஜயலட்சுமி நிலைமையை பார்த்து ரசிகர்கள் பரிதாபப்பட்டு வருகின்றனர்.
Recommended Video
கஷ்டப்பட்டு ஜெயித்த பணம் இன்னும் கைக்கு வராத நிலையில் அதை பற்றி பலர் பல விதமாக பேசுவது விஜயலட்சுமிக்கு வேதனையை கொடுத்துள்ளதாம்.
தன்னைப்பற்றி நெகட்டிவ் கமெண்டுகள் வருவதற்கு காரணம் ஒரு சிலர்தான் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

முடிவடைந்த சர்வைவர் ஷோ
ஜீ தமிழில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ முடிவடைந்து விட்டாலும் அதைப் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளத்தில் நாள்தோறும் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. பல நேரங்களில் பல செய்திகள் பரபரப்பு கூட்டுவது போல தான் தற்போதைய சர்வைவர் நிகழ்ச்சியின் செய்திகளும் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருந்தது. முதல்மறையாக பிரம்மாண்டமாக ஒளிபரப்பப்பட்ட இந்த ரியாலிட்டி ஷோ பார்ப்பதற்காகவே பலர் ஆர்வத்தோடு காத்திருந்தனர்.

ஒரு கோடி பரிசு
சர்வைவர் நிகழ்ச்சியில் திரைத்துறையினர் மட்டுமல்லாமல் விளையாட்டுத் துறையினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்க. அதில் அதிகமானோர் திரைத்துறையினர் ஆக இருந்தனர். மாடலிங் செய்பவர்களாக இருந்தாலும் பலருக்கும் தற்போது பரிச்சயமாகி விட்டனர். இந்த போட்டியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகி கடைசி வரைக்கும் இருந்து முதல் இடத்தை பிடித்து ஜெயிக்கும் நபருக்கு ஒரு கோடி பரிசு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பரிசுக்காகவும் தங்களுடைய திறமையை காட்டுவதற்காகவும் போட்டியாளர்கள் ஆரம்பத்திலிருந்து கடைசி நாள் வரைக்கும் போராடிக் கொண்டிருந்தார்கள்.

வெறித்தனமான டாஸ்க்குகள்
சர்வைவர் நிகழ்ச்சி வேறு எந்த நிகழ்ச்சியை போன்றும் இல்லாமல் ரியாலிட்டி ஷோ என்றால் இதுதான் என்று சொல்கின்ற மாதிரியாகத்தான் இருந்தது என்று பல்வேறு தரப்பினரும் கூறிவந்தனர். போட்டிகள் எல்லாமே வெறித்தனமான டாஸ்க்குகளாக இருந்தது. தங்களுடைய உடல் மட்டுமல்லாமல் மனதையும் தைரியமாக வைத்துக்கொண்டு இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். ரியாலிட்டி ஷோ என்றால் கூட்டமாக அமர்ந்து கொண்டு வெட்டி கதை பேசி கொண்டு இருப்பது இல்லை இது என்று வேறுவிதமாக காட்டப்பட்டது. அன்றாட மற்றும் அடிப்படை தேவைகளை பெறுவதற்காக போட்டியாளர்கள் வெற்றி பெற்றால் மட்டுமே அடைந்து வந்தனர்.

பணமே வரவில்லை....
ஆரம்பத்திலிருந்து எத்தனையோ முறை சருக்குகள் ஏற்பட்டு இருந்தாலும் விஜயலட்சுமி தன்னுடைய திறமையினால் தொடர்ந்து முன்னேறி இந்த நிகழ்ச்சியின் வின்னர் ஆக மாறிவிட்டார். இவர் ஒரு கோடி பரிசு தொகையை பெறுவதற்கு தகுதியானவராக அறிவிக்கப்பட்டதும் பலருக்கு ஏற்றுக்கொள்ள முடியாமல் இவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். அதைப் பற்றி கூறும் போது என்னை பிடிக்காதவர்கள் பணம் கொடுத்துதான் இப்படி நெகட்டிவ் கமெண்டுகளை அனுப்ப சொல்லி வருகிறார்கள் என்று கூறியிருக்கிறார். தான் வெற்றி பெற்ற ஒரு கோடி ரூபாய் இன்னும் கைகளில் கிடைக்கவில்லை போட்டியில் ஜெயிக்கும் போதே நிகழ்ச்சி முடிந்து இரண்டு மாதங்களுக்கு பிறகுதான் பணம் அனைத்து நடவடிக்கைகளையும் முடித்து கைக்கு கிடைக்கும் என்று கூறியிருந்தனர். அதன்படி கிடைப்பதற்கு இன்னும் கொஞ்சம் நாட்கள் ஆகும் என்று கூறியிருந்தார். அதற்குள் பலவிதமான கருத்துக்களை தம்மைப் பற்றி பேசி வருவதாக வருத்தத்தோடு கூறியிருக்கிறார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications