
சுந்தரி சீரியல் கேப்ரெல்லா நிஜ கணவர் இவர்தானாம்... ஆனால் இவர் சீரியலில் வருபவர் போல இல்லையாம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலின் கதாநாயகியான கேப்ரெல்லா தன்னுடைய கணவருடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
சீரியலில் கணவர் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று கதறி அழுது கொண்டிருக்கும் கேப்ரெல்லா நிஜ வாழ்க்கையில் அவருடைய கணவர் அவருக்கு ஒரு நண்பராக தான் இருந்து வருகிறாராம்.
5 மேட்டர்கள்.. எதுவும் பேசாமல்.. சைலன்ட் ஆன எடப்பாடி.. ஏன் என்னதான் ஆச்சு?

திறமைக்கு அழகு தேவை இல்லை
சினிமாவாக இருந்தாலும் சரி, சின்னத்திரையாக இருந்தாலும் சரி, நடிகைகள் அழகாக இருக்க வேண்டும் கலராக இருக்க வேண்டும் என்று ஒரு மாயை ரசிகர்களிடமும், நடிகர்களிடமும் தொற்றி இருக்கிறது .ஆனால் அதையெல்லாம் உடைத்து எரிந்தவர்களில் கேப்ரில்லாவும் ஒருவராக இருந்து வருகிறார். தன்னுடைய கலர் என்னுடைய திறமையை எந்த விதத்திலும் குறைவு செய்யாது என்பதை கேப்ரெல்லா பலமுறை நிரூபித்து இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் டிக் டாக் மூலமாக சமூக வலைத்தளத்தில் பல்வேறு கவிதை மற்றும் தமிழ் உச்சரிப்பின் மூலமாக இவர் டிக்டாக்கில் அதிகமான ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

கனவுக்காக வீட்டை விட்டு ஓட்டம்
தற்போது சன் டிவியில் சுந்தரியாக ரசிகர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் வாழ்ந்து வரும் கேப்ரெல்லா திருச்சியில் தான் பிறந்து இருக்கிறாராம். ஸ்கூல் படிப்பில் இவருக்கு அந்த அளவிற்கு படிப்பு ஏறவில்லையாம். அதனாலே அப்போது இருந்தே இவர் நடிப்பில்தான் நாம் போக வேண்டும் என்று நினைத்திருந்தாராம். இவர் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த பிறகு தான் அடுத்து என்ன செய்யலாம் என்று இவருக்கு இவரே கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தாராம். அப்போதுதான் படிப்பை முடித்ததும் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டாராம் வீட்டில் யாரிடமும் தன்னுடைய முடிவை பற்றி சொல்லாததால் வீட்டை விட்டு ஓடி வரும் போது இவருடைய கழுத்தில் இருந்த ஒரு செயினை அடகு வைத்து அந்த பணத்தில் தான் இவர் சென்னை வந்து சேர்ந்திருக்கிறார்.

ஆறுதல் கொடுத்த பெற்றோர்
இவர் வீட்டை விட்டு வெளியே வரும்போது மனதில் அடுத்து என்ன செய்ய போகிறோம் என்ற வைராக்கியம், இருந்தாலும் குடும்பத்தையும் ஊரையும் நினைத்து அதிகமாக பயப்பட்டு இருக்கிறார். ஏனென்றால் இவருடைய ஊர் கிராமமாம், ஒரு வீட்டில் ஒரு சின்ன பிரச்சனை என்றாலும் ஊருக்கே தெரிந்துவிடுமாம் .இவர் இவருடைய கனவு ஜெயிக்க வேண்டும் என்று வீட்டை விட்டு வெளியே வந்த நிலையில் இவரைப் பற்றி ஊருக்குள் தவறாக பேச தொடங்கிவிட்டாராம். இவர் ஓடிப் போய்விட்டார் என்று இவரோட குடும்பத்தினரிடம் பேசி அக்கம் பக்கத்தினர் வந்து வேதனையை ஏற்படுத்தி இருந்தார்களாம்.

வாழ்வில் கிடைத்த சிறந்த உறவு
ஆனால் அந்த நேரத்தில் இவருக்கு ஆறுதலாக இருந்தது இவருடைய அம்மாவும் அப்பாவும் தானாம். நாங்கள் இருக்கிறோம் நீ கவலைப்படாதே என்று சொன்ன வார்த்தையை நம்பி, மீண்டும் இவர் சென்னைக்கு வந்து தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்காக பல இடங்களில் வாய்ப்புக்காக அழைத்து இருக்கிறார். ஷார்ட் பிலிம் களில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் இவருக்கு கேமராமேனாக இருந்த இவருடைய கணவர் சுருளி அறிமுகம் ஆகி இருக்கிறார்.

உறுதுணையான கணவர் இவர்தான்
இவருடைய கனவை நினைவாக்குவதற்கு பல வகையிலும் அவருடைய கணவர் ஆரம்பத்திலேயே உறுதுணையாக இருந்திருக்கிறார். அதற்கு பிறகு தான் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு இருக்கிறது. இவர்கள் இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பிரம்மாண்டமாக திருமணத்தை செய்து இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு கேப்ரெல்லாவிற்கு எவ்வளவோ பிரச்சனை ஏற்பட்டாலும், அவருடைய கணவர் தான் உறுதுணையாக இருந்து வருகிறார். குறிப்பாக இவர் பொள்ளாச்சி சம்பவத்தை நடித்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அது பல்வேறு நெகடிவ் கருத்துக்களை பெற்றிருந்தது. அந்த சமயத்தில் இவருடைய கணவர் தான் இவருக்கு சப்போர்ட்டாக இருந்திருக்கிறார். தற்போது வரைக்கும் தன்னுடைய கணவர்தான் தனக்கு சப்போர்ட் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் இவருடைய திருமண புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் இவர் பகிர்ந்து இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.