திடீரென அமீர் வெளியிட்ட பதிவு... மெய்சிலிர்த்த பாவனிக்கு அஷ்ரப் அட்வைஸ்.. வெளிப்படையாக சொல்லிட்டாரே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாவனி ரெட்டியை குறித்து தற்போது அமீர் வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளத்தில் பலருடைய கவனத்தையும் பெற்று இருக்கிறது.
பிக் பாஸ் நான்காவது சீசனின் மூலமாக போட்டியாளர்களாக அறிமுகமாகி தற்போது காதலர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் பாவனி ரெட்டி மற்றும் அமீர் சமூக வலைத்தளத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்களை கொண்டாடி வருகின்றனர் .

சின்னத்தம்பி நந்தினி
விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியலின் மூலமாக சின்னத்திரை ரசிகர்களில் நந்தினியாக வலம் வந்து கொண்டிருந்த பாவனி அந்த சீரியலுக்கு பிறகு ஒரு சில நாட்கள் சீரியலில் நடிக்காமல் இருந்து வந்தார். ஆனாலும் சமூக வலைத்தளத்தில் போட்டோ ஷூட் மூலமாக ஆக்டிவாக இருந்து வந்தார் .சின்னத்திரை ரசிகர்களை காட்டிலும் இவருக்கு இணையதளத்தில் அதிகமான ரசிகர்கள் இருந்து வந்தனர். அதனால் இவர் பிக் பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொள்கிறார் என்றதும் ஆரம்பம் முதலே இவருக்கு அமோகமான வரவேற்பை கொடுத்து வந்தனர்.

நான்காவது சீசன் காதலர்கள்
பிக் பாஸ் நான்காவது சீசனில் தன்னுடைய சோக கதையில் தன்னுடைய முதல் கணவர் குறித்தும் அவருடைய மரணத்தை குறித்தும் உருக்கமாக பேசி ரசிகர்களின் மத்தியில் மேலும் அனுதாபங்களை பெற்றுவிட்டார் .அதற்கு பிறகு அந்த சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த அமீர் இவருடன் நெருங்கி பழகி வந்த நிலையில் பலர் இவர்களுடைய வாழ்க்கை இணைந்து வாழ வேண்டும் என்று கருத்து கூறி வந்தனர். அமீர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலே பாவனியை காதலிக்கும் விஷயத்தை அடிக்கடி கூறி வந்தார் .ஆனால் அப்போது பாவனி அதை ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வந்தார்.

சமூக வலைத்தளத்தில் காதல் பதிவு
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு அந்த சீசனின் டைட்டிலையும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற நாளில் தன்னுடைய காதலை instagram மூலமாக அமீருக்கும் மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் பாவனி வெளிப்படுத்தி இருந்தார். அதற்கு பிறகு எங்கே சென்றாலும் இந்த ஜோடி இருவரும் ஒன்றாக வலம் வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சில வாரங்களுக்கு முன்பு இவர்கள் வெளிநாடுகளில் ஒன்றாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர். தற்போது பாவனியின் பிறந்தநாளுக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்படுத்தலாமா
அமீர் தன்னுடைய பதிவில், என் அன்பே உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீ பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறாய்,நீ எப்போதும் என்னை மிகவும் மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்கிறாய், அதனால் இன்றைக்காவது உனக்கு அதை திருப்பி செய்ய நினைக்கிறேன் எனவே இன்று ஒரு நாளாவது உட்கார்ந்து ஓய்வெடுத்து நாள் முழுவதும் சந்தோஷம் உன்னை பற்றி கொள்ளட்டும். என் வாழ்க்கையில் நீ கிடைத்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி .இன்று உன்னுடைய சிறப்பு நாளில் நீ எனக்கு எவ்வளவு அர்த்தம் என்பதை நான் உனக்கு காட்ட முடியும் என்று நம்புகிறேன். உனக்கு வாழ்த்துக்கள் மற்றும் ஒரு அற்புதமான நாள். என் அதிகமான காதல் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருக்கிறார் .இந்த பதிவிற்கு பாவனி லவ் யூ லாட்ஸ் என பதில் அளித்துள்ளார். ஆனால் அமீரின் வளர்ப்பு தந்தையான அஷ்ரப் இந்த பதிவில்" Chiiiku" என்று பாவனியை செல்லமாக அழைத்ததை குறித்து ,அது யார் என்று செக் பண்ணுங்கள் பாவனி சில நேரங்களில் வேறு யாராவது இருந்திட போகிறார்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் நல்லா இருக்கிற குடும்பத்திற்குள் பிரச்சனையை வீட்டுக்குள் இருப்பவர்களே ஏற்படுத்திவிட வேண்டாம் என்று அறிவுரை கூறி வந்தாலும், பாவனி கவனம் முக்கியம் என்று செல்லமாக கூறி வருகிறார்கள்.
-
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு?












Click it and Unblock the Notifications