ரோஜா சீரியலை விட்டு விலகும் நடிகை..!! இனி கதையே மாறப்போகிறது..மறுபடியும் முதலில் இருந்தா..??
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் தற்போது அணு கேரக்டரில் நடித்து வந்த வி ஜே அக்ஷயா விலகப் போகிறார் என்ற செய்திகள் பரவி வருகிறது.
அணு கேரக்டரில் ரோஜா சீரியலில் வில்லியாக அக்ஷயா நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் தற்போது கர்ப்பமாக இருப்பதால் இந்த முடிவா? ?என ரசிகர்கள் குழப்பத்தோடு கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். ஆனால் அதற்கு அவர் தெளிவாக பதிலை கூறியிருக்கிறாராம்.

நெடுந்தொடர்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பல நேரங்களில் நெடுந்தொடர்களாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வரிசையில் இடம் பிடித்துக் கொண்டிருக்கும் ரோஜா சீரியலும் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பதாம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது வரைக்கும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான இடத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். தொடர்ந்து இத்தனை வருடம் பார்த்து வந்தாலும் இதனை பார்ப்பதற்காகவே பல பேர் காத்திருக்கிறார்களாம். சமூக வலைத்தளத்திலும் இந்த சீரியலுக்கு அதிகமான ஃபாலோவர்ஸ் இருந்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்களும் இருந்து வருகிறார்கள்.

ஷாமிலி விலகல்
சீரியலின் கதாநாயகியாக பிரியங்கா நல்கரி நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சிபு சூரியன் நடித்து வருகிறார் .இவர்களுக்கு வில்லி கேரக்டரில் அணு கேரக்டரில் ஆரம்பத்தில் ஷேமிலி நடித்து வந்தார். அவர் கர்ப்பமாக இருந்த காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து கடைசி நேரத்தில் விலகி இருந்தார். ஆனால் பிரசவத்திற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரைக்கும் இந்த சீரியலில் அவர் தொடர்ந்து நடித்து வந்தார். அவருக்கு பதிலாக அனு கேரக்டரில் விஜே அக்ஷயா நடித்துக் கொண்டிருக்கிறார்.

மகிழ்ச்சியான செய்தி
தற்போது அணுவாக நடிக்கும் விஜே அக்ஷயாவும் கர்ப்பமாக இருப்பதால் தொடர்ந்து இந்த சீரியலில் நடிப்பாரா இல்லையா என்று பலரும் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர். அக்ஷயா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமூக வலைதளத்தில் போட்டோ சூட் நடத்தி போட்டோக்களை வெளியிட்டு கூறியிருந்தார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர் தொடர்ந்து சீரியலில் நடிப்பாரா என்று பலர் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

மாறப்போகும் கதை
விஜே அக்ஷயா தான் கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் இந்த சீரியலில் நடித்து வருவதால் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், தான் இப்போது தான் ஏழு மாதமாக கர்ப்பமாக இருப்பதாக இருப்பதாகவும் தொடர்ந்து இந்த சீரியலில் நடித்து வருவேன் என்றும் கூறியிருக்கிறார். இதனால் ரசிகர்களின் மத்தியில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஷாமிலி ஜெயிலில் இருக்கும்போது தான் மாற்றப்பட்டார். அதுபோல, தற்போது அணுவின் கேரக்டரை ஜெயிலில் இருப்பது போன்று வைத்துவிட்டு அவருடைய கேரக்டரை கொஞ்ச நாட்களுக்கு இல்லாமல் வைத்து விட்டு புதியதாக வேற கேரக்டர்களில் வில்லத்தனத்தை ஏற்படுத்தி விடுவார்கள் என்று கூறி வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications