பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு உருக்கமாக மனைவியை குறித்து பதிவிட்ட அபினய்... அந்த வார்த்தை சூப்பர்!
சென்னை: பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட அபினய் தற்போது தன்னுடைய திருமண நாளில் மனைவியை குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அபினய் தன்னுடைய மனைவியை பிரிந்து விட்டார் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் தற்போது தன்னுடைய திருமண நாள் மகிழ்ச்சியை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.

ஜெமினி கணேசன் பேரன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது .ஆனால் ஒவ்வொரு சீசனிலும் ஒரு பிரச்சனைகளும், வதந்திகளும் ஏற்பட்டு போட்டியாளர்கள் பலர் தங்கள் பெயர்களை கெடுத்துக்கொண்டு சென்றுள்ளனர் .அந்த வகையில் அபினய் ஒருவராக இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு இவரை பற்றி அந்த அளவிற்கு ரசிகர்களுக்கு தெரியாமல் தான் இருந்தது. இவர் நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் என்பது இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகு பலருக்கும் தெரிந்து இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

பாவனியோடு ஏற்பட்ட பிரச்சனை
பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் ஆரம்பத்தில் இருந்து அபினய் அமைதியான போட்டியாளராக இருந்து வந்தார். சில நேரங்களில் தன்னுடைய கருத்தை தைரியமாக முன்வைத்து வந்தார். ஆனால் இவருக்கும் நடிகை பாவனி ரெட்டிக்கும் ஏற்பட்ட மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் மூலமாக இவருடைய பெயர் சமூக வலைத்தளத்தில் அதிகமாக கெட்டுப் போனது .இவர் பாவனி ரெட்டி இடம் நட்பை தாண்டி பழகுவதாக அவர் பீல் பன்னி குற்றச்சாட்டினை வைத்திருந்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் பிற போட்டியாளர்களை விடவும் பாவனியிடம் இவர் அதிகமாக கேரிங் எடுத்துக் கொண்டதால் தான் இப்படி நடந்து விட்டது ஆனால் தனக்கும் அதற்கு ஒன்றும் இல்லை தான் நட்பாக மட்டும் தான் பழகுகிறேன் என்று அபினய் விளக்கம் கொடுத்திருந்தார.

வெளியான தகவல்கள்
பாவனியிடம் இவர் நடந்து கொள்வது சரியில்லை. இவர் பாவனியின் மீது அதிகமாக உரிமை எடுத்துக் கொள்கிறார் என்று இவரைப் பற்றி சமூக வலைத்தளத்தில் பல கருத்துக்கள் நிலவி வந்தது .ஆனால் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே இவர் தன்னுடைய மனைவி மற்றும் மகள் குறித்து அவர்கள் மீது தனக்கு இருக்கும் அன்பை குறித்தும் பேசிக்கொண்டு தான் வந்தார். நிகழ்ச்சியில் இருக்கும் போதும் ஒரு சில நேரங்களில் அவர்களை குறித்து பேசி இருக்கிறார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட சில பிரச்சனைகளுக்கு காரணமாக அபினய் மனைவி இவரை விட்டு பிரிந்து விட்டதாக பல்வேறு தகவல்கள் பரவி வந்தது.

15ஆவது திருமண நாள்
அதையெல்லாம் பொய் என்று சொல்கின்ற மாதிரி பல மாதங்களுக்கு பிறகு அபினய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் இன்று 15 வது திருமண நாள் அதை தன்னுடைய மனைவி மகிழ்ச்சியாக கொண்டாடி அவருக்கு வாழ்த்துக்களையும் கூறி இருக்கிறார். அதில் ,"ஒவ்வொரு ஆண்டும் கற்றுக் கொள்வதற்கும், பெற்றுக் கொள்வதற்கும் ஒரு புதிய அத்தியாயம் உள்ளது. நீங்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை. நீங்கள் எங்கள் திருமணத்தில் தூணாக இருந்தீர்கள், இருக்கிறீர்கள். உங்கள் மீது எனக்கு மரியாதை மற்றும் அன்பை தவிர வேறு எதுவும் இல்லை. எப்போதும் ஆதரவளித்து எனக்கு வழிகாட்டும் ஒளியாக இருப்பதற்கு நன்றி. இதோ இன்னும் பல வருட மகிழ்ச்சி மற்றும் சிறந்த 15 வது திருமண நாள்" என்று பதிவு வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்துக்களை கூறிய வருகிறார்கள்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications