For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பார்க்க வேண்டிய இடங்கள்

By Super
Google Oneindia Tamil News

Sri Rangam Temple
83 அடி உயர மலையின் உச்சியில் உள்ள இக் கோவில், திருச்சி மக்களை மட்டுமல்லாது, நகருக்கு வரும் பிற பயணிகளையும் கவர்ந்திழுக்கும் அம்சமாக உள்ளது. பல்லவர் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது. சிறிய குகைக் கோவிலாக இருந்த இதை நாயக்க மன்னர்கள் சரியானபடி பயன்படுத்தி தற்போதுள்ள கோட்டையாக மாற்றிக் கட்டினர். மலைக் கோவிலுக்குச் செல்ல வேண்டுமானால், 437 படிகளைக் கடக்க வேண்டும். கோவிலின் உச்சியில் உள்ள பிள்ளையார் கோவில், மத வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினரையும் கவரும் விதத்தில் உள்ளது. உச்சியில் உள்ள கோவிலின் மற்றொரு முக்கிய அம்சம், தாயுமானசாமி கோவில்.

தினசரி காலை 6 மணி தல் இரவு 9 மணி வரை மலைக்கோட்டைக் கோவில் திறந்திருக்கும்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில்

திருச்சி நகரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில், காவிரி ஆற்றின் மறு கரையில், ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள ரங்கநாதசுவாமி கோவில், ஏழு சுற்றுப் பிரகாரங்கள், 21 கோபுரங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. 14-ம் நூற்றாண்டு மற்றும் 17-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது. சேரர்கள், பாண்டியர்கள்,சோழர்கள், ஹோய்சாளர்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோரின் ஆட்சியில் இக்கோவில் படிப்படியாக, கட்டப்பட்டடாக கோவில் வரலாறு தெரிவிக்கிறது.

1987-ம் ஆண்டு கட்டப்பட்ட கோவிலின் தெற்குப் பகுதியில் ராஜ கோபுரம் கட்டப்பட்டது. இதன் உயரம் 73 மீட்டராகும். இந்தியாவிலேயே மிக உயரமான கோபுரம் இதுதான். இக்கோவிலின் முக்கிய தெய்வம் விஷ்ணு என அழைக்கப்படும் பெருமாள். இருப்பினும் மத வேறுபாடுகளைக் கடந்து இஸ்லாமியர்களும் இக்கோவிலுக்கு அதிக அளவில் வருகின்றனர். விஜய நகரப் பேரரரசு வீழ்ச்சியடைந்த பிறகு அதிகளவில் இஸ்லாமியர்கள் இக்கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டதாக வரலாறு உண்டு.

கோவில் வளாகத்திலேயே தல வரலாறு உள்பட பல்வேறு அம்சங்களைக் கொண்ட அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு செல்வோர் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் குறித்த முழு வரலாறையும் அறிந்து கொள்ள டியும்.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஸ்ரீரங்கநாதசுவாமி கோவில் தேரோட்டம் நடைபெறும். கோவிலின் பல்வேறு பிரகாரங்கள் மற்றும் ஸ்ரீரங்கத்தின் தெருக்களில் விஷ்ணி தேரில் வைத்து அழைத்து வரப்படுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். டிசம்பர் மாதத்தில் வரும் லைகுண்ட ஏகாதசியன்று, ஸ்ரீரங்கம் கோவிலின் சொர்க்க வாசல் திறக்கப்படும்.

ஸ்ரீஜம்புகேஸ்வரர் கோவில்

ஸ்ரீரங்கநாதசுவாமி கோவில் கட்டப்படும் போதே, இக்கோவிலும் கட்டப்பட்டது. இது சிவன் கோவில் ஆகும். ஏழு கோபுரங்களைக் கொண்டது. நீரில் மூழ்கிய நிலையில் உள்ள சிவலிங்கம் இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.

உறையூர் வெக்காளியம்மன் கோவில்

உறையூரில் உள்ள வெக்காளியம்மன் கோவில் திருச்சி நகரின் முக்கிய கோவில்களில் ஒன்று.

சமயபுரம் மாரியம்மன் கோவில்

திருச்சியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. தமிழகத்திலுள்ள பிரபல அம்மன் கோவில்களில் இதுவும் ஒன்று. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர்.

விராலிமலை முருகன் கோவில்

விராலிமலை முருகன் கோவில் திருச்சியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு மயில்கள் சரணாலயம் உள்ளது.

வயலூர் முருகன் கோவில்

திருச்சி அருகே உள்ள, பசும் வயல்கள் நடுவே அமைந்துள்ள வயலூர் முருகன் கோவில், பார்ப்பவர் கண்களுக்கு இதமான உணர்வைக் கொடுக்கும். இக்கோவிலில் வந்து வேண்டிக் கொண்டால் எதுவாக இருந்தாலும் நிறைவேறும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உண்டு. கோவில் வளாகத்தில் காணப்படும் மயில்கள் பார்ப்பவர்கள் மனதைக் கொள்ளை கொள்ளும்.

இதர இடங்கள்

திருவெறும்பூரில் பாரத மிகு மின் நிறுவனம் (பி.எச்.இ.எல்.), பொன்மலை ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலை ஆகியவை திருச்சி நகரின் பிற அடையாளங்கள்.

கரிகால் சோழன் கட்டிய கல்லணை, சோழ மன்னர்களின் கட்டடக் கலையை உலகுக்கு எடுத்துக் காட்டி நிற்கும் ஒரு நினைவுச் சின்னம். காவிரி ஆற்றின் குறுக்கே, கம்பீரமாக நிற்கும் கல்லணை, திருச்சி நகருக்கு அழியாப் புகழைக் கொடுத்துள்ளது.

திருச்சியிலிருந்து அரை மணி நேரப் பயண தூரத்தில் உள்ள மற்றொரு சுற்றுலாஸ்தலம், முக்கொம்பு. திருச்சி வருபவர்கள் இங்கு செல்லாமல் இருக்க முடியாது என்ற அளவில் அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய வகையில், முக்கொம்பு உள்ளது.

ஆடி மாதத்தில் காவிரி ஆற்றில் குளித்து புனிதநீராடும் ஆடிப்பெருக்கு, திருச்சி மற்றும் பக்கத்து மாவட்டமான தஞ்சாவூரில் பிரபலமானது. திருமணமான புதுமணத் தம்பதிகள், திருமணம் விரைவில் நடக்க வேண்டி வரும் இளம் பெண்கள் ஆகியோர் இங்கு ஆடி மாதத்தில் வரும் ஆடிப் பெருக்கின்போது நீராடினால் வேண்டியது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

திருச்சி நகரில் கல்வி வசதிகள் சிறப்பான வகையில் உள்ளன. பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கம்ப்யூட்டர் துறை பிரபலமானது. இது தவிர, பிராந்திய பொறியியல் கல்லூரி, தேசியக் கல்லூரி, ஜமால் கமது கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, புனித ஜோசப் கல்லூரி, உரு தனலட்சுமி கல்லூரி, ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி, சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி ஆகிய கல்லூரிகள் பிரபலமானவை.

திருச்சியைச் சுற்றி...

திருச்சியைச் சுற்றிலும் பல சுற்றுலாஸ்தலங்கள், கோவில்கள், வரலாற்றுச் சிறப்புடைய இடங்கள் ஏராளமாக உள்ளன.

தஞ்சாவூர்

தமிழகத்தின் நெற்களஞ்சியம் எனப்படும் தஞ்சாவூர், திருச்சியிலிருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சோழர்களின் தலைநகராக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை விளங்கியது. பஞ்சம் காணாத பூமி தஞ்சைத் தரணி என்ற பெயர் இந்த நகருக்கு உண்டு. காவிரித் தாயின் கருணையால், மூன்று போக விவசாயத்தை அக்கால விவசாயிகள் செய்தார்கள் என்று வழக்கு உண்டு.

சரஸ்வதி மஹால் நூல் நிலையம், தமிழ்ப் பல்கலைக் கழகம் போன்றவை தஞ்சை நகரின் அடையாளங்கள். சரபோஜி மன்னர்கள் காலத்தில் தஞ்சையில் கலை தழைத்தோங்கியது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை முன்பு தனி சமஸ்தானமாக விளங்கியது. இப்போது தனி மாவட்டமாக இருக்கிறது. தொல்பொருள் துறையினர் மற்றும் வரலாற்றியல் நிபுணர்களுக்கு பல்வேறு சுவையான தகவல்களைத் தரும் களஞ்சியமாக புதுக்கோட்டை விளங்குகிறது. சங்க காலப் பாடல்களில் இடம் பெற்ற பெருமையைக் கொண்டது புதுக்கோட்டை.

கண்ணைக் கவரும் கம்பீரமான அரண்மனைகள், குளங்கள், கால்வாய்கள் ஆகியவை புதுக்கோட்டையின் அடையாளங்கள்.

கங்கைகொண்ட சோழபுரம்

கங்கை ஆற்றங்கரை மன்னர்களை வென்ற பிறகு அதன் நினைவாக தலாம் ராஜேந்திர சோழ மன்னன் நிர்மாணித்த நகரமே, கங்கை கொண்ட சோழபுரம். இக்கோவிலின் சிறப்பு அம்சம், பிரமாண்டமாக அமை ந்துள்ள நந்தி சிலை. இது தவிர, நடனமாடும் கணேசர் சிற்பம், சிங்கத் தலை வடிவில் அமைந்த கிணறு, சிவன் மற்றும் பார்வதி ஆகியேர், ராஜேந்திரனுக்கு முடிசூட்டுவது போன்ற சிற்பங்கள், அக்கால கட்டடக் கலையின் சிறப்பை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளன.

சித்தன்னவாசல்

கிபி.. 2-வது நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த ஜெயின் மத குடவரைக் கோவில். அஜந்தா குக்ை கோவிலின் ஓவியங்களை பிரபதிபலிக்கும் வகையிலான பல ஓவியங்களை இங்கு காணலாம். விலங்குகள், மீன், வாத்துக்கள், குளத்தில் தாமரைப் பூக்களை சேகரிக்கும் மக்கள் ஆகிய சிற்பங்கள் பாண்டியர் காலத்தைப் பிரதிபலிக்கின்றன. சித்தண்ணவாசல் கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பல பண்டைய இடங்கள் மூழ்கிக் கிடப்பதாக தொல் பொருள் துறையினர் தெரிவித்துள்ளனர். இவற்றை அகழ்ந்தெடுத்தால் மேலும் பல அற்புதங்களை நாம் பெற முடியும்.

ஆவுடையார் கோவில்

94 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆவுடையார் கோவில். பழம்பெறும் ஆத்மநாபசாமி கோவில் இங்கு உள்ளது. கோவிலின் மேற்கூரை, கிரானைட் கற்களால் வேயப்பட்டது. ஆளுயர சிலைகள் காண்பவர் மனதில் பக்தியைக் கூட்டும். கி.பி. 10-வது நூற்றாண்டின்போது இக்கோவில் கட்டப்பட்டது.

கொடும்பாளூர்

கொடும்பாளூர் புதுக்கோட்டையிலிருந்து 36 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்சியிலிருந்து 42 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இங்கு முன்பு மூன்று கோவில்கள் இருந்தன. இப்போது, 2 கோவில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. கி.பி. 10-வது நூற்றாண்டின்போது, பூதி விக்ரமகேசரி இக்கோவிலைக் கட்டினார். இக்கோவிலில் கஜசமரமூர்த்தி, அர்ததநாரிஸ்வர், கங்காதரமூர்த்தி ஆகிய தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன. அக்கால சிற்பக் கலையின் சிறப்பை இது எடுத்துக் காட்டும் வகையில் உள்ளது

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X