For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருநெல்வேலி

By Staff
Google Oneindia Tamil News

Tirunelveli map
தமிழ்நாட்டில் உள்ள 6 மாநகராட்சிகளில் நெல்லை மாநகராட்சியும் ஒன்று. 1790 ல் உருவாக்கப்பட்ட இந்த நகரம் சுமார் 6,816 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடையது. கேரள மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ள இந்த மாநகரம் விவசாயத்திற்கு மிகவும் புகழ்பெற்றது. இந்த நகரைச் சுற்றி நெல் விளைச்சல் அமோகமாக இருந்ததால் திருநெல்வேலி என்ற பெயர் அமைந்தது.

சங்க காலத்தில் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய நெல்லை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில்தான் தென் தமிழகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டை நகர் அமைந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும், பல்வேறு அரசு அலுவலகங்களுக்கும் மிகவும் பெயர் பெற்ற இடம் பாளையங்கோட்டை.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நெல்லை என்றாலே தமிழ்நாட்டு மக்களுக்கெல்லாம் ஏன் பிற மாநில மக்களுக்குக் கூட நினைவுக்கு வருவது நெய் மணக்கும் அல்வா தான். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட பலர் இங்கு கிடைக்கும் சுவைமிக்க அல்வாவை உற்சாகத்துடன் ஒரு கை பார்க்காமல் விடுவதில்லை. அல்வாவுக்குப் பெயர் போன இந்த நெல்லையில் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள் பல உள்ளன.

பொதுத் தகவல்கள்:

பரப்பளவு 87.64 சதுர கிலோ மீட்டர்
மக்கள் தொகை சுமார் 4 லட்சம்
வெப்பநிலை கோடை காலத்தில் சராசரி அதிகபட்சம் 34.8டிகிரி சென்டிகிரேட்

குளிர்காலத்தில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 21.6டிகிரி சென்டிகிரேட்

மொழிகள் தமிழ், ஆங்கிலம், உருது, தெலுங்கு, மற்றும் செளராஷ்டிரா
எஸ்.டி.டி.கோட் எண் 0462
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X