***அள்ளு..என் வீட்டு நாயை குளிப்பாட்ட மாட்டியா? காவலரை சஸ்பெண்ட் செய்த எஸ்பி! சாட்டையை சுழற்றிய ஐஜி!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் தான் வளர்க்கும் நாயின் கழிவுகளை அள்ள மறுத்ததோடு அந்த நாயை குளிப்பாட்ட மறுத்த தனக்கு கன்மேனாக செயல்பட்ட காவலரை பொய் குற்றச்சாட்டில் பணியிடைநீக்கம் செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் செயல் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை பெற்று வருகிறது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் முதல்வர் மினராய் விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் க்ரைம் பிரான்ச், சைபர் கிரைம் பிரிவுகள் போல கேரளா காவல்துறையில் தொலை தொடர்பு துறை என்ற பிரிவு செயல்பட்டு வருகிறது.

இந்தப் பிரிவின் காவல் கண்காணிப்பாளராக நவநீத் சர்மா ஐபிஎஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பில் தனது குடும்பத்தினுடன் வசித்து வருகிறார். மேலும் வெளிநாட்டு ரக நாய் ஒன்றிணையும் அவர் வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.

கேரளாவில் அதிர்ச்சி

கேரளாவில் அதிர்ச்சி

மாவட்ட அளவில் உயர் பதவியில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கணவன் எனப்படும் தனி பாதுகாப்பு காவலர்கள் நியமிக்கப்படுவது வழக்கம் அந்த வகையில் தொலை தொடர்புத்துறை மற்றும் ஆயுதப்படை காவலர்கள் இருவர் நவநீத் சர்மாவுக்கு கன்மேன் எனப்படும் தனி பாது காவலர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். அதில் கேரள மாநில காவல்துறையின் ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் ஆகாஷ் என்பவரும் நவநீத் சர்மாவுக்கு பாதுகாவலராக நியமிக்கப்பட்டு இருந்தார்.

நவநீர் சர்மா ஐபிஎஸ்

நவநீர் சர்மா ஐபிஎஸ்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆகாஷ் நவநீர் சர்மாவின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அவரது வீட்டில் வேலை செய்யும் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் ஆகாஷை அழைத்துள்ளார். இதையடுத்து வீட்டிற்குள் சென்ற ஆகாஷ் என்ன என கேட்டபோது நவநீத் ஷர்மா வீட்டில் வளர்க்கும் வெளிநாட்டு நாயை குளிக்க வைக்க வேண்டும் எனவும் நாய் தங்கி இருக்கும் அறையில் அதன் கழிவுகளை அகற்ற வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

நாயை குளிப்பாட்ட மறுப்பு

நாயை குளிப்பாட்ட மறுப்பு

இதனால் கபூர் கடும் கோபமடைந்த ஆகாஷ் எஸ்பிக்கு பாதுகாப்பு அளிப்பது மட்டுமே எனது வேலை நாயை குளிப்பாட்டவது இல்லை எனவே நீங்கள் சொல்வது போல நடக்க முடியாது என கூறியதோடு தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வர முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பணியாளர் இதுகுறித்து எஸ்.பி நவநீத் சர்மா விக்ரம் புகார் அளித்துள்ளார் இதனால் கடும் கோபமடைந்த அவர் தனது பிரிவில் பணியாற்றும் சார்பு ஆய்வாளர் ஒருவரை அழைத்து ஆகாஷ் தனது வீட்டில் அத்துமீறி இணைந்து தகராறு ஈடுபட்டதாக கம்பளைண்ட் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

உயர் அதிகாரி என்பதால் வேறு வழியின்றி அந்த எஸ்ஐ பொய்யான புகாரை கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ஆகாஷை எஸ்பி நவநீத் சர்மா பணியிடை நீக்கம் செய்திருக்கிறார். இந்த நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கேரள மாநில காவல்துறை அசோசியேஷன் நிர்வாகிகளிடம் ஆகாஷ் புகார் அளித்துள்ளார் இதை அடுத்து இந்த விபரம் கேரள மாநில டிஜிபியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஐஜி அதிரடி

ஐஜி அதிரடி

இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேரள காவல்துறை ஐஜி அநூப்குருவிலா ஜான்-க்கு உத்தரவிடப்பட்டது. அந்த விசாரணையில் ஆகாஷ் மீது தவறு இல்லை என அறிக்கை அளிக்கப்பட்ட நிலையில் அவரது பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டதோடு தற்போது அவர் திருவனந்தபுரம் நகர காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அதே நேரத்தில் எஸ்பி நவநீத் சர்மா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+