திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி நாய் துரத்தும் பயம் வேண்டாம்.. நாய்களை தெறித்து ஓட வைக்கும் 'மிஷின்'.. அசத்திய கேரள மாணவர்கள்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: நாட்டில் சமீபகாலமாக நாய்களால் ஏற்படும் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை நம்மிடம் நெருங்கவிடாமல் தெறித்து ஓட வைக்கும் வேற லெவல் மிஷின் ஒன்றை கேரள மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

Kerala students invented ultra sound machine which makes dog run away

அந்த இயந்திரம் உங்களிடம் இருந்தாலே போதும்.. நீங்கள் இருக்கும் திசைபக்கமே நாய் திரும்பிப் பார்க்காத அளவுக்கு அதன் திறன் இருக்கிறது.

அப்படியென்றால் இந்த இயந்திரத்தால் மற்றவர்களுக்கும் தொந்தரவு ஏற்படுமே என்று நீங்கள் நினைக்கலாம். அதுதான் இல்லை. அந்த இயந்திரத்தால் நாய்களை தவிர மற்ற எந்த உயிரினத்திற்கும் தொந்தரவு கிடையாது.

இந்தியாவில் சமீபகாலமாக தெரு நாய்கள் மனிதர்களை கடிப்பதும், அச்சுறுத்துவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் நாளொன்றுக்கு சராசரியாக குறைந்தது 20 பேராவது நாய்க் கடிக்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும், நாய்க் கடியால் ஏற்படும் ரேபிஸ் வைரஸால் தாக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அம்மாநிலத்தில் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் கேரளாவில் மாலை நேரத்திற்கு மேல் வெளியே நடமாடுவதையே மக்கள் தவிர்த்து வருகிறார்கள்.

இந்த சூழலில், தெரு நாய்களின் இந்த அச்சுறுத்தலில் இருந்து மக்களை காப்பாற்றுவது குறித்து கோழிக்கோட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி பள்ளி மாணவர்கள் ஆண்டோ ஜாய், பிரார்த்தனா கோஷ் ஆகியோர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். சுமார் 2 ஆண்டுகள் இரவு பகலாக அவர்கள் கண்விழித்து நடத்திய ஆராய்ச்சியின் பலனாக நாய்களை துரத்தும் மிஷினை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பணப் பையில் இருந்த 3 லட்சம் மட்டும் இல்லையாம்!? எதிர்பார்க்காத பல லட்சத்தோடு வெளியேறிய கதிர்!? பணப் பையில் இருந்த 3 லட்சம் மட்டும் இல்லையாம்!? எதிர்பார்க்காத பல லட்சத்தோடு வெளியேறிய கதிர்!?

அல்ட்ரா சவுண்ட் மிஷின்

பொதுவாகவே, நாய்களுக்கு கேட்கும் திறன் மிக மிக அதிகம். மனிதர்களை ஒப்பிடும் போது நாய்களின் கேட்கும் திறன் பல நூறு மடங்கு அதிகமாக இருக்கிறது. இதனால் மனிதர்களால் கேட்க முடியாத மெல்லிய ஒலி, அல்ட்ரா சவுண்ட் போன்றவற்றை கூட நாய்களால் கேட்க முடியும். இந்த அல்ட்ரா சவுண்டை மனிதர்களால் கேட்கவே முடியாது. அதன்படி, நாய்களுக்கு பிடிக்காத அல்ட்ரா சவுண்டுகளுடன் கூடிய கையடக்க இயந்திரத்தை அந்த மாணவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

தெறிந்து ஓடும் நாய்கள்

இந்த மிஷின் மிகவும் சிறியதாக இருப்பதால் இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். பைக்கில் செல்கிறீர்கள் என்றால் அதை முன் பையில் போட்டுக் கொள்ளலாம். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் என்றால் அதை பைக்குள் வைத்துக் கொள்ளலாம். பின்னர் இந்த மிஷினை நீங்கள் 'ஆன்' செய்துவிட்டு, நாய்கள் அதிகம் இருக்கும் பகுதிக்கு இரவு நேரத்தில் கூட செல்லலாம். உங்களை கண்டு நாய் தெறித்து ஓடுமே தவிர, உங்களை எந்த நாயும் நெருங்காது. தற்போது இந்த கருவியை சந்தைப்படுத்தும் விதமாக, தேசிய குழந்தைகள் அறிவியல் கண்டுபிடிப்புக்கான கருத்தரங்கில் இதை வெளியிட மாணவர்கள் ஆண்டோ மற்றும் பிரார்த்தனா முடிவு செய்தனர். இதன்மூலம் கருவிக்கான காப்புரிமையை அவர்கள் பெற முடியும்.

English summary
With the increasing menace of dogs in the country recently, students of Kerala have invented a ultra sound machine that makes them run away from us.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X