இயற்கைக்கு மாறான உறவு டார்ச்சர்.. துடித்த மனைவி.. பிரபல தொழிலதிபர் கைது
பாலியல் டார்ச்சர் தந்த தொழில் அதிபர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்
திருவனந்தபுரம்: பாலியல் சித்ரவதைக்கு 2 வருடங்களாக ஆளான பெண்ணை போலீசார் மீட்டு, அது தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளனர்.. கேரள மாநிலத்தில் இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது.
திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், 35 வயதுடைய பெண் ஒருவரை சிகிச்சைக்காக சேர்த்தனர்.. அந்த பெண் உடம்பெல்லாம் ரத்தக்காயங்கள் இருந்தன.. பார்ப்பதற்கே அவர் மிகவும் சோர்வாகவும், பயந்த நிலையிலும் காணப்பட்டார்.
உடனடியாக அவரை டாக்டர்கள் செக் செய்தனர்.. அப்போது பெண்ணின் பிறப்பு உறுப்பு உள்ளிட்ட பல இடங்களில் காயங்கள் அதிகமாக இருந்தது தெரியவந்தது...

பலாத்காரம்
இதையடுத்து, ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தந்தனர்.. குன்னம்குளம் போலீசாரும் விரைந்து மருத்துவமனைக்கு வந்து பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள்... அப்போதுதான், அந்த பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது... அதுமட்டுமல்லாமல், அவரது கணவரே நண்பருடன் சேர்ந்து இப்படி ஒரு கொடூரத்தை செய்துள்ளார் என்பதை தெரிந்து போலீசார் அதிர்ந்துவிட்டனர்.

உடலுறவு
மிக கொடூரமான முறையில் அந்த பாலியல் கொடுமை பெண்ணுக்கு அரங்கேறியிருந்ததையடுத்து, அந்த கணவரையும், அவரது நண்பரையும் போலீசார் கைது செய்தனர்... கணவர், ஒரு பிரபலமான தொழில் அதிபராம்.. மனைவியை இயற்கைக்கு மாறான முறையில், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்கு பதிவு செய்தனர் போலீசார்... மேலும், அவரது நண்பர் மீது பலாத்கார வழக்கும் பதிவு செய்தனர்.. இறுதியில் இருவரும் திருச்சூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.. இப்போது 2 பேருமே ஜெயிலில் உள்ளனர்.

தொழிலதிபர்
நடந்த சம்பவம் குறித்து பல தகவல்களை திருச்சூர் போலீஸார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.. அந்த தொழில் அதிபர் சென்னையை சேர்ந்தவராம்.. கடந்த 2 வருடங்களுக்கு மேலாகவே, மிக கொடூரமாக மனைவிக்கு பாலியல் சித்ரவதை தந்து வந்துள்ளார்.. அடிக்கடி தன்னுடைய நண்பரை வீட்டுக்கு வரவழைத்து, கூட்டு பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபட்டு உள்ளார்... அந்த பெண் இதற்கு ஆரம்பத்திலேயே மறுப்பு தெரிவித்திருக்கிறார்.. அதனால், அவரை இரும்பு சங்கிலியால் கட்டிப்போட்டு, அதற்கு பிறகு, பாலியல் வக்கிரங்களிலும், கொடூரங்களிலும் 2 பேர் ஈடுபட்டுள்ளனர்.

வீடியோ
இது எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த தொழில் அதிபரே, இதையெல்லாம் ஆபாசமாக வீடியோ எடுப்பாராம்.. அந்த ஆபாச படங்களை காட்டி மிரட்டி சித்ரவதையும் செய்திருக்கிறார்.. மனைவி எதிர்ப்பு தெரிவித்தபோது எல்லாம், செல்போனில் உள்ள ஆபாச வீடியோவை காட்டி, சோஷியல் மீடியாவில் வெளியிடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார்.. இந்த மிரட்டலால் அந்தப் பெண்ணும், அத்தனை சித்ரவதைகளையும் வெளியில் சொல்லாமல் இருந்து உள்ளார்... மனைவியின் பயத்தை, அந்த தொழில் அதிபரும், அவரது நண்பரும் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.

பிறப்புறுப்பில் காயம்
நினைத்தபோதெல்லாம், 2 பேரும் சேர்ந்தே அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர்.. நேற்று முன்தினமும் இப்படி நடந்துள்ளது.. எனவே, அந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே இது தொடர்பாக தகராறு வந்துள்ளது.. அப்போது கணவரும், நண்பரும் சேர்ந்து, பெண்ணை கடுமையாக தாக்கி உள்ளார்... அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் பீர் பாட்டிலால் காயப்படுத்தியும் உள்ளனர்... இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் கதறி அழுதுள்ளார்.. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டுள்ளனர்.

வெளிச்சத்துக்கு வந்த கொடுமை
அதற்கு பிறகுதான் சிகிச்சைக்காக மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர்... அதற்கு பிறகுதான் போலீசுக்கு இந்த விஷயம் தெரிந்து, நடந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது... கணவரால் எந்த அளவுக்கு தான் துன்புறுத்தப்பட்டேன் என்பதையும், மிருகத்தனமாக நடத்தப்பட்டேன் என்பதையும் அந்த பெண் போலீசாரிடம் அழுதுகொண்டே சொன்னார்.. அப்போதுதான், அவருக்கு மேலும் நிறைய கொடுமைகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.. இப்போதைக்கு பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கணவரும், நண்பரும் கைதாகி உள்ளனர் என்கிறார்கள் போலீசார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications