திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்துல் கலாமுக்கு உதவினாரா நம்பி நாராணயன்? மாதவனின் ராக்கெட்ரி 90% பொய் - இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: நடிகர் மாதவன் நடித்து இயக்கிய ராக்கெட்ரி திரைப்படத்தில் தெரிவிக்கப்பட்ட 90% தகவல்கள் பொய்யானவை என இஸ்ரோவில் பணியாற்றிய முன்னாள் விஞ்ஞானிகள் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.

பிரபல நடிகர் மாதவன் பொய் வழக்குகளால் சிறை தண்டனை பெற்ற இஸ்ரோவின் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை கருவாக கொண்ட "ராக்கெட்ரி - நம்பி விளைவு" என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில், பொய் வழக்குகளால் நம்பி நாராயணன் அனுபவித்த இழப்புகள் மற்றும் அதிலிருந்து தான் நிரபராதி என அவர் சட்டப்போராட்டம் நடத்தி வென்றது குறித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

'பஞ்சாங்கம்' பஞ்சாயத்து நடிகர் மாதவனுக்கு மத்திய பாஜக அரசு ஆதரவு-'ராக்கெட்ரி' காட்சியை திரையிட்டது! 'பஞ்சாங்கம்' பஞ்சாயத்து நடிகர் மாதவனுக்கு மத்திய பாஜக அரசு ஆதரவு-'ராக்கெட்ரி' காட்சியை திரையிட்டது!

 வரவேற்பை பெற்ற படம்

வரவேற்பை பெற்ற படம்

கடந்த ஒன்றாம் தேதி திரைக்கு வந்த இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நம்பி நாராயணன் சந்தித்த துயரங்கள், கஷ்டங்களை இந்த படத்தில் மாதவன் காட்சி படுத்தி இருந்ததாகவும், எளிய மக்களுக்கும் புரியும் வகையில் ராக்கெட் தொழில்நுட்பம் குறித்து விளக்கப்பட்டு இருந்ததாக பலர் நல்ல விமர்சனங்களை தெரிவித்து இருந்தனர்.

சர்ச்சை பேச்சு

சர்ச்சை பேச்சு

இந்த திரைப்படம் தொடர்பாக ஜூன் மாதம் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர் மாதவன் பேசினார். அப்போது அவர், "அமெரிக்கா, ரஷியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் பல கோடிக்கணக்கில் செலவழித்து 32, 33 வது முறைதான் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோளை அனுப்பி வெற்றி பெற்றன. ஆனால், இந்தியா சிறிய எஞ்சினை வைத்துக்கொண்டு பஞ்சாங்கத்தின் உதவியுடன் 2014 ஆம் ஆண்டு செவ்வாய்கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பியது." என்றார்.

குவிந்த மீம்ஸ்கள்

குவிந்த மீம்ஸ்கள்

மாதவனின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதுகுறித்து விளக்கமளித்த மாதவன், "எனது அறியாமையை உணர்கிறேன். அல்மனாக்கை தமிழில் பஞ்சாங்கம் என்று அழைத்த நான் இதற்கெல்லாம் (விமர்சனங்களுக்கு) தகுதியானவன்தான்." என்று பதிவிட்டுள்ளார்.

இஸ்ரோ விஞ்ஞானிகள்

இஸ்ரோ விஞ்ஞானிகள்

இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் சசிகுமரன், முத்துநாயகன், இவிஎஸ் நம்பூதிரி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், "ராக்கெட்ரி திரைப்படத்தில் கூறப்பட்ட 90% தகவல்கள் தவறானவை என்று குற்றம்சாட்டி இருக்கின்றனர். ஆனால் உண்மை என நாராயணன் கூறி இருக்கிறார்.

கலாமுக்கு உதவினாரா நம்பி நாராயணன்

கலாமுக்கு உதவினாரா நம்பி நாராயணன்

இஸ்ரோவில் பணியாற்றி இந்திய குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமின் தவறை நம்பி நாராயணன் சரி செய்ததாக கூறப்பட்டிருப்பது முற்றிலும் தவறானது. இந்தியாவுக்கு கிரையோஜெனிக் எஞ்சின் தாமதமாக கிடைத்ததற்கு நம்பி நாராயணனின் கைது காரணம் என்பது பொய்யான தகவல். கிரையோஜெனிக் எஞ்சினுக்கும் நம்பி நாயாணனனுக்கும் சம்பந்தமே இல்லை. இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத்திடம் பேசியுள்ளோம்." என்றனர்.

English summary
Is Nambi Narayanan helped Abdul Kalam? Madhavan's rocketry is 90% fake - Isro scientists: நடிகர் மாதவன் நடித்து இயக்கிய ராக்கெட்ரி திரைப்படத்தில் தெரிவிக்கப்பட்ட 90% தகவல்கள் பொய்யானவை என இஸ்ரோவில் பணியாற்றிய முன்னாள் விஞ்ஞானிகள் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X