திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இழுத்து அணைத்து.. இண்டீசண்ட் மாணவர்! டீசண்டாக நடந்து கொண்ட அபர்ணா பாலமுரளி! இப்படி ஒரு தண்டனையா?

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம் : சூரரைப் போற்று புகழ் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் விஷ்ணு என்ற மாணவர் தவறாக நடந்து கொண்ட நிலையில் தனது தவறான நடத்தைக்கு மன்னிப்பு கேட்ட நிலையில், அதனை கல்லூரி நிர்வாகம் நிராகரித்ததுடன், அவரை கல்லூரியில் இருந்து ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து சட்டக்கல்லூரி பணியாளர் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழில் பிரபல நடிகரான சூர்யாவுடன் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து மிகப் பிரபலமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி பொம்மி கதாபாத்திரத்தை இவரை விட வேறு யாரும் அவ்வளவு அழகாக செய்திருக்க முடியாது என ரசிகர்கள் கொண்டாடினர்.

தொடர்ந்து தமிழில் அவர் நடித்த வீட்டுல விசேஷம் படமும் பெரும்பாலான ரசிகர்களிடம் அவரை கொண்டு சேர்த்தது. இதையடுத்து தமிழின் முன்னணி நாயகியாக மாறி இருக்கிறார் அபர்ணா பாலமுரளி. அவரது ரசிகர் பட்டாளமும் அதிகரித்துள்ளது.

தேசிய திரைப்பட விருதுகள்: சூர்யா, அபர்ணா, ஜி.வி. பிரகாஷ், சூரரைப் போற்று, மண்டேலா படங்கள் தேர்வுதேசிய திரைப்பட விருதுகள்: சூர்யா, அபர்ணா, ஜி.வி. பிரகாஷ், சூரரைப் போற்று, மண்டேலா படங்கள் தேர்வு

 அபர்ணா பாலமுரளி

அபர்ணா பாலமுரளி

தமிழில் நடிப்பதற்கு முன்பே மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள அபர்ணா பாலமுரளி தற்போது நடிகர் வினித் ஸ்ரீனிவாசன் உடன் தங்கம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பட குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் இந்த பட தொடர்பான பிரமோஷன் நிகழ்ச்சி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள சட்டக் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது.

 அத்துமீறிய மாணவர்

அத்துமீறிய மாணவர்

நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டு இருந்த மேடையில் நாயகன் வினித், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பட குழுவினர் அமர்ந்திருந்தனர். அப்போது மேடையில் ஏறிய மாணவர் ஒருவர் அபர்ணா பாலமுரளியுடன் போட்டோ எடுக்க முயன்றார். கையில் பூவுடன் சென்ற அவர் அதை அபர்ணா பாலமுரளிடம் கொடுக்க அவரும் அதைப் பெற்றுக் கொண்டார். அப்போது புகைப்படம் எடுக்க வேண்டும் எனக் கூறியதையடுத்து எழுந்து நின்றார் அபர்ணா பாலமுரளி.

பரபரப்பு

பரபரப்பு

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அபர்ணா பாலமுரளியின் தோள்களில் கையை போட முயன்றார் அந்த இளைஞர். ஆனால் அபர்ணா பாலமுரளி விலகிச் செல்ல மீண்டும் அவர் கையை பிடித்து இழுத்து புகைப்படம் எடுக்க முயன்றார். இதனால் அபர்ணா பாலமுரளியோடு அங்கிருந்து அனைவருமே பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இருந்தபோதும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே மீண்டும் மேடையில் ஏறி அந்த மாணவர் மன்னிப்பும் கூறினார். அவரது தீவிர ரசிகர் என்பதால் போட்டோ எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இப்படி நடந்து கொண்டேன் இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அவர் கூறினார்.

கடும் கண்டனம்

கடும் கண்டனம்

மேலும் அவரிடம் மன்னிப்பு கேட்பதாக மீண்டும் கை கொடுத்த நிலையில் அவர் அதை மறுத்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் மாணவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது மேலும் மலையாளத் திரையுலகமும் இந்த சம்பவத்தை கண்டித்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டது. இந்த நிலையில் மாணவர் தோளில் கை போடுவது சாதாரண நிகழ்வு அல்ல அது ஒரு ஆபாச செயல் என பலரும் கருத்து தெரிவித்தனர்.

சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் அபர்ணா பாலமுரளியிடம் மன்னிப்பு கேட்டது. தொடர்ந்து நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய மாணவரான விஷ்ணு தனது தவறான நடத்தைக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கல்லூரி நிர்வாகத்திற்கு விளக்கம் அளித்தார். ஆனாலும் இதனை ஏற்றுக்கொள்ளாத சட்டக் கல்லூரி பணியாளர் கவுன்சில் மாணவர் விஷ்ணுவை ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது இந்த விவகாரம் தற்போது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

English summary
When a student named Vishnu apologized for his misbehavior to actress Aparna Balamurali, the college administration rejected it and suspended her from the college for a week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X