பல படங்களில் நடித்த கலைவாணர் பேரன்.. திறமைக்கு வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் நந்தா திரைப்பட நடிகர்
சென்னை: ஆரம்ப காலகட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தன்னுடைய திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என நடிகர் கலைவாணரின் பேரன் பேசிய வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
வெள்ளித்திரையில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்து இருந்தாலும் தனக்கு அங்கே வாய்ப்பு இல்லாத நிலையில் தற்போது சின்ன திரையில் கதாநாயகனாகவும் ,இயக்குனராகவும் வாழ்ந்து வரும் ஹரிஷ் அதித்யா தன்னுடைய கடந்த கால வாழ்க்கையைப் பற்றி பேசிய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து இருக்கின்றனர்.

கலைவாணரின் பேரன்
இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியலில் இயக்குனர் ஹரிஷ் அதித்யா தன்னுடைய ஆரம்பகால சினிமா வாழ்க்கையும், அதில் கிடைத்த ஏமாற்றங்கள் அதற்குப் பிறகு அவருடைய திறமைக்கு கிடைத்த சின்னத்திரையில் வரவேற்பு பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார் .அதில் ஹரிஷ் அதித்யா எங்கே சென்றாலும் அவர் கலைவாணரின் பேரன் என்பது பலருக்கும் தெரியுமாம். ஆனால் கலைவாணர் ஹரிஷ் அதித்யாவின் அப்பாவின் தாய்மாமன் தானாம். அப்படித்தான் அவருக்கு தாத்தா முறை வருவாராம். ஆனாலும் அவருடைய பெயரை சொல்லி இவருக்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடைத்ததில்லை தன்னுடைய திறமையின் காரணமாக ஒவ்வொரு இடமாக இவர் வாய்ப்புக்காக அலைந்து இருக்கிறாராம்.

நந்தா திரைப்படத்தில் அறிமுகம்
மெடிக்கல் படிப்பை முடித்த பின்னர் வேலை செய்து கொண்டே சினிமாவில் வாய்ப்புக்காக தேடிக் கொண்டிருந்தாராம். பாலா இயக்கிய நந்தா திரைப்படத்தில் நடிப்பதற்கு மாணவர்கள் தேவைப்பட்டதால் ஆடிஷன் நடந்ததாம். மதுரையில் நடந்த ஆடிஷின் இவரும் கலந்து கொண்டாராம் .ஹரிஷ் அதித்தியா கேமராவை விட்டு விலகியே இருக்க மாட்டாராம். பக்கத்திலேயே இருப்பாராம். அதை பார்த்த பாலா அவரை அழைத்து போட்டோகிராபரிடம் இவரை ஒரு சில போட்டோக்கள் எடுக்க கூறி இருந்தாராம் .பின்னர் அந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாராம். முதல் திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் முக்கியமானதாக இருந்தது என்று மன திருப்தி அடைந்திருக்கிறார்.

கும்மாளம் திரைப்படத்தில் கதாநாயகன்
அடுத்து நான்கு நடிகர்கள் நடித்த கும்மாளம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் .இந்த திரைப்படத்திற்காக இவர் மொட்டை எல்லாம் போட்டு இருந்தாராம்.இந்த திரைப்படத்தை ரொம்பவே நம்பி இருந்த நிலையில் இவர் எதிர்பார்த்த அளவிற்க்கு அந்த திரைப்படம் வெற்றி பெறவில்லையாம். பிறகு தனுஷ் நடித்திருந்த திருடா திருடி படத்தில் கருணாஸ் நடித்த கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் இவர்தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. பின்னர் விஷால் நடித்த மலைக்கோட்டை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் .அந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது சீரியலிலும் நடக்க தொடங்கினராம்.

பாலச்சந்திரனின் பாராட்டு
முதல் சீரியலில் இவர் காதலியை நினைத்து மொட்டை போட்டு நடித்திருப்பாராம். அந்த சீரியல் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் அதிக அளவில் வரவேற்பை பெற்று பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தார்களாம். முதல் சீரியல் முடிவடைந்த பிறகு இவருக்கு சினிமாவில் ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. என்னதான் நன்றாக நடித்தாலும் ,யாரிடமும் சண்டையும் கிடையாது ஆனாலும் நடிக்க வாய்ப்பு இல்லையே என்று இவர் பீல் பண்ணி கொண்டிருக்கிறாராம். இப்ப வரைக்கும் ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கிறாரம். இயக்குனர் பாலச்சந்திரன் ப்ரொடக்ஷனில் தேன் மொழியால் என்ற சீரியலில் நடித்திருந்தாராம். இந்த சீரியலில் இவருடைய நடிப்பை பார்த்து பாலச்சந்திரன் இவரை அழைத்து பாராட்டி நெத்தியில் முத்தமிட்டது இப்ப வரைக்கும் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று என்று கூறியிருக்கிறார்.

அப்போ நடிகர் இப்போ இயக்குனர்
அதைத் தொடர்ந்து ஜெயா டிவியில் சுப்பிரமணி சீரியலில் நடித்து இருந்தாராம். அப்போது இவருக்கு ஒரு சேனலில் இரண்டு சீரியலுக்கு இயக்குனராக வாய்ப்பு கிடைத்திருக்கிறது .நடிகராக இருந்த இவர் அக்னி நட்சத்திரம் 2 மற்றும் கல்யாண பரிசு 2 போன்ற சீரியலில் இயக்கியிருக்கிறார். அதற்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான திருமகள் சீரியல் இயக்கிக் கொண்டிருக்கும்போது சில காரணங்களால் அந்த சீரியலை விட்டு விலகி வந்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியலில் இயக்கி வருகிறாராம். என்னதான் சீரியலில் நடிகராகவும், இயக்குனராக இருந்தாலும் இவருக்கு எதிர் பார்த்த அளவிற்கு திரைப்படங்களில் தனது திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கம் இருப்பதாக கூறியிருக்கிறார் .இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications