கேரளாவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை! பாதிப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு! எல்லையில் உட்சபட்ச கண்காணிப்பு!
திருவனந்தபுரம் : கேரளாவில் கொரோனா, சிக்குன்குனியா, பறவைக் காய்ச்சல் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் பரவ துவங்கியுள்ள நிலையில், அங்கு மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பை கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் பாதிப்பு எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறியுள்ளார்.
கொரோனாவுக்குப் பிறகு உலக மக்களை மீண்டும் ஒரு அச்சுறுத்தலில் ஆழ்த்தும் விதமாக மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு காய்ச்சல் தற்போது மேற்கத்திய நாடுகளில் மிக தீவிரமாக பரவி வருகிறது.
தற்போது ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் போன்றவற்றில் இதன் பாதிப்பு திடீரென அதிகரித்து வரும் நிலையில், கொரோனா போல மீண்டும் ஒரு பேரழிவை சந்திக்க வாய்ப்பிருப்பதாக் உலக சுகாதார நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மை பாதிப்பு
குரங்கு அம்மையானது எலி, அணில் போன்ற கொறித்துண்ணி விலங்குகளின் கடியாலோ, விலங்கின் கீறலாலோ, காட்டில் வேட்டையாடிய விலங்கின் இறைச்சியை உண்பது, குரங்கு அம்மை பாதிப்பு உள்ளவரோடு நெருங்கிய தொடர்பு, கொப்புளங்களில் இருந்து வரும் நீர் கலப்பு ஆகியவற்றால் பரவுகிறது. முதல் முதலில் குரங்குகளில் இந்த நோய் கண்டறியப்பட்டதால் குரங்கு அம்மை எனவும், மங்கி பாக்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது.

நோய் அறிகுறிகள்
விலங்குகள் மற்றும் மனிதர்கள் என பாலூட்டிகளை தாக்கும் குரங்கு அம்மை, பெரியம்மை வகை குடும்பத்தைச் சேர்ந்த குரங்கம்மை வைரசால் உண்டாகும் ஒரு தொற்றுநோய் ஆகும். காய்ச்சல், தலைவலி, உடலில் தசை வலி, நெறிகட்டுதல், களைப்பாக உணர்தல் ஆகிய அறிகுறிகள் முதலில் ஏற்படும். இதனைத்தொடர்ந்து கொப்புளம், தடிப்புகள் போன்றவை தோன்றலாம். உடனடியாகக் கவனம் செலுத்தாவிட்டால் மரணம் வரை கொண்டு செல்லும் வாய்ப்பு உள்ளது.

கேரளாவில் பாதிப்பு
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் 2 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அங்கு இருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விமான நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இதனிடையே கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பை கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் பாதிப்பு எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறியுள்ளார்.
Recommended Video

கண்காணிப்பு தீவிரம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்தவர்களுக்கு குரங்கமை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதன் காரணமாக கேரள - தமிழக எல்லைகளில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வாகனங்களில் தமிழகம் வருபவர்களிடம் காய்ச்சல், தலைவலி, குரங்கு அம்மை நோய்க்கான கை மற்றும் உடல்களில் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என சோதனை செய்கின்றனர். அவ்வாறு தென்பட்டால் உடனடியாக அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications