பாரதி கண்ணம்மா சீரியலை காப்பியடித்த பிரபல சீரியல்... இவ்வளவு ஒற்றுமையா.. இது ஓவர் தான்
சென்னை: என்னதான் சீரியல் என்றாலும் இப்படியா இருக்க வேண்டும் என்று தற்போது நெட்டிசன்கள் ஜீ தமிழ் சீரியலை கலாய்த்து வருகின்றனர்.
ஏற்கனவே பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா செய்ததை தற்போது ஜீ தமிழ் சீரியலிலும் தொடங்கிவிட்டார்கள் என்று சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்கள் அதிகரித்து வருகிறது.

கதைக்கு பஞ்சமா
சீரியல் என்றாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி தற்போது கதைக்கு பஞ்சமாகத்தான் இருக்கிறது. போல அதனால்தான் தற்போது ஏற்கனவே பல திரைப்படங்களின் கதைகளை சீரியலாக எடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது ஒரு சீரியலுக்கு மற்றொரு சீரியலுக்கும் இருக்கும் ஒற்றுமைகள் பல நேரங்களில் நெட்டிசன்களை கலாய்க்க வைத்து வருகிறது. வேறு வேறு சேனலில் ஒளிபரப்பானாலும் நாங்கள் விடமாட்டோம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

அடுத்த கண்ணம்மாவா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலின் கண்ணம்மா சீரியல் நெட்டிசன்களால் கலாய்க்க,அதிக அளவில் பாப்புலர் ஆனது. அது போல தற்போது அதே கதை களத்தை எடுத்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா சீரியலை கலாய்க்க தொடங்கியிருக்கின்றனர். இந்த சீரியலின் கதாநாயகி அபி கணவருடன் சண்டை போட்டுவிட்டு கர்ப்பமாக இருக்கும் நிலையில் வீட்டை விட்டு கிளம்பி கையில் பேக்கோடு தெருவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இதைப் பார்த்ததும் இது என்ன அடுத்த கண்ணம்மாவா என்று நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.

எவ்வளவு நாளைக்குத்தான் கர்ப்பமாக இருப்பார்
ஏற்கெனவே பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கணவர் பாரதியோடு சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய குழந்தையை வளர்ப்பதற்காகவும், தன்னுடைய கேரக்டரை நிரூபிப்பதற்காகவும் போராடிக் கொண்டிருப்பார். அதுபோல தற்போது அபி அவருடைய கணவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால் அவர்களுக்கு இடையூறாக தான் இருக்க வேண்டாம் என்று வீட்டை விட்டு வெளியேறி குழந்தையை நல்லபடியாக வளர்ப்பதற்காக ஒவ்வொரு போராட்டங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இவர் வருடக்கணக்கக கர்ப்பமாக இருக்கும் சீனில் நடித்து வருவதால் பலர் அதையும் கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வளவு ஒற்றுமையா
கண்ணம்மாவை கண்டுபிடிப்பதற்காக அவருடைய மாமியார், குடும்பம் என அனைவரும் சுற்றி திரிந்தது போல தற்போது அபியை கண்டுபிடிப்பதற்காக அவருடைய குடும்பமே வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறது. ஆனால் கண்ணம்மாவை போலவே அபியும் அருகில் இருந்தாலும் அவர்களின் கண்களில் மாட்டவில்லை. வயிற்றில் குழந்தையோடு கையில் பேக்கோடு இவர் ஒவ்வொரு வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறார். இதைப் பார்த்ததும் ஏற்கனவே இப்படி ஒரு கண்ணம்மாவை பாப்புலர் ஆனது போல, தற்போது அபியையும் பாப்புலர் ஆக வேண்டும் என்பதற்காக அதே பாணியை சீரியல் அணியினர் கையில் எடுத்திருக்கிறார்களா?? அல்லது அவர்களுடைய கதை மறந்துவிட்டதா??அடுத்த கதையை காப்பி அடிக்கிறார்களா??என்றெல்லாம் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications