"அசல் கோலார் ”பற்றி ட்விட் போட்ட "ப்ளூ சட்டை மாறன்”.. பிக் பாஸ் நிகழ்ச்சியை இப்படி கலாய்ச்சிட்டாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதுவரைக்கும் திரைப்படங்களை விமர்சித்து வந்த ப்ளூ சட்டை மாறன் முதல் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர் அசல் கோலார் பற்றி ரசிகர்களிடம் கருத்து கேட்டு ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட பதிவு பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

எதிர்பார்க்க வைத்த சீசன்

எதிர்பார்க்க வைத்த சீசன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் கிடைத்த அமோகமான வரவேற்பு காரணமாக ஆறாவது சீசன் அடி எடுத்து வைத்திருக்கிறது .ஒவ்வொரு சீசன் தொடங்குவதற்கு முன்பே இந்த நிகழ்ச்சியை பற்றி பல்வேறு எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் பிக் பாஸ் அணியினர் ஏற்படுத்தி விடுகின்றனர் .அந்த மாதிரி தான் தற்போதைய ஆறாவது சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பற்றி ஆரம்ப முதலே ரசிகர்கள் மத்தியில் பல்வேறு யூகங்கள் கிளம்பி வந்தது.

பஞ்சமில்லாத பிரச்சனைகள்

பஞ்சமில்லாத பிரச்சனைகள்

அதில் யாரும் எதிர்பார்க்காத ஒரு போட்டியளாக அசல் கோலார் அறிமுகமாகி இருக்கிறார் . இவர் ஒரு கானா பாடகராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பல்வேறு தரப்பட்ட துறையில் இருந்து இந்த நிகழ்ச்சியில் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர் .இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த நிகழ்ச்சியை பற்றி பல்வேறு சர்ச்சைகளும் கிளம்பி கொண்டிருக்கின்றது. அந்த மாதிரி தான் தற்போது அசல் கோலார் சகப் பெண் போட்டியாளர்களிடம் செய்யும் சில்மிஷங்கள் ரசிகர்கள் மத்தியில் முகசூழிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ப்ளு சட்டை மாறன் பதிவு

ப்ளு சட்டை மாறன் பதிவு

ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும், அசல் கோளாறு பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த அந்த வகையில் திரைப்படங்களை ரிவ்யூ செய்து வரும் ப்ளூ சட்டை மாறன் தற்போது அசல் கோலார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் செய்யும் சில்மிஷ வீடியோ ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதற்கு, பிக் பாஸ் தமிழ் வேற லெவலுக்கு குனிகிறார், அசல் கோளாறு பற்றி உங்கள் கருத்து என்ன? "என்று கேப்ஷன் கொடுத்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்களில் பலர் அசல் கோலார் மீது கொலவெறியில் இருக்கும் ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்ததும் கண்டமேனிக்கு கலாய்த்து வருகின்றனர். அதிலும் பல ரசிகர்கள் இதைப்பற்றி எல்லாம் கமல் சார் கேக்கணும் ஆனா கேட்பாரா ?என்று தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்கள்.

ரசிகர்களின் சலிப்பான வார்த்தைகள்

ரசிகர்களின் சலிப்பான வார்த்தைகள்

இன்னும் ஒரு சில ரசிகர்கள் அசல் கோலார் சக போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட வேறு சில வீடியோக்களையும் அதில் பகிர்ந்து வருகிறார்கள். அதோடு மட்டுமில்லாமல், நல்லா ஓடும் திரைப்படத்தையே குறை கண்டுபிடிக்கும் ப்ளூ சட்டை மாறன் முதல் முறையாக ஒரு நல்ல வேலையை செய்திருக்கிறார். இதன் மூலமாகவது கமல் மற்றும் விஜய் டிவிக்கு அசல் கோலார் பற்றி நடவடிக்கை எடுத்தால் சரி என்று பலரும் சலித்தபடியே கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+