உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. மீண்டும் ஆரம்பிக்கும் மழை.. 20 ஆம் தேதி முதல் வெளுக்கப் போகுது
சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் வரும் 20 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலை நிலவி வருகிறது. சென்னை உள்பட வட மாவட்டங்களில் வழக்கத்தை விட பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று அதிகாலையிலும் பனியின் தாக்கம் சென்னையில் அதிகமாக இருந்தது. வரும் நாட்களிலும் பனியின் தாக்கமும் இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

20 ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு
பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகக்கூடும்.
16-02-2026 முதல் 19-02-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 20-02-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். 21-02-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பனிமூட்டம் பற்றிய முன்னறிவிப்பு
16-02-2026 முதல் 20-02-2026 வரை: வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் 16 ஆம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 17 ஆம் தேதி அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
16-02-2026 மற்றும் 16-02-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும். 17-02-2026 முதல் 19-02-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.
சென்னையில் இன்று கிளைமேட் எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (16-02-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
15-02-2026 முதல் 18-02-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. 19-02-2026: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
15-02-2026: தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
16-02-2026: தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
17-02-2026 முதல் 19-02-2026 வரை: தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்: 15-02-2026 முதல் 19-02-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். என்று கூறப்பட்டுள்ளது.
-
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications