மணிகண்டனுக்கு ரெட் கார்ட்!? காரணம் இதுதானாம்? விதிமுறையை மீறிய செயலுக்காக தண்டனை!?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் மணிகண்டன் விதி மீறலில் ஈடுபட்டதாக வீடியோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் போட்டியாளர்கள் எந்த ஒரு எலக்ட்ரானிக் பொருட்களையும் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதிகளை மீறி மணிகண்டன் செய்த செயல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்.
மணிகண்டன் தன்னுடைய ஷூ வில் ப்ளூடூத் மாட்டியதை மறைத்து வைத்திருந்ததாக அவர் மீது தற்போது குற்றச்சாட்டுகள் வந்திருக்கிறது.

வெளிப்படும் உண்மையான முகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது ஆறாவது வாரம் அடி எடுத்து வைத்திருக்கின்றது .இந்த நிலையில் போட்டியாளர்கள் தங்களுடைய உண்மையான முகங்களை வெளியே காட்ட தொடங்கி இருக்கின்றனர். ஆரம்ப காலத்தில் எங்களைப் போல யாரும் இல்லை என்று சீன் போட்டுக் கொண்டிருந்த போட்டியாளர்கள் கூட ஒரு சில நாட்களிலேயே தங்களுடைய உண்மையான முகம் இது தான் என்பதை வெளியே காட்டி விட்டனர். எந்த சீசன்களும் இல்லாத வகையில் இந்த ஆறாவது சீசனில் அதிகமான போட்டியாளர்கள் அறிமுகம் ஆகி இருப்பதால் உள்ளே சண்டை சச்சரவுகளும் பிரச்சனைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன்
ஒரு நடிகராகவும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனாகவும் இருக்கும் மணிகண்டன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகம் ஆகியிருக்கிறார். இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே இவருடைய பெயர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று வெளியாகிவிட்டது. இவரை பற்றி எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில நாட்கள் இவர் அமைதியாக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல தன்னுடைய நிஜமான கேரக்டரை காட்ட தொடங்கி விட்டார். சில நேரங்களில் கோபப்பட்டும், சில நேரங்களில் போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறி தன்னுடைய நிஜ கேரக்டரில் வாழ்ந்து வருவதாக கூறி வருகிறார்.

பிக் பாஸ் நடத்திய சோதனை
அதிகமாக மைனா நந்தினியோடு இவர் பழகி வருவதால் மைனா நந்தினியின் கை பொம்மை என்று இவரை ஆரம்பத்தில் கலாய்த்து வந்தனர். ஆனால் தன்னுடைய விளையாட்டுக்கு யார் தடையாக வந்தாலும் அவர்களை நான் எதிர்த்து நிற்பேன் என்று சில நேரங்களில் இவர் காட்டி வருகிறார் .இந்த நிலையில் இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டின் தலைவராகவும் மணிகண்டன் தான் இறுதி வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் அணியினர் இவருடைய பொருள்களை அதிரடியாக சோதனை செய்திருக்கின்றனர் .அதிலிருந்து இவருடைய ஷூவை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றிருக்கின்றனர்.

ரெட் கார்ட் கொடுக்கப்படுமா
மணிகண்டன் ஷூ வில் ப்ளூடூத் வசதி இருப்பதாகவும் அதை செக் செய்வதற்காகத்தான் பிக் பாஸ் அணியினர் எடுத்து சென்றதாக மைனா நந்தினி மற்றும் நிவாஷினி யிடம் கூறிக் கொண்டிருக்கிறார். நான் தன்னுடைய ஷூவில் ப்ளூடூத் வசதி இருப்பதை கூறியதை தொடர்ந்து அவர்கள் ஷூவை எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள். செக் பண்ணி பார்த்துவிட்டு பிறகு கொண்டு தருவார்கள் என்று கூறியிருக்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் யாரும் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வரக்கூடாது என்று விதி இருக்கும் நிலையில் அதையும் மீறி மணிகண்டன் எலக்ட்ரானிக் ப்ளூடூத் ஷூ கொண்டு வந்திருப்பதால் அவருக்கு இந்த வாரம் ரெட் கார்ட் கொடுக்கப்படுமா? என்று நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications