Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாசில்தார், விஏஓ லஞ்சம்! இதோ கண்ணாடி துண்டால் திண்டுக்கல் SI "கிளாஸ்" ஆட்டம்.. அரசு ஊழியர்களே இப்படி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாசில்தார், விஏஓ என முக்கிய பொறுப்புகளில் உள்ள அரசு ஊழியர்கள் லஞ்ச புகாரில் கைதாகி வரும் நிலையில் காவல்துறையிலும் இந்த லஞ்சம் ஆங்காங்கே நீடிக்கவே செய்கிறது. இதோ திண்டுக்கல் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர், பிடிபட்ட தருணத்தில் தடயங்களை அழிக்க முயன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?

திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் கலையரசன் (வயது 36). இவர் சமீபத்தில்தான் நிலக்கோட்டையில் இருந்து பணி மாறுதலாகி திண்டுக்கல் தாலுகா நிலையத்திற்கு வந்துள்ளார்.

Tahsildar VAO Dindigul SI Government Officials Corruption

மனமகிழ் மன்றம்

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்தவர் சுகுமார் (வயது 52). இவர் திண்டுக்கல் - பழனி புறவழிச்சாலையில் "மனமகிழ் மன்றம்'" என்ற பெயரில் தனியார் பார் நடத்தி வருகிறார். இந்த பாரை எந்தவிதமான இடையூறுமின்றி தொடர்ந்து நடத்துவதற்கு உதவி ஆய்வாளர் கலையரசன், சுகுமாரிடம் மாதா மாதம் 10 ஆயிரம் ரூபாய் மாமுலாகத் தர வேண்டும் என்று வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு சுகுமார் மறுப்பு தெரிவிக்கவே, அவரை மிரட்டிய கலையரசன், இறுதியாக மாதம் 7 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகத் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். போலீஸ் அதிகாரியின் இந்தத் தொடர் தொந்தரவு பொறுக்க முடியாமல், சுகுமார் இது குறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.

ரூ-7000 லஞ்சம்

புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரு திட்டத்தைத் தீட்டினர். அதன்படி, ரசாயனம் தடவிய 7 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சுகுமாரிடம் கொடுத்து அனுப்பி, கலையரசனிடம் கொடுக்கச் சொன்னார்கள்.

கலையரசனும் அந்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி நாகராஜன், இன்ஸ்பெக்டர்கள் பழனிசாமி, ரூபா கீதா ராணி தலைமையிலான போலீசார், கலையரசனைச் சூழ்ந்து கையும் களவுமாகப் பிடித்தனர்.


தடயத்தை அழிக்க முயன்ற போலீஸ் அதிகாரி

பிறகு அவரைப் பலத்த பாதுகாப்புடன் தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். லஞ்சம் வாங்கியதை உறுதி செய்வதற்காக ரசாயனக் கலவை (Phenolphthalein test) தயார் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

இந்த விசாரணையின் போது, திடீரென பிடிபட்ட ஆத்திரத்திலும் அவமானத்திலும் இருந்த கலையரசன், லஞ்சப் பணத்தை தொட்டதற்கான தடயத்தை அழிக்கும் நோக்கில், அங்கிருந்த ரசாயனக் கலவை வைக்கப்பட்டிருந்த கண்ணாடி டம்ளரை அடித்து நொறுக்கினார். சிதறிய கண்ணாடித் துண்டுகளால் தனது இடது கையைக் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கும் முயன்றார். இதில் அவருக்கு பலத்த ரத்த காயம் ஏற்பட்டது.

இதனைச் சற்றும் எதிர்பாராத டி.எஸ்.பி நாகராஜன், கலையரசன் கையை அறுத்துக்கொள்வதைத் தடுக்கப் போராடினார். அப்போது உடைந்த கண்ணாடித் துண்டு குத்தியதில் டி.எஸ்.பி நாகராஜனின் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக சக போலீசார் கலையரசனைத் தடுத்து நிறுத்தினர்.

முதலுதவி சிகிச்சை

ஸ்டேஷனுக்கு விரைந்து வந்த மொபைல் ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர், காயமடைந்த கலையரசன் மற்றும் டி.எஸ்.பி நாகராஜன் ஆகியோருக்கு காவல் நிலையத்திலேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் முன்னிலையிலேயே காவல் உதவி ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்று, டி.எஸ்.பியை காயப்படுத்திய இந்தச் சம்பவம் திண்டுக்கல்லில் காட்டுத்தீயாகப் பரவியது. காவல்துறையைச் சேர்ந்த ஒருவரே இத்தகைய ஊழல் புகாரில் சிக்கி, வன்முறையில் ஈடுபட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாசில்தார், விஏஓ

சமீப காலமாகவே, தாசில்தார், விஏஓ, என ஏற்கனவே அரசு ஊழியர்கள் லஞ்ச புகாரில் கைதாகி வரும்நிலையில், மின்துறை,காவல்துறையிலும் இதுபோன்ற லஞ்ச சம்பவங்கள் அதிகரித்துள்ளது பொதுமக்களை மேலும் அதிர வைத்து வருகிறது

அரசுத்துறைகளில் வேரூன்றி இருக்கும் இந்த லஞ்சக் கலாச்சாரத்தை வேரறுக்க, அனைத்து அரசுப் பணிகளையும் முழுமையாகத் தானியங்கி டிஜிட்டல் மயமாக்கி, பொதுமக்கள் நேரடியாக அதிகாரிகளை சந்திக்க தேவையில்லாத சூழலை உருவாக்க வேண்டும். அத்துடன் ஊழல் புகாரில் சிக்கித் தண்டிக்கப்படும் ஊழியர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அவர்களுக்கு பணிநீக்கம் உள்ளிட்ட கடும் தண்டனைகளைத் தாமதமின்றி வழங்கினால் மட்டுமே நிர்வாகத்தில் நேர்மையும் பயமும் நிலைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+