ஆலியாவின் கடினமான விடா முயற்சி.. இவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்த வெற்றி.. பாராட்டி கணவர் கொடுத்த கிப்ட்
சென்னை: சின்னத்திரை நடிகை ஆலியா சமீபத்தில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது அவர் மீண்டும் சீரியலுக்கு கதாநாயகியாக நடிக்க இருக்கும் நிலையில் தன்னுடைய உடல் எடையை வெகு விரைவில் கடினமாக குறைத்து இருக்கிறார்.
சுமார் இரண்டு மாதங்களில் 10 கிலோ உடல் எடையை குறைத்த ஆலியா மானசாவிற்க்கு அவருடைய கணவர் பரிசு கொடுத்து உற்சாகமூட்டி இருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

முதல் சீரியலில் காதல் திருமணம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலமாக சின்னத்திரையில் ராணியாக வலம் வந்து கொண்டிருந்த ஆலியா மானசா முதல் சீரியலில் இந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை ஆரம்பத்தில் எதிர்பார்த்திருக்கவே மாட்டார். முதல் சீசன் ராஜா ராணி சீரியலில் செம்பா கேரக்டரில் இளைஞர்களின் மனதை கவர்ந்த ஆலியா மானசா அதே சீரியலில் அவரோடு கதாநாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்த திருமணம் செய்து கொண்டார்.

திருமணமும் முதல் குழந்தையும்
சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் இரு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுடைய திருமணத்திற்கு இரு வீட்டிலும் ஆரம்பத்தில் சம்மதிக்காமல் இருந்திருக்கின்றனர் .பின்பு சஞ்சீவ் வீட்டில் இவர்களுடைய திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து ஆலியா மானசாவின் திருமணம் குடும்பத்தினர் மற்றும் பிரபலங்களின் முன்னிலையில் வெகு விமர்சனமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் ராஜா ராணி சீரியலில் இருவரும் ஜோடியாக நடித்தனர். ஆனால் சில நாட்களில் அந்த சீரியல் முடிவடைந்தது. அந்த நேரத்தில் ஆலியா மானசா முதல் குழந்தை பெற்றெடுத்தார்.

முன்மாதிரியாக மாறிய ஆலியா
முதல் குழந்தை பிறந்த பிறகு உடல் எடை அதிகரித்து விட்ட ஆலியா மானசா உடம்பை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து ராஜா ராணி இரண்டாவது சீசனில் நடித்து வந்தார் .இந்த நிலையில் இரண்டாவது முறையாக இவர் கர்ப்பமாக இருப்பதால் இந்த சீரியலில் இருந்து இவர் விலகிவிட்டார். தற்போது அவருக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்து இருக்கும் நிலையில் மீண்டும் புது சீரியலில் நடிப்பதற்காக மீண்டும் பழையபடி தன்னுடைய உடல் எடையை குறைத்து வருகிறார். குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை குறைப்பதற்கு போராடிக் கொண்டிருக்கும் பலருக்கும் முன்மாதிரியாக இருந்து வருகிறார்.

கணவர் கொடுத்த பாராட்டு பரிசு
சமீபத்தில் ஒர்க் அவுட் தொடங்கி இருந்த ஆலியா மானசா இரண்டு மாதங்களுக்குள் பத்து கிலோ எடையை குறைத்து இருக்கிறாராம். அதை பாராட்டி அவருடைய கணவர் ஆன சஞ்சீவ் ஆலியாவிற்கு ஹேண்ட் பேக் ஒன்றை பரிசளித்திருக்கிறார். அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஆலியாவை பாராட்டி இருக்கிறார். என்னுடைய உண்மையான இன்ஸ்பிரேஷன் நீதான் என்றும் ஆலியாவை சஞ்சீவ் குறிப்பிட்டு இருக்கிறார் .இந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து ஆலியாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications