பிட்னஸ் போஸ்ட் போட்டதை கேலி செய்த நபருக்கு விஜே பார்வதி கொடுத்த பதிலடி.. இப்படி கேவலப்படுத்திட்டாரே
சென்னை: சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் விஜே பார்வதி தன்னுடைய புகைப்படத்தை பார்த்து உருவ கேலி செய்த நபருக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். அதை ரசிகர்கள் பலர் பாராட்டி வருகிறார்கள்.
சர்வைவர் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் ஒர்க் அவுட் செய்ய ஆரம்பித்திருக்கும் விஜே பார்வதி அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதை பார்த்த ஒரு நபர் கர்ப்பமான பன்னி மாதிரி இருந்துட்டு பிட்னஸ் போஸ்ட்டா என உருவ கேலி செய்திருக்கிறார். அந்த நபருக்கு மட்டுமல்லாமல் இதைப்போல பேசுபவர்களுக்கும் இதுதான் என்னுடைய பதில் என்று கூறியிருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
ஒரு தொகுப்பாளராகவும் மாடலிங் பெண்ணாகவும் இருக்கும் விஜே பார்வதி youtube சேனல்களிலும் தொகுப்பாளராக இருந்து வருகிறார். இவர் ஒரு ஜர்னலிஸ்ட் ஆக இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். மாடலிங் போட்டோ சூட் நடத்தி திரைப்பட நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கிறார். ஒரு மில்லியன்ஸ்க்கு அதிகமாக ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். பலரும் கேட்க தயங்கும் கேள்விகளை கூட சாதாரணமாக கேட்டு விடுவதால் இவரிடம் பேசுவதற்கே சிலர் பயந்து போய் ஓடி ஓளிகின்றனர்.

ஆதி தான் காரணமாம்
சமூக வலைத்தளத்தில் என்னதான் பிசியாக இருந்தாலும் இவரை நெட்டிசன்கள் பலரும் ஆன்ட்டி என்று அழைத்து வருகின்றனர். அதற்கு காரணமே ஹிப் ஹாப் தமிழா ஆதி தான். ஆதியை விஜே பார்வதி ஒருமுறை பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும் போது அப்போது பார்வதி, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆண்டி யாரையாவது சைட் அடித்து இருக்கீங்களா? என்று கேட்டார். உங்களை பார்ப்பதற்கு முன்னாடி வரை யாரும் இல்லை என்று அதற்கு ஆதி பதில் கூறியிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அந்த வீடியோவை போட்டு பல மீம்ஸ்களையும் கலாய்த்து வந்தனர். அப்போது முதல் இப்போது வரை ஆன்ட்டி என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்

சர்வைவர் நிகழ்ச்சியில் அறிமுகம்
அது மட்டுமில்லாமல் பார்வதியின் கண்ணாடியை பார்த்து பலரும் மியா கலீபாவுடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகிறார்கள். என்னதான் நெட்டிசன்கள் இவரை விதவிதமாக கலாய்த்தாலும், அதை எல்லாம் இவர் தட்டி விட்டுக்கொண்டு சென்று கொண்டே இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவர் சர்வைவர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். அப்போது இவருடைய ரசிகர்கள் பலர் ஆதரவு கொடுத்து வந்தனர். இந்த நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சக போட்டியாளர்களால் இவர் நாமினேஷன் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். ஆனாலும் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு அந்த நிகழ்ச்சியில் இவர் பட்ட கஷ்டங்களை குறித்து விளக்கத்தை கொடுத்திருந்தார். அதைக் குறித்து பலரும் இவருக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்.

சரியான பதிலடி
தற்போது இவர் பிட்னஸ் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல இவரை கலாய்த்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஒரு நெட்டிசன் ஒருவர், "கொடுமைடா சாமி, பிட்டா இருந்து ஸ்டேட்டஸ் போட்டா ஓகே ,ஆனா இப்படி கர்ப்பமான பன்னி மாதிரி இருந்துட்டு முடியல "என்று உருவ கேலி செய்து இருந்தார். அதற்கு பதில் அளித்த பார்வதி, "என் தொப்பை குறித்து இதுபோன்ற கேவலமான கமெண்டுகள் வரும் என்று எதிர்பார்த்தேன். பெண்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட உடல் அமைப்பை கொண்டிருக்க வேண்டும் என்று ஏன் அனைவரும் எதிர்பார்க்கிறீர்கள். இந்த அழகுக்காக அளவை யார் தீர்மானம் செய்கிறார்கள். இப்படி கமெண்ட் போட்டு இருக்கும் நபர் ஏதோ சூப்பர் பிட் ஆக இருக்கிறாரா? நான் தொடர்ந்து என்னுடைய தொப்பையுடன் தான் பதிவுகளை போடுவேன். என்னுடைய உடலை நான் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது என்னுடைய இஷ்டம். தொப்பை வைத்திருப்பதும் தொப்பையுடன் புகைப்படத்தை பதிவிடுவதும் சாதாரணமான விஷயம் தான். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் பதிவிட முடியாது. இது என்னுடைய உடல், என்னுடைய அக்கவுண்ட் மற்றும் என்னுடைய விருப்பம்" என்று கூறியுள்ளார்.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications