வீட்டு மாடியில் இருந்து தலைகீழாக விழுந்த தம்பி.. நெஞ்சில் தாங்கி காப்பாற்றிய அண்ணன்! நெகிழ்ந்த கேரளா
திருவனந்தபுரம்: கேரளாவில் வீட்டின் மாடியில் சுத்தம் செய்தபோது தவறி தலைகீழாக விழுந்த தம்பியை கிரிக்கெட் பந்துபோல் அண்ணன் தனது நெஞ்சில் தாங்கி பிடித்து காப்பாற்றிய சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆயிரம் முறை திட்டி ஒருவரையொருவர் தாக்கி கொண்டாலும் சரி அண்ணன்-தம்பி எனும் ரத்தபாசம் ஒருபோதும் மறைவது இல்லை. பல ஆண்டுகளாக பேசாமல் விலகி நின்றாலும் கூட அண்ணனோ, தம்பியோ தனது கண்முன்னே ஆபத்தை சந்தித்தால் பிரச்சனைகளை மறந்து ஓடோடி உதவி செய்யும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன.
அந்த வகையில் ஒரே வீட்டில் ஒரே தட்டில் உணவு சாப்பிட்டு அண்ணன்-தம்பியாக உள்ள 2 பேர் வீட்டை சுத்தம் செய்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மேல்மாடியில் இருந்து தவறி விழுந்த தம்பியை தன் நெஞ்சோடு தாங்கி பிடித்து அண்ணன் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பான விபரம் வருமாறு:

வீட்டை சுத்தம் செய்த சகோதரர்கள்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சங்கரன்குளம் அருகே உதலூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சாதிக். இவரது தம்பி ஷபீக். இவர்கள் 2 பேரும் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். வீட்டின் மொட்டைமாடியில் ஷபீக் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். அண்ணன் சாதிக் வீட்டின் முன்பு நின்றபடி சுவரில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தூய்மை பணி செய்து வந்தார்.

தவறி விழுந்த தம்பி-தாங்கி பிடித்த அண்ணன்
இந்த வேளையில் மாடியில் சுத்தம் செய்து கொண்டிருந்த ஷபீக் திடீரென்று கால்தவறி கீழே விழுந்தார். தலைகீழாக அதாவது தரையில் தலை முட்டும் வகையில் அவர் வேகமாக கீழே வந்து கொண்டிருந்தார். இதனை கீழே நின்று பார்த்த அண்ணன் சாதிக் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் தனது கையில் வைத்திருந்த தண்ணீர் டியூப்பை தூர வீசிவிட்டு கிரிக்கெட் பந்தை கேட்ச் செய்வது போல் ஷபீக்கை மார்போடு சேர்த்து அணைத்து பிடித்தார்.

காயமின்றி தப்பிய சகோதரர்கள்
இதனால் ஷபீக் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். மேலும் அவரது அண்ணன் சாதிக்கிற்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து அவர்கள் 2 பேரும் எழுந்து அங்கிருந்து வீட்டுக்குள் செல்கின்றனர். இதற்கிடையே கீழே விழுந்த ஷபிக்கை அவரது அண்ணன் சாதிக் கேட்ச் பிடித்து காப்பாற்றிய சம்பவம் வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

என்ன நடந்தது என தெரியவில்லை
இதுபற்றி ஷபீக் கூறுகையில், ‛‛நான் எப்படி மேலே இருந்து கீழே விழுந்தேன் என்பது தெரியவில்லை. கண்இமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக என் அண்ணன் என்னை காப்பாற்றி உள்ளான்''என்றார். இதுபற்றி சாதிக் கூறுகையில், ‛‛திடீரென்று என் தம்பி மாடியில் இருந்து தலைகீழாக கீழே வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அடுத்த நொடியில் அவரை கேட்ச் பிடித்து காப்பாற்றியுள்ளேன். எங்கள் 2 பேர் மட்டுமின்றி வீட்டில் இருந்தவர்களுக்கும் என்ன நடந்தது என்பது தெரியவில்லை'' என்றார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications