ரோஜா சீரியல் நடிகைக்கு பெண் குழந்தை பிறந்தது.... என்ன ஒரு பொருத்தம் சீரியலுக்கும் நடிகைக்கும்!?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் அனு கேரக்டரில் நடித்து வந்த விஜய் அக்ஷயாவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
வி ஜே அக்ஷயாவுக்கு பிரபலங்கள் மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி குழந்தைக்கு ஆசீர்வாதங்களையும் பொழிந்து வருகின்றனர்.

வரவேற்ற வணக்கம் தமிழ்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியின் மூலமாக பல செலிப்ரட்டிகளை பேட்டி எடுத்த வீஜே அக்ஷயா தற்போது ரோஜா சீரியலில் வில்லி கேரக்டரில் அனைவரையும் மிரட்டி கொண்டிருக்கிறார். தன்னுடைய படபடப்பான பேச்சாளும் ஜாலியான கேரக்டராலும் ரசிகர்களை மட்டுமல்லாமல் பிரபலங்களையும் அக்ஷயா கவர்ந்துள்ளாராம். அதனால் இவர் ரோஜா சீரியலில் செய்யும் வில்லத்தனத்தை கூட ரசிகர்கள் பல முறை மன்னித்து விடுகிறார்களாம். ரோஜா சீரியலில் ஏற்கனவே நடித்து வந்த ஷாமிலி கர்ப்பமாக இருந்த காரணத்தினால் இந்த சீரியலை விட்டு விலகிய இருந்தார். இந்த நிலையில் ஷாமிலிக்கு பதிலாக அக்ஷயா வந்ததும் ஆரம்பத்தில் ரசிகர்கள் இவர் இந்த கேரக்டருக்கு செட் ஆவாரா?? என்று தான் கேள்விகளை எழுப்பி வந்தார்களாம்.

திட்டும் ரசிகர்கள்
அனு கேரக்டரில் வில்லியாக அக்ஷயா நடிப்பதால் பல நெகட்டிவ் கருத்துக்களை பெற்றுக் கொண்டிருக்கிறார். இவரை திட்டி தீர்க்காதவரே இருக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பல பேருடைய திட்டல்களை வாங்கிக் கொண்டு இருக்கிறார். சீரியலில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை தெரியாத பலரும் இவர் வெளியே செல்லும் இடங்களில் கூட இவரை பார்த்து முறைத்துக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டு செல்வதாக ஒரு பேட்டியில் இவரே குறிப்பிட்டுயிருக்கிறார். இந்த நிலையில் இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தார்.

இப்படி ஒரு ஒற்றுமையாம்
இந்த நிலையில் தற்போது விஜே அக்ஷயாவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது .அந்த குழந்தை பிறந்த நேரத்தில் தான் ரோஜா சீரியலில் ரோஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த நிலையில் ரோஜா சீரியலில் சில நாட்களாகவே அணு கேரக்டரை காட்டாமல் வைத்து வருகின்றனர். அவருக்கு பதிலாக ரோஜாவை சுற்றி கதைக்களம் வலம் வருகிறது. அதுமட்டுமல்லாமல் புதியது புதியதாக பலர் வில்லி அவதாரம் எடுத்து வருகின்றனர். தொடர்ந்து இனி விஜே அட்சயா சீரியலில் நடிப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பை எதிர்பார்த்து வருகின்றனர்.

இரண்டு அனுக்கும் பெண் குழந்தை
இந்த நிலையில் ஏற்கனவே விஜே அக்ஷயா தான் மீண்டும் சீரியலில் நடிக்க வருவேன் இதிலிருந்து விலகும் எண்ணம் இல்லை என்று கூறி இருக்கிறார். அணு கேரக்டரில் நடித்து வந்த ஷாமிலிக்கும் இதே போல பெண் குழந்தை தான் பிறந்திருந்தது .இந்த சீரியலில் அனுவாக நடித்துக் கொண்டிருக்கும் போது அவரும் கர்ப்பமாக இருந்ததால் சீரியலில் இருந்து கடைசியில் விலகி இருந்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது கடைசி வரைக்கும் அனு கேரக்டரில் விஜே அக்ஷயா நடித்து வந்த நிலையில் அவருக்கும் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால் மீண்டும் இவரை தொடர்வேன் என்று கூறியிருக்கிறார்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications