திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முகமது ரியாஸ் எனும் இடதுசாரி போராளி- பினராயி மருமகன் என்பதாலா அமைச்சர் பதவி கிடைத்தது?

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் இடதுசாரி போராளியான முகமது ரியாஸுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதை முன்வைத்து வலதுசாரிகள் வாரிசு அரசியல் என்கிற பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுக்கின்றனர். பினராயி விஜயன் மருமகன் என்கிற ஒற்றை காரணத்துக்காக மட்டுமே முகமது ரியாஸுக்கு அமைச்சர் பதவி தூக்கி தரப்பட்டதாக இந்த விமர்சனங்கள் இருக்கின்றன.

முகமது ரியாஸின் 'பூர்வோத்திரத்தை' தெரிந்துதான் இந்த வலதுசாரிகள் பேசுகிறார்களா? என்பதுதான் புரியாத ஒன்று. சரி... பினராயி விஜயனின் மருமகன் என்ற தகுதி இல்லாமல் முகமது ரியாஸுக்கு வேறு அப்படி என்னதான் தகுதி இருக்கிறது?

கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா திருமணம்.. டிஒய்எஃப்ஐ தலைவர் முகமது ரியாசை மணந்தார்கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா திருமணம்.. டிஒய்எஃப்ஐ தலைவர் முகமது ரியாசை மணந்தார்

பள்ளிக்கூட பருவம் முதல்..

பள்ளிக்கூட பருவம் முதல்..

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் Kotooli- ல் எம். அப்துல் காதர்- கே.எம். ஆயிஷ்பாய் தம்பதியினருக்கு மகனாக பிறந்த முகமது ரியாஸுக்கு இப்போது 45 வயது. ரியாஸின் தந்தை அப்துல் காதர், ஐபிஎஸ் அதிகாரி. பள்ளிக்கூட மாணவர் பருவத்தில் இருந்தே மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ, இளைஞ்ர் அமைப்பான ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) பொறுப்புகளை வகித்தவர். பின்னாளில் DYFI-ன் தேசிய தலைவராகவும் தேர்வானவர்.

2009 லோக்சபா தேர்தல்

2009 லோக்சபா தேர்தல்

இடதுசாரி கட்சியில் ஒருவருக்கு எப்படியான வாய்ப்புகள் கொடுக்கப்படுமோ அதே பாணியில்தான் முகமது ரியாஸுக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. 2009 லோக்சபா தேர்தலில் போட்டியிடும் போது ரியாஸூக்கு 33 வயதுதான். ஒட்டுமொத்த கேரளாவும் அப்போது ரியாஸை திரும்பிப் பார்த்தன. ஏனெனில் அவர் லோக்சபா தேர்தலில் எதிர்த்து களம் கண்டது முதுபெரும் காங். தலைவர் ராகவனை.. அந்த தேர்தலில் வெறும் 838 வாக்குகளில்தான் ரியாஸுக்கு தோல்வி கிடைத்தது.

சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்கள்

சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்கள்

அப்போது பினராயி விஜயன் ஒரு காம்ரேட்... சகாவு அவ்வளவுதான். இன்னமும் சொல்லப் போனால் சீனியர் தோழர். இதுதான் ரியாஸுக்கும் பினராயிக்கும் அப்போது இருந்த உறவு. இதன்பின்னர் கட்சிப் பணிகளில் தொடர்ந்து செயல்பட்ட் முகமது ரியாஸ், மத்திய பாரதிய ஜனதா அரசின் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களில் முன்னணியில் நின்றார்.

2-வது திருமணம்

2-வது திருமணம்

கடந்த 2020-ம் ஆண்டுதான் கேரளா முதல்வர் பினராயி விஜயனின் மகளை 2-வது திருமணம் செய்தார் ரியாஸ். பினராயி விஜயனின் மகளுக்கும் கூட 2-வது திருமணம். ஆம்.. பினராயி விஜயனின் மருமகன் என்ற அந்தஸ்து கிடைத்து ஓராண்டு கூட ஆகவில்லை ரியாஸுக்கு.

அமைச்சர் பதவி இயல்பான ஒன்று

அமைச்சர் பதவி இயல்பான ஒன்று

ஆனால் 30 ஆண்டுகளுக்கு மேலாக இடதுசாரி போராளி, களப் பணியாளர் என்கிற போர்க்குணத்துடனே கட்சிப் பணியாற்றியவர் முகமது ரியாஸ். தற்போதைய சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு முதல் முறையாக வெற்றியும் பெற்றார். இப்படி கட்சியில் நீண்ட அனுபவம் பெற்றவரான முகமது ரியாஸுக்கு அமைச்சர் பதவி என்பது இயல்பாகவே கிடைக்க கூடிய ஒன்றுதான். ஆனால் எதற்கெடுத்தாலும் ஏதோ ஒரு முத்திரையே பழக்கப்பட்டுவிட்ட வலதுசாரிகள், இப்போது வாரிசு அரசியல் என முத்திரை குத்துகின்றனர். முகமது ரியாஸின் இத்தனை ஆண்டுகால அரசியல் பயணத்தை இது அப்பட்டமாக கொச்சைப்படுத்துவதுதான். இந்த போக்கு ஜனநாயகத்துக்கு நிச்சயம் ஆரோக்கியமானது அல்ல!

English summary
Mohammed Riyas got Cabinet Minister post for Not only Pinarayi Vijayan’s Son-In-Law and he was CPIM Activist for last 30 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X