என் சோகத்தை சொன்னால் உலகம் தாங்காது.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜிபி முத்துவின் உருக்கமான பதிவு
சென்னை: என் நிலைமையை நினைச்சா கவலையா இருக்கு, என் சோகத்தை சொன்னா இந்த உலகமே தாங்காது என்று ஜிபி முத்து பேசிய வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று பலரும் அறிவுரை கூறிய நிலையில் அதற்கெல்லாம் செவி சாய்க்காத ஜி பி முத்து இப்ப மட்டும் எதற்காக இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டார் என்று பலரும் அவர் மீது கோபமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஜி பி முத்துவின் முடிவு
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஆறாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட ஜிபி முத்து ரசிகர்கள் அதிகமான ஆதரவு கொடுத்து வந்த நிலையில் திடீரென்று இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டார். ஆரம்பம் முதலே இவர் நிகழ்ச்சியில் இருந்தால் சிறப்பாக இருக்கும் நிகழ்ச்சிக்கு என்டர்டைன்மென்ட் கிடைக்கும் என்று பலரும் கூறி வந்த நிலையில் ஜிபி முத்துவின் வெளியேற்றம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதுவும் இந்த நிகழ்ச்சியில் இவர் இருந்தால் இவர்தான் இந்த சீசன் டைட்டில் வின்னர் என்று அனைத்து தரப்பட்ட ரசிகர்களும் ஆணித்தனமாக கூறி வந்த நிலையில் ஜிபி முத்து எடுத்த அதிரடியான முடிவு பலருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாததாக தான் இருந்து வந்தது.

கோபப்பட வைத்த வீடியோ
இந்த ஆறாவது சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 20000 திற்கும் மேற்பட்டோர் தாங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக விருப்பம் தெரிவித்து வீடியோ வெளியிட்ட நிலையில், இதில் ஒரு போட்டியாளராக கலந்து கொள்வதற்கு ஜி பி முத்துவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் முதல் ஆளாக இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டதும், திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் தன்னுடைய குடும்பத்தை பார்க்க வேண்டும் தன்னுடைய மகன் நினைவு அதிகமாக இருக்கிறது என்று வெளியேறிய ஜிபி முத்து தற்போது வெளியிட்ட உருக்கமான வீடியோ தான் ரசிகர்களை மேலும் கோபப்பட வைத்திருக்கிறது.

பங்கம் செய்த மனைவி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜி பி முத்து அறிமுகமாகாமல் இருந்திருந்தால் அந்த 20000 போட்டியாளர்களில் வேறு எவருக்காவது அந்த இடம் கிடைத்திருக்கும். ஆனால் இவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டு வாரத்தில் வெளியேறி ஒரு இடத்தை வேஸ்ட் ஆக செலவழித்து விட்டார் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் தற்போது என் மனதில் இருக்கும் சோக கதைகளை சொன்னால் இந்த உலகமே தாங்காது அவ்வளவு சோகத்தை நான் மனதிற்குள்ளே வைத்திருக்கிறேன். பலரையும் சிரிக்க வைத்த நான் இப்படி சோகத்தில் இருப்பதற்கு காரணத்தை யாராவது கேளுங்கள் என்று இவர் வெளியிட்ட வீடியோவில் தனது மனைவியிடம் கெஞ்சி கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய மனைவி கடும் கோபத்தில் இவரை திட்டி விடுகிறார்.

தெரித்து ஓடிய ஆனந்த் தம்பி
உங்கள நாங்களா பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வர சொன்னோம். நாங்க உள்ள இருங்கன்னு தானே சொன்னோம். ஆனா நீங்க வெளியே வந்துகிட்டு இப்படி எல்லாம் சொல்லலாமா? என்று உங்க சோக கதையை நான் கேட்க மாட்டேன் என்று செல்லமாக கோபிக்கிறார். என் நிலைமையை நினைச்சா கவலையா இருக்கு என்று ஜிபி முத்து பீல் பண்ணி சொல்லும் போது அருகில் இருந்த அவருடைய ஆனந்த் தம்பியும் தலை தெறிக்க ஓடுகிறார். யாருமே இவருடைய கதையை கேட்பதற்கு தயாராக இல்லை என்பதை பார்த்த ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து கலாய்த்து சிரித்து வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications