எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் உயிர்த்தோழி இவர்தானாம்... இவரும் சேர்ந்து அடித்த லூட்டியை பாருங்க!
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடிக்கும் மதுமிதாவின் உண்மையான தோழியோடு எடுத்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.
சீரியலில் வைராக்கியமான கேரக்டராக கெத்தாக வரும் ஜனனி நிஜ கேரக்டரில் துருதுருவென செய்யும் சேட்டைகளை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் இருக்கின்றனர்.
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியின் தோழியாக வரும் வசு தான் மதுமிதாவின் உண்மையான உயிர் தோழியாம்.

வசு தான் உயிர் தோழி
சின்னத்திரையாக இருந்தாலும் சரி வெள்ளி திரையாக இருந்தாலும் சரி ஒன்றாக பணிபுரிவதால் அங்கே காதலும், நட்பும் ஏற்படுவது சகஜம்தான் ஆனால் அந்த நட்பு காதல் நீண்ட நாள் தொடர்வது தான் அரிதிலும் அரிதாக இருந்து வருகிறது. அந்த மாதிரி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கதாநாயகியாக ரசிகர்களை மனதை கவர்ந்த மதுமிதா அவருடைய தோழியாக நடித்து வரும் வசு தான் அவருடைய உயிர் தோழியாம். பசுவின் உண்மையான பெயர் வைஷ்ணவி யாம் .இந்த சீரியலில் இவர்கள் இருவரும் தோழியாக நடித்துக் கொண்டிருப்பது போலவே இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இருந்து வருகின்றனர்.

வரவேற்பு பெற்ற ஜனனி கேரக்டர்
சீரியலில் பார்க்கும் கேரக்டரை அப்படியே ரசிகர்கள் மனதில் நிறுத்தி விடுவதை போலவே இவர்களுடைய கேரக்டரையும் ரசிகர்கள் நிறுத்திவிட்டனர் .அதிலும் ஒரு சில நடிகர்கள் தாங்கள் நடிக்கும் கேரக்டராக மாறி விடுவார்கள் அந்த மாதிரி தான் தற்போது கூட ஜனனி கேரக்டரில் நடிக்கும் மதுமிதா அந்த கேரக்டராகவே ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகிறார். எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகிய தொடங்கி ஒரு சில மாதங்கள் கடந்து வந்த நிலையில் தற்போது இவர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றார்.

தோள் கொடுக்கும் தோழி
எதிர்நீச்சல் சீரியலில் ஆணின் அடுக்கு முறையால் திருமணத்திற்கு பிறகு வீட்டுக்குள்ளே முடங்கி இருக்கும் பெண்கள் தங்களுடைய சுய கவுரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடித்து முன்னேறுவதை குறிக்கும் விதமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஜனனி தன்னுடைய வீட்டில் தனக்கு மரியாதையும் மதிப்பும் இல்லாததால் அந்த வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். திருமணத்திற்கு முன்பு பெற்றோரின் துணையோடு இருந்த ஜனனி திருமணத்திற்கு பிறகு கணவர் வீட்டில் தனக்கு மரியாதை கிடைக்காததால் வீட்டை விட்டு வெளியேறி வாழ்க்கையில் தன்னுடைய திறமையை நிரூபிக்க இருக்கிறார். ஜனனிக்கு துணையாக அவருடைய தோழியான வசு ஆரம்பம் முதலே இருந்து வருகிறார்.

சூட்டிங் ஸ்பாட் சேட்டைகள்
சீரியலில் இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் பலர் அவர்களுடைய நட்பை பாராட்டி வந்தனர். ஆனால் நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இருவரும் உயிர் தோழிகளாகத்தான் இருந்து வருகிறார்கள். கன்னட நடிகையான மதுமிதா தற்போது தமிழ் சீரியலில் நடித்து வரும்பொழுது அவர்களுக்கு அவருடைய உயிர் தோழியே தோழியாக நடித்து வருகிறார். இதனால் சூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் இருவரும் செய்யும் ரகலைகள் அனைவரும் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள் .கேமரா முன்பு இருவரும் அப்படியே போல்டாக இருந்தாலும் கேமரா ஆப் செய்ததும் குழந்தைத்தனமாக செய்யும் சேட்டைகளை பார்த்து சூட்டிங் ஸ்பாட் பல நேரங்களில் பதறிப் போய் இருக்கிறதாம். அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தற்போது பலர் பகிர்ந்து வருகின்றனர்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications