Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாஷிகாவின் புகைப்படத்தை வைத்து ரசிகர் செய்த செயல்.. கடுப்பாகி யாஷிகா வெளியிட்ட பதிவு

யாஷிகா ஆனந்த் தன்னுடைய புகைப்படத்திற்கு கையில் சூடம் கொளுத்தி ஆரத்தி காட்டிய ரசிகருக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாடல் அழகியாக அறிமுகமாகி பிக் பாஸ் பிரபலமாக பலருக்கும் பரிச்சயமான யாஷிகா ஆனந்த் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக வெளியிட்ட பதிவு அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

தன்னுடைய புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் கையில் சூடம் ஏற்றி வழிபட்டதை யாஷிகா ஆனந்த் கண்டித்து இருக்கிறார்.

ஏற்கனவே நடிகை குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டியது போல தற்போது யாஷிகா ஆனந்துக்கு கடவுளுக்கு நிகராக ரசிகர்கள் செய்த செயலை பார்த்து நெட்டிசன்கள் பலர் கலாய்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நானும் உங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதர் தான். அன்பை மட்டும் பரப்புவோம். நமக்கு எல்லாம் மேலே இருக்கும் கடவுளை மட்டும் வணங்குவோம் என்று அந்த ரசிகருக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

மாடல் அழகி

மாடல் அழகி

ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அதிலும் அதிகமாக கவர்ச்சியை காட்டி இளம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த நடிகை யாஷிகா ஆனந்த். ஒரு பஞ்சாப் மாடல் அழகியாகத்தான் இருந்திருக்கிறார். இவர் ஆரம்பத்தில் துருவங்கள் பதினாறு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆகி, பிறகு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தின் மூலமாக இளைஞர்களின் மனதில் தனி இடத்தை கவர்ந்து விட்டார்.

பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் பிரபலம்

யாஷிகா நடித்த படங்கள் எல்லாமே ஹாட்டான கவர்ச்சியான கதாபாத்திரங்களாக இருந்தாலும், இவர் 2017 எட்டாம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகம் ஆகி அந்த நிகழ்ச்சியின் மூலமாக அதிகமான ரசிகர்களை கவர்ந்து விட்டார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிகமான திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து வந்தாலும் அதில் எல்லாம் இவருக்கு அதிகமாக கவர்ச்சி ரோலாக தான் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் ஒரு சில சீரியல்களிலும் இவர் ஸ்பெஷல் கேரக்டராக அறிமுகமாகி ரசிகர்களை சின்னத்திரை ரசிகர்களையும் அலற விட்டிருந்தார்.குறிப்பாக ரோஜா சீரியல் போன்ற முன்னணி சீரியல்களிலும் இவர் சிறப்பு விருந்தினராக அறிமுகமாக இருந்தார்.

திடீர் விபத்து

திடீர் விபத்து

இந்த நிலையில் யாஷிகா ஆனந்திற்கு கடந்த வருடம் ஏற்பட்ட விபத்தில் இவர் உயிர் பிழைத்ததே மறு பிழைப்பு தான் என்று சொல்லும் விதத்தில் தான் இருந்தது. ஆனாலும் அவ்வளவு சோகமான நிலையிலும் இருந்து மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கே தன்னுடைய விடா முயற்சிகளும், தைரியத்தாலுமே இவர் வந்து இருந்தார். அந்த நேரத்தில் கூட இவருக்கு எதிராக நெகட்டிவ் கருத்துக்கள் அதிகமாக வந்தது. இவர் மதுபோதையில் இருந்ததாகவும், அதிகமான ஸ்பீடில் வண்டி ஓட்டியதாகவும் பல நெட்டிசன்கள் இவரை திட்டி தீர்த்தனர். அப்போதும் இவர் அவர்களுக்கு கூலாக பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

யாஷிகாவின் கண்டிப்பு

யாஷிகாவின் கண்டிப்பு

யாஷிகா ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவருடைய போட்டோ சூட் புகைப்படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் தனி வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ்களையும் வைத்திருக்கின்றனர். அதில் யாஷிகா ஆனந்தின் போட்டோ ஒன்றுக்கு ரசிகர் ஒருவர் கையில் சூடத்தை வைத்து வழிபடுவது போன்று இருக்கிறது. அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த யாஷிகா, "நானும் உங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதர் தான். அன்பை மட்டும் பரப்புவோம் .நமக்கெல்லாம் மேலே இருக்கும் கடவுளை மட்டும் வணங்குவோம்" என்று அறிவுரை கூறியிருக்கிறார். ரசிகரின் செயலை பாராட்டாமல் அறிவுரை கூறியதை தொடர்ந்து யாஷிகாவுக்கு அதிகமான வாழ்த்துக்களும் பாராட்டும் கிடைக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+