"கேரள சபாநாயகர், முன்னாள் அமைச்சர் என்னை படுக்கைக்கு அழைத்தனர்"- ஸ்வப்னா சுரேஷ் பரபர குற்றச்சாட்டு
திருவனந்தபுரம்: கேரளாவில் மலையாள செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த ஸ்வப்னா சுரேஷ், கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சல்களில் ரூ. 13 கோடியே 82 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு முன் இந்தியாவில் தூதரக தொடர்புள்ள எந்தவொரு கடத்தல் நிகழ்வும் நடந்ததில்லை என்பதால் இந்த தங்க கடத்தல் சம்பவம் கேரள மாநிலத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

தங்க கடத்தல் சம்பவம்
இது மட்டுமல்லாமல் இந்த தங்க கடத்தல் வழக்கில் கேரள மாநிலத்தின் முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என பல முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் தலைப்பு செய்திகளாக மாறிய இந்த தங்க கடத்தல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையினர், சுங்க இலாகா துறையினர், அமலாக்கத்துறை யினர் தனித்தனியே விசாரணை நடத்தினர்.

சிவசங்கரன் உள்பட 8 பேர்
இதில் கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானதால் இந்த வழக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன், முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஸ்வப்னா சுரேஷ் நவம்பரில் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

தன்னை படுக்கை அறைக்கு அழைத்தனர்
இந்த நிலையில் மலையாள செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த ஸ்வப்னா சுரேஷ், கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோர் பெண் பித்தர்கள். இவர்களிடம் வேலை கேட்டு செல்லும் ஏழை பெண்களை தங்களது பாலியல் பசிக்காக படுக்கை அறைக்கு அழைப்பார்கள்.

கேரள சபாநாயகரும், முன்னாள் அமைச்சரும்
என்னையும் அவர்கள் படுக்கை அறைக்கு அழைத்தனர். நான் ஒர் உயர்ந்த பதவியில் இருப்பதை தெரிந்துகொண்டும் என்னையும் அவர்கள் படுக்கை அறைக்கு அழத்தனர். எனக்கே இப்படியென்றால் சாதாரண ஏழை பெண்களின் நிலை எப்படி இருந்திருக்கும். மிக உயர்ந்த பதவியில் இருக்கும் இவர்கள் எப்படி தைரியமாக இது போன்ற கேவலமான செயல்களில் ஈடுபட முடிகிறது. இது தொடர்பாக கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோர் மீது போலீசாரும் குற்றப்புலனாய்வுத்துறையும் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினர.

கேரள முதல்வர் மீதும் குற்றச்சாட்டு
சமீபத்தில் கூட ஸ்வப்னா சுரேஷ் தான் எழுதி வெளியிட்ட 'சதியின் பத்ம வியூகம்' என்ற பெயரிலான சுய சரிதை புத்தகத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் உள்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி தாலி கட்டினார்
குறிப்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனினின் முதன்மை செயலராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு தகவலை வெளியிட்டார். மேலும் சென்னையில் உள்ள கோவிலில் வைத்து தாலி கட்டிய சிவசங்கர் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டதாகவும் தன்னை ஒருநாளும் பிரிய மாட்டேன் என சத்தியம் செய்ததாகவும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications