ஆலியா மானசாவிற்கு ஏற்பட்ட திடீர் விபத்து.. அவரே வெளியிட்ட வீடியோ.. இந்த நிலைமையிலா இருக்கிறார்!?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கதாநாயகி ஆலியா மானசாவிற்கு திடீரென விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
விபத்தில் தன்னுடைய கால்களில் அடிபட்டிருக்கும் நிலையில் தன்னுடைய ரசிகர்களிடம் உருக்கமான வேண்டுகோளை வைத்திருக்கிறார்.
எப்போதும் துரு துருவென இருக்கும் ஆலியா மனசா திடீரென காலில் அடிபட்டிருக்கும் வீடியோ வெளியானதும் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ஹாஸ்பிடலில் இருந்து வீடியோ
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் அறிமுகமான ஆலியா மானசா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலின் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தான் குழந்தை பிறந்த பிறகு கதாநாயகியாக நடிக்க அறிமுகமானார். இந்த நிலையில் ஆலியா மானசாவின் கால்களில் அடிபட்டு பெரிய கட்டு போடப்பட்டிருக்கிறது. தன்னுடைய கால்களில் எப்படி அடிபட்டது என்பதை தெரிவிக்காத ஆலியா மானசா, ஹாஸ்பிட்டலில் இருந்தபடியே கால்களில் கட்டு போட்டிருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் உருக்கமான வார்த்தைகளை பகிர்ந்து இருக்கிறார்.

உருக்கமான வேண்டுகோள்
நான் எதிர்பார்க்காத ஒன்று என்னுடைய வாழ்க்கையில் நடந்து விட்டது. கால்களில் பிராக்சர் ஆகி இருக்கிறது. என்னுடைய பிரண்ட்ஸ் மற்றும் என்னுடைய அன்பான ரசிகர்கள் எனக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் எளிமையாக குணமடைய வேண்டும் என சோகத்தோடு ஆலியா மானசா வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நேற்று வரைக்கும் டான்ஸ் மாஸ்டரோடு செம ஆட்டம் போட்ட ஆலியா மானசா இன்று கால்களில் கட்டு போட்டுக்கொண்டு இருக்கும் நிலையை பார்த்து ரசிகர்கள் பீல் பண்ணி கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

சன் டிவி இனியா
ஆலியா மானசா சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாகவே இருந்து வருகிறார். இவருக்கு instagram பக்கத்தில் 4.2மில்லியன் பாலோவர்ஸ் இருக்கின்றனர். முதல் சீரியலில் தன்னோடு நடித்த சஞ்சய் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆலியா சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் ஆலியா கடைசியாக நடித்து வந்த ராஜா ராணி சீசன் 2 சீரியலில் இருந்து விலகி இருந்தார். குழந்தை பிறந்ததும் உடல் எடை கூடியிருந்த ஆலியா மானசா மீண்டும் தன்னுடைய உடல் எடையை கஷ்டப்பட்டு குறைத்து பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறார். இந்த நிலையில் இவர் மீண்டும் விஜய் டிவி சீரியலில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் அந்த சீரியலை விட்டுவிட்டு சன் டிவிக்கு வந்து விட்டார்.

ரசிகர்களின் ஆறுதல்கள்
சன் டிவியில் இனியா சீரியலில் ஆலியா நடிக்கிறார் என்ற செய்தி வெளியானதும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியிருந்தது சீரியல் ஆரம்பித்து ஒரு சில நாட்களே ஆன நிலையில் இந்த சீரியலும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து விட்டது. அதனாலே டிஆர்பி யில் யாரும் எதிர்பார்க்காத வகையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆலியா மானசா வெளியிட்ட ஸ்டோரிக்கு ரசிகர்கள் பலர் ஆறுதல் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications