வளைகுடாவில் வெடித்த போர்.. மம்மூட்டி சொன்ன விஷயம்! மொத்த திரையுலகமும் கவனித்த பாயிண்ட்!
திருவனந்தபுரம்: வளைகுடா நாடுகளில் போர் வெடித்திருக்கும் நிலையில், மொத்த உலகமும் பதற்றத்தை எதிர்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த போர் குறித்து மலையாள நடிகர் மம்மூட்டி சொல்லியிருக்கும் விஷயம் கவனம் பெற்றிருக்கிறது.
இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் தொடர்பாக நடிகர் மம்மூட்டி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்த போரில் மனிதர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே தனது ஆசை என்றும், மனிதர்கள் இல்லாவிட்டாலும் மனிதநேயமாவது வெற்றி பெறட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொச்சியில் நடைபெற்ற இயக்குனர் டி.வி. சந்திரன் 50 ஆண்டு திரையுலக விழா 'ஓர்மாக்களுண்டாயிருக்கணம்' நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.
"எல்லா படங்களின் கதைகளும் எனக்குப் பிடிப்பதில்லை. எனக்கும் (டி.வி. சந்திரன்) பலவித சண்டைகள் நடந்திருக்கின்றன. அவற்றில் நாங்கள் இருவருமே தோற்கலாம் அல்லது ஒருவர் ஜெயிக்கலாம். இது எல்லா போர்களிலும் உண்டு. இப்போது நடக்கும் ஒரு போரில் யார் வெல்வார்?
இந்தப் போரில் மனிதர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே என் விருப்பம். மனிதகுலம் வெல்லும் என்றே நினைக்கிறேன். மனிதர்கள் இல்லாவிட்டாலும், மனிதநேயமாவது வெல்லட்டும்" என நடிகர் மம்மூட்டி தெரிவித்தார்.
மம்மூட்டியின் கடைசியாக வெளியான திரைப்படம் 'களம்காவல்'. அடுத்ததாக 'பேட்ரியாட்', 'பதயாத்ரா' ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் 'டி 55' என்ற தமிழ் படத்திலும் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முடங்கும் அமேசான் சேவைகள்? ஈரான் சரமாரி ‘அட்டாக்’.. பற்றி எரியும் பஹ்ரைனால் டிரம்புக்கு பிரஷர் -
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
“இந்தப் போரால் ஒரே ஒரு நல்லது நடக்கும்”.. ஈரான் - இஸ்ரேல் போர் பற்றி வைரமுத்து கவிதை! -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
ரூபாய் மதிப்பு 100-ஐ தாண்டுமா? ஆர்பிஐ களத்தில் இறங்கியும் பலன் கிடைக்காத நிலை! -
ஈரான் போர் காரணமாக எந்தெந்த நாட்டில் என்ன இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது தெரியுமா? லிஸ்ட் இதோ -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான்











Click it and Unblock the Notifications