திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேரளாவின் எச்.ராஜாவே.. கம்யூனிஸ்டின் தங்கபாலுவே.. சேட்டன் என்ன அழகா மொழிபெயர்கிறார் பாருங்கய்யா!

கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி பிருந்தா காரத்தின் பிரச்சாரம் தவறுதலாக மொழிபெயர்க்கப்பட்டது பெரிய வைரலாகி ஹிட் அடித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    எம்.பி பிருந்தா காரத்தின் பிரச்சாரம் தவறுதலாக மொழிபெயர்க்கப்பட்ட வீடியோ

    திருவனந்தபுரம்: கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி பிருந்தா காரத்தின் பிரச்சாரம் தவறுதலாக மொழிபெயர்க்கப்பட்டது பெரிய வைரலாகி ஹிட் அடித்துள்ளது.

    லோக்சபா தேர்தல் பிரச்சாரம் நடந்து வருவதால் பல மாநில தலைவர்கள் வெவ்வேறு மாநிலங்களில் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். வடமாநில அரசியல் தலைவர் தமிழகத்தில் வந்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில்தான் கேரளாவில் நடந்த தேர்தல் பிரச்சாரம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. மொழிபெயர்ப்பு சொதப்பல் ஒன்று பெரிய டிரெண்டாகி உள்ளது.

    லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி - ஈபிஎஸ், ஓபிஎஸ் யோகங்கள் கை கொடுக்குமாலோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி - ஈபிஎஸ், ஓபிஎஸ் யோகங்கள் கை கொடுக்குமா

     எச்.ராஜா மொழிபெயர்ப்பு

    எச்.ராஜா மொழிபெயர்ப்பு

    தேர்தல் பிரச்சாரத்தில் மொழிபெயர்ப்பு என்றால் மக்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது கண்டிப்பாக, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாதான். பிரதமர் மோடி பேசியதையும், பாஜக தலைவர் அமித் ஷா பேசியதையும் இவர் தவறாக மொழிபெயர்த்தது, சொட்டு நீர் பாசனத்திற்கு பதிலாக சிறுநீர் பாசனம் என்று கூறியது என்று இவர் பேசியது எல்லாம் இணையத்தில் பெரிய ஹிட்.

    தங்கபாலு வைரல்

    தங்கபாலு வைரல்

    அப்போதுதான் களமிறங்கினார் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் தங்கபாலு. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கன்னியாகுமரி பேச்சை இவர் மோசமாக மொழிபெயர்த்தார். ''நீங்க என்ன வேணா பேசுங்க, நான் எனக்கு பிடிச்சதை மட்டும்தான் பேசுவேன்'' என்பது போல தவறுதலாக மொழிபெயர்த்து இருந்தார் தங்கபாலு. இது இணையத்தில் சமீபத்திய டிரெண்ட்.

    கேரளாவிலும் டிரெண்ட்

    கேரளாவிலும் டிரெண்ட்

    கேரளாவிலும் இதே டிரெண்ட்தான் தற்போது. அங்கு பிரதமர் மோடி கடந்த மாதம் பேசிய போது அம்மாநில பாஜக தலைவர் கே சுரேந்திரன் மொழிபெயர்த்தார். அந்த மொழிபெயர்ப்பு மிக மிக மோசமாக அமைந்து இருந்தது. இணையம் முழுக்க இதனால் அவர் பெரிய டிரெண்டாகி மீம் மெட்டீரியல் ஆனார். தற்போது கம்யூனிஸ்ட் கட்சியும் அதில் சிக்கி இருக்கிறது.

    என்ன நடந்தது

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா எம்.பி பிருந்தா காரத் பேச்சை கேரளாவை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஒருவர் மொழிபெயர்த்தார். இவர் பிருந்தா காரத் பேச்சை முழுக்க முழுக்க தவறாக மொழி பெயர்த்தார் என்றுதான் சொலல் வேண்டும். பிருந்தா காரத் ஒன்று சொல்ல இவர் மலையாளத்தில் வேறு ஒரு விஷயத்தை பேசிக்கொண்டு இருந்தார்.

    பொருள் கேட்டார்

    பிருந்தா காரத் பேசிய சில ஆங்கில வார்த்தைகள் அங்கு இருந்த பலருக்கும் புரியவில்லை. அவரின் உச்சரிப்பு தென்னிந்திய ஆங்கில உச்சரிப்பு போல இல்லாமல் வேறு மாதிரி இருந்தது . இதனால் திணறிப்போன அந்த நபர் கடைசியாக பிருந்தா காரத்திடமே சில வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்க தொடங்கினார். பிருந்தா காரத் கஷ்டப்பட்டு ஒவ்வொரு வார்த்தையாக மீண்டும் கூறினார்.

    அட போங்கய்யா

    அட போங்கய்யா

    கடைசியில் பிருந்தா காரத் பொறுமை இழந்து தனக்கு தெரிந்த மலையாளத்தில் சில வார்த்தைகளை பேசினார். ''எனக்கு குறைச்சு மலையாளம் அறியும்'' என்று பிருந்தா காரத் சொல்லும் அளவிற்கு இந்த மொழிபெயர்ப்பு வைரல் ஆனது. தற்போது இந்த வீடியோ இணையம் முழுக்க பெரிய ஹிட் அடித்து இருக்கிறது.

    English summary
    Kerala: Brinda Karat’s election speech got horribly translated by a CPI member - Video goes viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X