காங்கிரஸ் மென்மையான ஹிந்துத்துவா கட்சி.. ஆனால் நாங்க அப்படியில்லை.. சொல்கிறார் சீதாராம் யெச்சூரி
திருவனந்தபுரம்: ‛‛மென்மையான ஹிந்துத்துவாவை காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது. பாஜகவை எதிர்க்கும் ஒரேசக்தி நாங்கள் தான்'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
கேரளா கொச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.
மேலும் காங்கிரஸ் கட்சி பலவீனமாகி உள்ளது. ஹிந்துத்துவாவை காங்கிரஸ் கட்சி ஆதரித்து வருவதாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக சீதாராம் யெச்சூரி கூறியதாவது:

ஹிந்துத்துவாவுடன் காங்கிரஸ்
மத்தியில் ஆளும் பாஜக கட்சி ஆஸ்எஸ்எஸ்சின் பாசிசம், ஹிந்துத்துவா திட்டத்தை முறையாகவும், வேகமாகவும் முன்னெடுத்து வருகிறது. இதனால் ஆட்சியில் இருந்து பாஜகவை அகற்றுவது மிக முக்கியமானது. சித்தாந்த ரீதியாக பாஜகவை காங்கிரஸால் எதிர்க்க முடியவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி மென்மையான ஹிந்துத்துவாவுடன் சுற்றி வருகிறது.

பலவீனமாகி உள்ளது
இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சி பலமாக இருந்தது. தற்போது காங்கிரஸ் பலவீனமடைந்துள்ளது. பாஜகவினரும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் காங்கிரஸ் கட்சி தங்களை அச்சுறுத்தும் என நினைக்கவில்லை. ஏனெனில் அந்த கட்சியில் நிலையற்ற தன்மை உள்ளது. அதன் தலைவர்கள் எப்போது வேண்டுமானாலும் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி தங்கள் கட்சியில் இணைவார்கள் என பாஜக நம்புகிறது.

எங்களுடன் இணையுங்கள்
பாஜகவை ஆட்சி கட்டிலில் இருந்து விரட்டி காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் சமரச அணுகுமுறை ஒருபோதும் தீர்வாக இருக்காது. இதனால் பாஜகவை அடக்க மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒரு அணியில் இணைந்து பெரும் சக்தியாக உருவாக வேண்டும். அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒன்றிணைக்க வலுவான இடதுசாரிகள் தேவை. பாஜகவுக்கு எதிரான போரை சுதந்திரமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் மேற்கொண்டு வருகிறது. இதனால் இடதுசாரி அமைப்புகள் எங்களுடன் இணைய வேண்டும்'' என்றார்.

இடதுசாரி ஆபத்து
முன்னதாக பிரதமர் நரேந்திரமோடி தனியார் தொலைக்காட்சியின் நேர்க்காணலின்போது இடதுசாரிகளை விமர்சனம் செய்திருந்தார். அதாவது, ‛‛இடதுசாரிகள் ஆபத்தான சித்தாந்தம் கொண்டவர்கள். அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்'' என கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சீதாராம் யெச்சூரி பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications