ஜில்லின்னு மோர் குடிங்க.. கூப்பிட்டு கொடுத்த செல்லூர் ராஜூ.. எடப்பாடி குறித்து கூலாக சொன்ன விஷயம்!
மதுரை: தமிழகத்தின் ஹீரோ எடப்பாடி பழனிசாமி தான் டாப் மற்றவர்கள் எல்லாம் டூப் என்று மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியின் போது தெரிவித்தார்.
Recommended Video
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நல்லவர், வல்லவர், ராசியானவர். அவர் காலத்தில் தான் சரியான நேரத்தில் மழை பெய்து வருகிறது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியின் போது அதிர வைத்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கோடைக்காலத்தை முன்னிட்டு மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் வைக்குமாறு கோரியிருந்தனர்.

செல்லூர் ராஜூ
அதன்படி மதுரையில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி மதுரை பைபாஸ் ரோட்டில் நடைபெற்றது நீர் மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.

நீர் மோர் வழங்குதல்
அங்கிருந்த பொதுமக்களுக்கும் நீர்மோர், தர்பூசணி, இளநீர் உள்ளிட்டவை வழங்கி இளநீர் பருகினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கோடை காலங்களில் அதிமுக சார்பில் நீர்மோர் வழங்குவது காலங்காலமாக நடைபெற்று வருகிறது. கோவில்களில் நடைப்பாதையில் செல்லும் பொது மக்களுக்கும் நீர்மோர் வழங்கப்படுகிறது.

தேர்தலில் வெற்றி உறுதி
அதனடிப்படையில் இந்த ஆண்டும் முதலமைச்சர் துணை முதலமைச்சர் உத்தரவின்பேரில் பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது.

மற்றவர்கள் டூப்
அனைத்திந்திய அண்ணா திமுக வின் ஹீரோ எடப்பாடி பழனிச்சாமி தான் மற்றவர்கள் எல்லாம் டூப்' அவர்தான் மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து தரப்பு மக்களாலும் ஈர்க்கப்பட்டவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நல்லவர், வல்லவர், ராசியானவர். அவர் காலத்தில் தான் சரியான நேரத்தில் மழை பெய்து வருகிறது. இன்று வெயில் அடிக்கும் பொழுது கூட மழை பெய்து வருகிறது. அவர்தான் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்" இவ்வாறு கூறினார்.
-
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications