நடிகர் ஜெய் தலைமறைவு: கைது செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நடிகர் ஜெய்யை 2 நாட்களுக்குள் கைது செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் ஜெய்யை 2 நாட்களுக்குள் கைது செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை 28, எங்கேயும் எப்போதும், சுப்பிரமணியபுரம், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ஜெய். இவர் கடந்த செப்டம் 21ஆம் தேதி அதிகாலை குடிபோதையில் தனது ஆடி காரை ஓட்டிச் சென்றார்.

அளவுக்கு அதிகமாக மதுக்குடித்திருந்த அவர், கட்டுப்பாட்டை இழந்து அடையாறு பாலத்தின் தடுப்புச்சுவரில் காரை மோதினார். இந்த விபத்தில் அதிர்ஷடவசமாக அவர் உயிர் தப்பினார்.
இதுதொடர்பான வழக்கில் நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று முன்னிலையாக வேண்டும். ஆனால் நேற்று முன்னிலையாகததால் சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.
ஆனால் இன்றும் நடிகர் ஜெய் முன்னிலையாகவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்த 2 நாட்களுக்குள் நடிகர் ஜெய்யை கைது செய்து ஆஜர்படுத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நடிகர் ஜெய் தொடர்பான வழக்கு அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications