பிக்பாஸில் மீண்டும் கலந்து கொள்வதை குறித்து ஜி.பி முத்துவின் பதில்..இந்த முடிவை இப்பவாவது எடுத்தாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜிபி முத்து தற்போது மீண்டும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? இல்லையா? என்பதை குறித்து தகவல்களை கூறி இருக்கிறார்.

தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியே வந்த ஜி பி முத்து மீண்டும் சில வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதை குறித்து பேசி இருக்கிறார்.

பிக் பாஸ்க்கு ஜிபி முத்து வர வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கருத்துக்கள் கூறிவரும் நிலையில் தற்போதைய பதில் பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

ஜி பி முத்துக்காக வந்த ரசிகர்கள்

ஜி பி முத்துக்காக வந்த ரசிகர்கள்


டிக் டாக் மற்றும் யூட்யூப் மூலமாக சமூக வலைதளத்தில் பலருக்கும் தெரிந்த முகமாக இருக்கும் ஜி பி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே ஜிபி முத்துவிற்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதால் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிகழ்ச்சிக்கு சுவாரசியம் கூடும் என்று பிக் பாஸ் இவரை களம் இறக்கியிருந்தது. பிக் பாஸ் நினைத்தபடியே ஜிபி முத்துவின் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து இவரை ரசிப்பதற்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வந்தார்கள்.

ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்

ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்

ஒரு வாரம் நன்றாக போய்க் கொண்டிருந்த நிகழ்ச்சியில் இரண்டாவது வாரத்தில் ஜிபி முத்து தான் வீட்டை விட்டு வெளியேற வேண்டும். தன் குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தார். இவருடைய இந்த பதிவு ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விருப்பங்களை தெரிவித்து வீடியோக்களை அனுப்பி இருந்த நிலையில் ஜிபி முத்து ஒரு போட்டியாளராக அறிமுகமாகி, இரண்டு வாரத்தில் வெளியே வருவது பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்து வந்தது. இதனாலே பலர் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால், இவருக்கு பதிலாக இன்னொருவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று கருத்து தெரிவித்து வந்தனர்.

ஜி பி முத்துவின் பதில்

ஜி பி முத்துவின் பதில்

தொடர்ந்து ரசிகர்கள் இரு வேறு கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் ஜிபி முத்து தன்னுடைய குழந்தைகளோடு தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். அப்போது தான் சில தவிர்க்க முடியாத காரணங்களால் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. ஆனால் மீண்டும் அதை சரி செய்வதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. பார்ப்போம் இனி நடப்பது என்று கூறியிருக்கிறார். இதனால் இவர் மீண்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மாற்றப்பட்டதா விதிமுறை

மாற்றப்பட்டதா விதிமுறை

இந்த முறை பிக் பாஸ் கண்டிஷனில் போட்டியாளர்கள் விருப்பப்பட்டு வெளியேறி விட்டால் அவர்கள் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழையலாம் என்று ஒரு வரி சேர்க்கப்பட்டிருக்கிறதாம். இது ஜிபி முத்துவுக்காக தான் இருக்குமோ? என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள் .காரணம் ஜிபி முத்து இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே பிக் பாஸ் இடம் கூறிக்கொண்டு தான் வந்தாராம். தன்னால் எத்தனை நாட்கள் உள்ளே இருக்க முடிகிறதோ அது வரைக்கும் தான் இருப்பேன் என்று கூறி இருந்தேன் என்று பலமுறை லைவ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து கூறிக்கொண்டே இருந்தார். இதனால் தான் ஜிபி முத்து இப்படி வெளியேறினாலும் மீண்டும் அவரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் இப்படி ஒரு நிபந்தனையை சேர்த்திருக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+