Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதான் அரசியல் உலகம்... எஸ்.வி.சேகரின் நறுக் பதிவு

அரசியல் உலகம் என்ன என்பது குறித்து எஸ்.வி.சேகர் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா வீட்டில் நடைபெற்ற ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சியினர் குறித்து எஸ்.வி.சேகர் டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகள், நிறுவனங்களில் கடந்த வாரம் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர். இதனால் சசகிலாவின் குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் விசாரணை வளையத்தினுள் கொண்டு வரப்பட்டனர்.

 S.Ve.Shekher says about raid in Jayalalitha's Poes Garden

இதையடுத்து சசிகலா உள்ளிட்டோர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் தங்கியிருந்ததால் அங்கும் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்து ஒரு டெம்போ முழுக்க ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டன. அது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

போயஸ் தோட்டம் கோயில் என்றும், ஜெயலலிதா வாழ்ந்த இடம் கர்ப்பகிரகம் என்றும் இந்த கோயிலுக்கு ரெய்டு என்ற துன்பம் வந்துவிட்டதாகவும் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் தெரிவித்திருந்தனர். இதேபோல் டிடிவி தினகரனின் ஆதரவாளரும் கோயில், தெய்வம் என்ற கருத்தை தெரிவித்தனர்.

ரெய்டு நடத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த ரெய்டு குறித்து குற்றவாளிகள் நாடாள கூடாது என்று நடிகர் கமல் கருத்து பதிவிட்டிருந்த நிலையில் தற்போது நடிகர் எஸ்.வி. சேகரும் ஒரு கருத்தை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், திருட்டுச்சொத்தை பதுக்கினவங்களை தெய்வமாக்கி, காட்டிக்கொடுத்தவங்களை திருடனாக்கிற அரசியல் உலகம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+